கற்றுக்கொண்ட காரியங்களை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?
1.“தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டிற்கு எல்லா நான்கு நாட்களும் நாம் ஆஜராக இருந்தது என்னே ஒரு மகிழ்ச்சி! மெய்யாகவே ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி நிரலும் உற்சாகமூட்டுதலாலும், மிகுதியான அளவில் தெய்வீக நியாயத்தையும் நீதியையும் வெளிக்காட்டுவது எப்படி என்பதன் பேரில் கொடுக்கப்பட்ட நடைமுறையான ஆலோசனைகளாலும், நிரம்பி வழிந்தது. இப்பொழுது நீங்கள் உங்களுடைய வழக்கமான அன்றாட வேலைகளில் ஈடுபட உங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டிருக்க, காதால் கேட்டு கற்றுக் கொண்ட காரியங்கள் மற்றும் கண்களால் பார்த்த நடிப்புகள் ஆகியவற்றை கடைபிடிக்கிறீர்களா? (பிலி. 4:9) மாநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருந்து முக்கிய குறிப்புகள் சிலவற்றை விமர்சிப்பது, பயனுள்ளவையாக இருக்கும்.
2.வியாழக்கிழமை பிற்பகல் “சமநிலையான, எளிமையான, வாழ்க்கை நடத்துங்கள்” என்று கொடுக்கப்பட்ட பேச்சை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அது மத்தேயு 6:19-33-ல் உள்ள இயேசுவினுடைய அறிவுரையின் பேரில் சார்ந்த பேச்சாக இருந்தது. படிப்பதற்காக, கூட்டங்களுக்கு தயாரிப்பதற்காக, மேலும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக, அதிக நேரத்தை செலவிட, தேவையற்ற காரியங்களின் சுமையை உங்களிடமிருந்து அகற்றுவதற்கு, என்ன செய்யலாம் என்பதை காண நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தீர்களா? உங்களுடைய சிக்கல்களை குறைத்து ஆவிக்குரிய காரியங்களில் அதிகமான ஈடுபாடு கொள்ளுவதற்கு வழி உண்டுபண்ணக்கூடிய, எளிய வாழ்க்கையை நடத்த தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன சரிமாற்றங்களை செய்யலாம்? கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுவது வாழ்க்கையின் கவலைகளை குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
3.“சிட்சையை ஏற்று ஞானவானாகு” என்ற பேச்சு யெகோவா தம்முடைய வார்த்தை தமது அமைப்பு ஆகியவற்றின் மூலம் கொடுத்துவரும் எல்லா பயிற்சியிலிருந்தும் நாம் நன்மையடைய வேண்டிய அவசியத்தை வலியுருத்திக் காண்பித்தது. ஒருவர் முக்கிய கவனம் செலுத்த வெண்டிய ஒரு அம்சமானது, அவர்கள் தங்களுடைய ஊழியத்திற்கு மெருகிட வேண்டும் மேலும் அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும். சிபார்சு செய்யப்பட்டிருக்கும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை ஒழுங்காக பயன்படுத்தி, வீட்டுக்காரருடன் பைபிள் உரையாடலில் ஈடுபடுகிறோமா? அல்லது சுருக்கமான பத்திரிகை அளிப்போடு நாம் திருப்தி அடைந்துவிடுகிறோமா? நியாயங்கள் புத்தகத்தை பயன்படுத்துவதன் பேரில் கொடுக்கப்படும் அறிவுரைகளையும் யோசனைகளையும் பின்பற்றி ஆர்வமுள்ள ஆட்களை திரும்ப சந்தித்து பைபிள் படிப்புகளை நடத்துகிறோமா?—நீதி. 8:33.
4.வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் “மனதிலும் உடலிலும் சுத்தமாயிரு” என்ற பேச்சும் அடங்கியிருந்தது. கடவுளுடைய ஜனங்கள் ஆவியிலும் ஒழுக்கத்திலும் மனதிலும் உடலிலும் சுத்தமுள்ளவர்களாக இருப்பதை தெய்வீக நீதி கேட்கிறது. (2 கொரி. 7:1) இந்த முக்கியமான விஷயத்தில் நீங்கள் எதைக் கற்றுக்கொண்டீர்களோ அதை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா? எப்படி? இந்த உலகத்தின் அசுத்தமான மதங்களிலிருந்தும் விசுவாச துரோகிகளிடமிருந்தும் நாம் நம்மை பிரித்து வைத்துக்கொள்ளுவதன் மூலம் நாம் நமது ஆவிக்குரிய தூய்மையை காத்துக் கொள்ளுகிறவர்களாயிருப்போம். மனம் மற்றும் ஒழுக்கசம்பந்தமான அசுத்தங்களுக்கு வழிநடத்தக்கூடிய, அசுத்தமான சிந்தனை பழக்கங்களையும், மனம் சீராட்டக்கூடிய தவறான பாலுறவு ஆசைகளையும், தவிர்க்க வேண்டுமானால், மனதை சிட்சிப்பது அவசியம். (யோபு 31:1, 9-11) உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் கரைப்படுத்தும் செல்வாக்கைக் கொண்டிருக்கக்கூடிய திரைப்படங்களை, டிவி நிகழ்ச்சிகளை, அல்லது வாசிக்கும் விஷயங்களை தவிர்ப்பதற்கு, உறுதியான நடவடிக்கை எடுத்துவிட்டீர்களா? ஒரு சிலர் தங்கள் வீடுகளில் தனிப்பட்ட சுகாதாரத்தையும், சீரொழுங்கையும் அலட்சியம் செய்துவிட்டிருக்கின்றனர் என்பதும்கூட சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அம்சத்தில் யாருக்காவது பலவீனமிருந்தால், சரீர பிரகாரமான சுத்தத்தை உறுதியாக கடைபிடிப்பதற்காக தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் நிச்சயமாகவே சரிமாற்றங்கள் செய்யப்படலாம். ஒரு வீட்டின் சுத்தத்தையும் ஒழுங்கையும் காத்துக்கொள்ளுவதற்கு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக, வெளி ஊழியத்தில் நாம் யெகோவா தேவனை பிரதிநிதித்துவம் செய்கையில் நேர்த்தியான சிகை அலங்காரத்தோடும், நேர்த்தியும், சுத்தமும், அடக்கமான தோற்றமுள்ள ஆடைகளை அணிந்துக்கொள்ள நாம் விரும்புகிறோம். இவ்வாறாக நாம் நம்முடைய பரிசுத்தமுள்ள கடவுளை கனப்படுத்துகிறோம்.—1 பேதுரு 1:14-16.
5.நமது நம் ராஜ்ய ஊழியத்தின் அடுத்து வரும் இதழ்கள், இந்த மாநாட்டில் நாம் கற்றுக்கொண்ட தெய்வீக நீதியின் இன்னும் பல இன்றியமையாத அம்சங்களை ஞாபகப்படுத்தும். நம்முடைய அனுதின வாழ்க்கையிலும், வெளி ஊழியத்திலும், இந்த நீதியின் நியமங்களை நாமனைவரும் கடைபிடிப்பதற்கு பிரயாசப்பட்டால், இது உதவியாக இருக்கும். பைபிள் செய்திகளை காதால் இனிமையாக கேட்டு விட்டு செயற்படாமலிருக்கிற கிறிஸ்தவ மண்டலத்தை போன்றவர்கள் அல்ல, “கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாயிருப்பதிலிருந்து” கிடைக்கும் மிகுதியான சந்தோஷத்தையும் தனிப்பட்ட நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.—யாக். 1:22-25; எசே. 33:32.