நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பழைய பிரசுரங்களோடு
1 கடவுளை வணங்குவதற்கான தீர்மானத்தைச் செய்வது, அத்தியாவசியமானது. அது ஜீவனைக் குறிக்கிறது. ஆகவே திருத்தமான அறிவை அடைவதும் அதைப் பொருத்திப் பிரயோகிப்பதற்கான ஞானத்தை அடைவதும் பயனுள்ள இலக்காக இருக்கிறது.—நீதி. 23:23; யோ. 17:3.
2 திருத்தமான அறிவை அடைவதற்கும் ஞானத்தில் வளருவதற்கும், நாம் ஊக்கமாக கடவுளுடைய வார்த்தையை படிக்க வேண்டும். இந்த ஒரு முறையில் நாம் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும், நினைப்பூட்டுதல்களையும், அறிவுரைகளையும் நன்கு அறிந்து கொள்ள முடியும். தம்முடைய ஜனங்களோடு யெகோவாவின் தொடர்புகள் பற்றிய சரித்திரத்தின் பேரிலும் நாம் தியானிப்பது அவசியம். உண்மை மனதோடு அவரை தேடக்கூடிய ஆட்களுக்கு யெகோவா அறிவையும் ஞானத்தையும் தாராளமாக அருளுகிறார். கடந்த ஆண்டுகளினூடே தம்முடைய அமைப்பின் மூலமாக, பைபிள் அறிவின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் திரளான பிரசுரங்களை அவர் அளித்திருக்கிறார். இவை யெகோவாவை இன்னும் அறியாத அநேக ஆட்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
பழைய பிரசுரங்களின் மதிப்பு
3 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நவம்பர் 1986 நம் ராஜ்ய ஊழியம் அறிவிப்புகள் இடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் 192-பக்க புத்தகங்கள் ஏதாகிலும், அதோடு நியூஸ் பிரிண்ட் தாளில் பிரசுரிக்கப்பட்டிக்கும் 192-பக்க புத்தகம் ஏதாகிலும் பயன்படுத்தப்படலாம். இந்தப் பிரசுரங்களில் ஏராளமான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. அவை மக்களுக்கு மெய்யான ஆவிக்குரிய மதிப்புள்ளதாயிருக்கக்கூடும். (மத்தேயு 5:14-16 பார்க்கவும்.) ஆகவே இந்த இரண்டு மாதங்களின்போது நம்முடைய சபையின் கையிருப்பிலிருக்கக்கூடிய எல்லா பழைய புத்தகங்களையும் விநியோகிப்பதற்குப் பிரயாசப்படுவோமாக.
4 இந்தப் பிரசுரங்களை ஆட்களுடைய கைகளில் கிடைக்கும்படி செய்ய வேண்டிய முக்கியத்துவம் பின்வரும் அனுபவத்தில் காணப்படுகிறது. சாட்சியாக இருந்த தன் மனைவியிடமிருந்து பழைய புத்தகங்களின் பிரதி ஒன்றை ஒரு மனிதன் வெகுமதியாக பெற்றான். அதுவரையிலுமாக அவன் பைபிளில் எவ்வித அக்கறையும் காட்டாதவனாக இருந்தான். அவளுடைய ஆச்சரியத்திற்கேதுவாய் ஒரே மாலையில் அந்தப் புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்து விட்டான். பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற நம்பிக்கையை அது அவனுக்குள் அந்தளவுக்கு நிலைநாட்டிவிட்டதன் காரணமாக, அடுத்த சபை கூட்டம் ஒன்றிற்கு அவன் ஆஜரானான். ஒரு பைபிள் படிப்பு வேண்டும் என்று கேட்டான். மூன்றே மாதங்களில் அவன் வெளி ஊழியத்திற்குப் போக ஆரம்பித்து விட்டான். இப்பொழுது அவன் முழுக்காட்டுதல் பெற்றவனாக இருக்கிறான்.
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்
5 கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். இந்தப் பழைய பிரசுரங்கள் பைபிள் சத்தியங்களை மேன்மைப்படுத்திக் காட்டுவதனால் நம்பிக்கையான மனநிலையோடு அதனை அளியுங்கள். என்றாலும், நீங்கள் அளிக்கக்கூடிய புதிய புத்தகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் புத்தகங்கள் பழுதடைந்து அல்லது அதன் பக்கங்கள் பழுப்பாக மாறிவிட்டிருந்தால் அவற்றை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அளிக்கக்கூடாது. ஏனெனில் இது அந்தச் செய்தியிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடக்கூடும்.
6 இந்தப் பிரசுர அளிப்பு காலப்பகுதியின் போது பயன்படுத்துவதற்காக 192-பக்க பழைய புத்தகங்களை உங்கள் சபை கொண்டிராவிட்டால், நீங்கள் வேறு ஏதாவது, 192-பக்க பிரசுரத்தை ரூ.10.00 என்ற நன்கொடைக்கு அளிக்கலாம். வெளி. 21:4-ஐ வீட்டுக்காரருடன் கலந்தாலோசித்த பின்பு பிரசுர அளிப்பை இணைப்பதற்கு மகிழ்ச்சி என்ற ஆங்கில புத்கத்தில் பக்கம் 184-க்குத் திருப்பி பாரா 3-ஐ நீங்கள் வாசிக்க விரும்பக்கூடும். அல்லது “ராஜ்யம் வருவதாக” புத்தகத்தில் பக்கம் 28-ல் உள்ள பெட்டியை கவனிக்கச் செய்யலாம்.
7 கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவை இந்தப் பழைய பிரசுரங்களைக் கொண்டு பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் நாம் அனைவரும் பலன்தரும் ஊழியத்தை அனுபவித்து மகிழ்வோமாக! நாம் யாருக்குச் சாட்சி கொடுக்கிறோமோ அவருடைய நித்திய நலனிற்கு இது வழிநடத்தும்.