நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
காவற்கோபுரத்தை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம்
1 கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசுவைப் பற்றியதுமான அறிவை நாடும்படி பைபிள் மனிதவர்க்கத்தினரை பலமாக ஊக்குவிக்கிறது. இந்த அறிவானது பொன், வெள்ளி ஆகிய இவற்றைக் காட்டிலும் அதிக விலைமதிப்புள்ளதாக இருக்கிறது. (நீதி. 8:10) ஏன்? ஏனெனில் இப்படிப்பட்ட திருத்தமான அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. (யோவான் 17:3) என்றபோதிலும் போதுமான தனிப்பட்ட முயற்சியின்றி திருத்தமான அறிவை சம்பாதிக்கவோ அதை தொடர்ந்து காத்துவரவோ முடியாது. ஆகவே, சாலொமோன் பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “அதைத் . . . தேடுவாயாகில் அப்பொழுது கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.”—நீதி. 1:7; 2:4, 5.
2 கடவுளுடைய நோக்கம் சம்பந்தப்பட்டதில் மனிதவர்க்க உலகம் இருளில் இருக்கிறது. ஆனால் மதிப்புவாய்ந்த யெகோவாவின் அறிவு அருமையான மற்றும் காலத்துக்கேற்ற கட்டுரைகள் வாயிலாக காவற்கோபுரத்தில் பிரசுரிக்கப்பட்டு நம்மிடம் வருகிறது. (ஏசா. 60:2) இந்த இன்றியமையாத தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுவதில் நாம் என்னே ஒரு சிலாக்கியத்தைக் கொண்டிருக்கிறோம்! ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது மகா பாபிலோனின் மறைவான குற்றங்களை வெளிப்படுத்தக்கூடியதும் மற்றும் அவளுடைய தண்டனைத் தீர்ப்பைத் தெரிவிக்கக்கூடியதுமான தொடர் கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் வெளியிடப்படும். (இந்திய மொழிகளில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும் வெளியிடப்படும்.)
நாம் எதைச் சிறப்பித்துக் காட்டலாம்?
3 காவற்கோபுரத்தின் ஏப்ரல் இதழ்கள் (இந்திய மொழிகளில் ஏப்ரல், மே) “மகா பாபிலோன், வேசிகளுக்குத் தாய்” என்றழைக்கப்படுபவள் யார் என்பது சிந்திக்கப்படும். (வெளி. 17:5) உங்களை அறிமுகப்படுத்தின பின்பு ஏப்ரல் 1-ம் தேதி இதழில் வீட்டுக்காரரின் ஆர்வத்தை தூண்டுவதற்கு பின்வருமாறு சொல்லலாம்: “வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தரிசனங்களாலும் அடையாளங்களாலும் முதல் நூற்றாண்டு மக்களின் ஆர்வம் தூண்டப்பட்டது. இவற்றில் மிக அதிகமான மர்மம் அடங்கிய ஒன்று வெளிப்படுத்துதல் 17 மற்றும் 18 அதிகாரங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் அந்த மகா வேசியாகிய மகா பாபிலோன். இந்த பாபிலோன் எதை அடையாளப்படுத்துகிறது? ‘ஓர் இரகசியம்—வேசியாகிய அந்த மகா பாபிலோன் யார்?’ என்ற கட்டுரையின் துணையோடு நீங்கள் பதிலைக் கண்டடைவீர்கள்.” இந்தக் கேள்வி-க்கு பதிலை சொல்லாமல் விட்டுவருவதன் மூலம் அந்த நபரின் கவனத்தை நீங்கள் கவரலாம்.
4 ஏப்ரல் 15-ம் தேதி இதழில் (இந்திய மொழியில் மே) “மகா பாபிலோன் வேசியின் பாகத்தை வகிக்கிறது” என்ற கட்டுரை ஆவிக்குரிய கருத்தில் வேசித்தனம் என்பது என்ன என்பதை விவரிக்கிறது. “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டில் கொடுக்கப்பட்ட “இழிவான பெயர்பெற்ற வேசி” என்ற பேச்சும் அதின் தீர்மானமும் அடங்கியிருக்கும். மீண்டுமாக, பின்வரும் சிந்தனைத் தூண்டும் கேள்வியைக் கேட்கலாம். இந்த மகா பாபிலோன் யார், ஏன் அவள் இப்படிப்பட்ட பலமான வார்த்தைகளால் பைபிளில் கண்டனம் செய்யப்படுகிறாள், அவளுடைய அழிவு நம்முடைய தலைமுறையையும் உங்களுடைய எதிர்காலத்தையும் எப்படி பாதிக்கும்? நேரிடையாக விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் உங்களுடைய அளிப்பை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். இதை 30 முதல் 60 வினாடிக்குள்ளாக செய்யுங்கள்.
முன்னதாக திட்டமிடுங்கள்
5 ஒவ்வொரு மாதமும் நாம் சாதாரணமாக இரண்டாம் நான்காம் சனிக்கிழமை ஊழியத்தை அறிவுறுத்துகிறோம், ஆனால் மே மாதத்தின்போது எல்லா சனிக்கிழமைகளிலும் ஊழியம் செய்வதை வலியுறுத்திக் காண்பிப்பது நல்லது. ஏனெனில் நாம் அளிப்பதற்கு இந்த முக்கியமான பத்திரிகைகள் இருக்கின்றன. பத்திரிகை நாளன்று 60 வினாடிகளுக்கு மேற்படாத சுருக்கமான அளிப்பை செய்வதில் கவனம் செலுத்துங்கள். எல்லாரும் கேட்கத்தக்க விதத்தில் எச்சரிக்கையை ஒலிப்பதற்கு காலத்துக்கேற்ற பத்திரிகையின் இந்த இதழ்களை விரிவாக விநியோகிப்பது அவசியம்.—ஏசா. 61:2; வெளி. 18:4, 5.
6 புதிய காவற்கோபுர சந்தா அளிப்பு மே மாதத்தில் தொடங்குகிறது. வாராந்தர பத்திரிகை நாளுக்காக சிபார்சு செய்யப்பட்டிருக்கும் சுருக்கமான பிரசங்கத்துக்குப் பதிலாக, சந்தா அளிக்கும்போது, நாம் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை பயன்படுத்த விரும்புகிறோம். பத்திரிகைகளுக்கு சந்தா எடுக்க விரும்பாதவர்களிடம் இந்த மாத காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களை ரூ.4-க்கு பெற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்த வேண்டும்.
7 காவற்கோபுரம் பத்திரிகையின் மேம்பட்ட மதிப்பை நாம் முற்றிலுமாக போற்றுகிறோமா? இது யெகோவாவின் நீதியான வழிகளில் மனிதவர்க்கத்திற்கு கல்வி புகட்டுவதற்கான மிக முக்கியமான ஒரு கருவியாகும். (மத். 5:6) இந்தச் சிறப்பான இதழை விநியோகிப்பதன் மூலம் நெருங்கி வந்துகொண்டிருக்கும் மகா பாபிலோனின் அழிவை தேசங்களுக்கு எச்சரிப்பதற்கான சிலாக்கியத்தை நாம் கொண்டிருக்கிறோம்.