நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்தி
1 “கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பூரணமாய் பிரசங்கித்திருக்கிறேன்.” (ரோ. 15:19) அப்போஸ்தலனாகிய பவுலின் அந்த வார்த்தைகள் பிரசங்கிப்பதற்கும், கற்பிப்பதற்கும், சீஷராக்குவதற்கும் தனக்கிருந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு தான் ஊக்கமுள்ளவனாய் இருந்தான் என்பதை காட்டுகிறது.
2 அவ்வாறே நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிராந்தியத்திலும் சாட்சிகொடுக்கும் வேலையை நாம் முழுமையாக நிறைவேற்றுகிறவர்களாயிருக்க வேண்டும். நாம் உயிர்கள் ஆபத்திலிருக்கும் அதிக நெருக்கடியான காலத்தில் வாழ்கிறோம். ஜனங்களை எச்சரிக்கத் தவறுதல் இரத்தப்பழியை நம்மீது கொண்டுவரும். (எசேக். 3:18, 19) அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்கிறேன்” என்று சொல்லக்கூடிய நிலையில் நாமுமிருக்க வேண்டும். (அப். 20:27) நம்முடைய பிராந்தியத்தை நாம் எவ்வாறு முழுமையாக செய்யக்கூடும்? வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைச் சரியாக உபயோகிப்பது உதவக்கூடும்.
யாரும் வீட்டில் இல்லாதபோது
3 வீட்டில் இல்லாத ஆட்களைப் பற்றிய முழுமையும் திருத்தமுமான ஒரு பதிவு நம்முடைய பிராந்தியத்தைத் திறம்பட்ட விதத்தில் செய்துமுடிப்பதற்கு இன்றியமையாதது. பிராந்தியத்தை எப்பொழுதாவது ஒருமுறை செய்தாலும் அல்லது அடிக்கடி செய்தாலும் இது உண்மையாக இருக்கவேண்டும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் யாரையாவது எட்டுவதற்கு நாம் விடாமுயற்சியுடன் பிரயாசப்படவேண்டும். பிரதிபலிப்பு இல்லாவிட்டால், வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் பொருத்தமான குறிப்பை எழுத வேண்டும். பின்பு திரும்பப் போய் சந்திப்பதற்கும் அந்த வீட்டாரில் யாராவது ஒருவருக்கு சாட்சி கொடுக்கவும் நாம் நிச்சயமாயிருக்க வேண்டும்.
4 முதல் சந்திப்பிலேயே வீட்டில் இல்லாத ஆட்களை எட்டுவதற்கு ஒரு சிலர் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்தி, அதே நாளில், வீட்டுக்கு வீடு ஊழியத்தை முடித்த உடனேயே திரும்பப் போய் சந்திக்கின்றனர். அல்லது வேறு ஏதாவது ஒரு நாளிலோ அல்லது வித்தியாசமான சமயங்களிலோ சந்திக்க முயலுகின்றனர். மாலை வேளைகளில் போய் சந்திப்பதுங்கூட நல்ல பலன்களை கொண்டு வருவதாக அநேகர் காண்கின்றனர். பலமுறை திரும்பப் போய் சந்தித்தும் வெற்றி கிடைக்காதபோது வீட்டிலிருந்து வெளியே போகமுடியாத நோயாளிகளை தொலைபேசியின் மூலமாக அல்லது கடிதங்கள் எழுதுவதன் மூலமாக எட்டுவதில் வெற்றியைக் கண்டிருக்கின்றனர்.
அக்கறை காண்கையில்
5 போற்றுதலுடன் கேட்போரை நீங்கள் காண்கையில் அதைப் பதிவு செய்துகொள்ளுங்கள். அந்த ஆளினுடைய பெயர், விலாசம், காண்பித்த அக்கறை, மற்றும் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உதவக்கூடிய வேறு ஏதாவது தகவல் தேவையாயிருந்தால் அதையும் எழுதிக்கொள்ளுங்கள். பலமுறை சந்தித்தப் பின்பும் அக்கறை காண்பித்தவரை உங்களால் சந்திக்க முடியவில்லையென்றால் ஒருவேளை வேறொரு நாளிலோ நேரத்திலோ சந்திப்பது உதவியாக இருக்கும். அக்கறை காண்பித்த ஒருவரை சந்திக்க எடுக்கும் முயற்சியில் விரைவில் சோர்ந்துவிடாதீர்கள்.
6 அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நல்ல முன்மாதிரியை வைத்தான். அவன் தனக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் “முழுமையாக சாட்சி பகர்ந்தான்.” நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிராந்தியத்திலும் முழுமையான சாட்சி கொடுப்பதற்கு வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைச் சரியாக பயன்படுத்துவது உதவக்கூடும். இன்னும் அநேகர் இயேசுவின் சீஷர்களாகையில் ஆ, என்னே ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டிருப்போம்! இவ்வாறாக நாம் பவுலின் வார்த்தைகளைத் திரும்பச் சொல்லுபவர்களாக இருப்போம்: “நான் எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:21, 27.