உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/90 பக். 3
  • திறம்பட்ட முன்னுரைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திறம்பட்ட முன்னுரைகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்களுடைய நோக்குநிலையை கவனியுங்கள்
  • நியாயங்கள் புத்தகத்திலிருக்கும் முன்னுரைகளை பயன்படுத்துதல்
  • நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • அடிக்கடி செய்துமுடிக்கப்பட்ட பிராந்தியத்தில் வேலைசெய்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • அக்கறையைத் தூண்டும் அறிமுகங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • பலன்தரும் முன்னுரைகள் —தயாரிப்பது எப்படி?
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 2/90 பக். 3

திறம்பட்ட முன்னுரைகள்

1 வீட்டுக்கு வீடு வேலையில் நாம் பங்குகொள்ளும்போது, நாம் தொடர்ந்து பின்வரும் கேள்வியை எதிர்ப்படுகிறோம். “முதலில் நான் என்ன சொல்லுவேன்?” வெளி ஊழியத்தில் நல்ல பலன்களை அடையும் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் உபயோகமுள்ள எண்ணிறைந்த பல யோசனைகளைத் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு சில என்ன?

2 முதலாவதாக, நாம் யாரிடம் பேசுகிறோமோ, அந்த ஆட்களிடம் மனமார்ந்த அக்கறையுள்ளவர்களாக இருப்பது முக்கியமானது. இவ்வகையான தனிப்பட்ட அக்கறை வார்த்தைகளிலும் செயல்களிலும் நடப்பித்துக் காட்டப்படுகிறது. வீட்டுக்காரருடைய நோக்குநிலையை கவனத்தில் எடுத்துக்கொள்வது முக்கியமானது. பொருத்தமான கேள்விகளை கேட்டுவிட்டு அவருடைய பிரதிபலிப்புக்கு கவனமாய் செவிகொடுங்கள். நாம் கலந்தாலோசிக்கும் பொருளை கவனிப்பதன் மூலம் தான் எப்படி தனிப்பட்ட விதமாய் பயனடையக்கூடும் என்பதை வீட்டுக்காரர் காண்பவதற்கு நாம் நிச்சயமாகவே உதவ வேண்டும்.

அவர்களுடைய நோக்குநிலையை கவனியுங்கள்

3 சீகாருக்கு அருகே ஒரு கிணற்றண்டையில் சமாரியப் பெண்ணுக்குச் சாட்சி கொடுக்கும்போது இயேசுவின் சில கூற்றுகள் அவளுக்கு விநோதமாக தொனித்தது. அவைகள் அவளுடைய சிந்தனைக்கு அல்லது அவள் வழிப்பட்டு வந்த முறைக்கு இசைவானதாக இருக்கவில்லை. இயேசு கவனமாய் செவிகொடுத்தார். பின்பு பிரதியுத்தரம் சொல்லுகையில் அவள் என்ன சொன்னாளோ அதைக் கருத்தில் கொண்டவராக இருந்தார். அவர் அவளுக்கு உதவி செய்ய விரும்பினார். (யோவான் 4:13, 14, 19-26) சாட்சி கொடுக்கும் வேலையில் நாம் பங்குகொள்ளும்போது இந்த அம்சத்தில் இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்ற பிரயாசப்படுகிறோமா?

4 உங்களுடைய முன்னுரையை கேட்டதும் “எனக்கென்று ஒரு மதம் இருக்கிறது” என்று உங்கள் பிராந்தியத்திலுள்ள ஆட்கள் பிரதிபலித்தால், நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பைபிள் எழுத்தாளன் சொன்னதாவது: “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல [தியானிக்கும், NW] யோசிக்கும்.” (நீதி. 15:28) நீங்கள் இதை செய்கிறீர்களா? நியாயங்கள் புத்தகம் பக்கம் 18, 19-ல் உள்ள தகவலை இந்த வேதவசன நியமத்தை மனதில் கொண்டவர்களாய் ஆலோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதோடு உங்களுடைய முன்னுரைகளை அதிக திறம்பட்டவையாக எப்படி ஆக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வதற்காக வெளி ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருக்கும் பிரஸ்தாபிகளுடன் ஊழியஞ் செய்யுங்கள்.

5 தங்களுக்கென்று ஒரு மதம் இருக்கிறது என்ற ஓர் எதிர்ப்பை அநேக ஆட்கள் தெரிவிக்கும் பிராந்தியங்களில், அந்தக் குறிப்பை நீங்களே முன்னதாக சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலை எதிர்ப்பார்ப்பது பயனுள்ளதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக, ஆரம்ப வாழ்த்துதலைச் சொல்லிய பின்பு நீங்கள் பின்வருமாறு சொல்லக்கூடும்: “உங்களுக்கொன்று ஒரு மதம் இருக்கிறதா? [அவர்களுடைய பதிலுக்குச் செவிகொடுங்கள்.] அப்படி இருக்கும் என்று நான் நினைத்தேன், ஏனெனில் இந்தப் பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான ஆட்களுக்கு அவ்வாறு இருக்கிறது. ஆகிலும், நான் இந்தக் காலையில் உங்களைச் சந்திக்க காரணம் . . . ” இப்பொழுது நீங்கள் பேச விரும்பும் பொருளைத் தொடருங்கள்.

6 “நான் அதிக வேலையாக இருக்கிறேன்” என்று பெரும்பாலான வீட்டுக்காரர்கள் சொன்னால் நியாயங்கள் புத்தகம் பக்கம் 19-20-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பின்பு உங்களுடைய பிராந்தியத்தின் தேவைக்கேற்ப அதைப் பொருத்திக்கொள்ளலாம். எந்த எதிர்ப்புகள் அடிக்கடி தெரிவிக்கப்படுகிறதோ அதை எதிர்ப்பார்த்தவர்களாய் இந்தப் பல்வேறு வகையான கூற்றுகளை பயன்படுத்தலாம்.

நியாயங்கள் புத்தகத்திலிருக்கும் முன்னுரைகளை பயன்படுத்துதல்

7 நியாயங்கள் புத்தகம் 9-15 பக்கங்களிலுள்ள முன்னுரைகளைப் பயன்படுத்தி அநேகர் நல்ல வெற்றியை கண்டடைகின்றனர். இவைகள் மக்கள் பொதுவாய் அக்கறை கொண்டிருக்கும் விஷயங்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள், அதாவது, சமீப காலத்திய நிகழ்ச்சிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, உத்தியோகம், வீட்டு வசதி, குடும்ப வாழ்க்கை, மற்றும் எதிர்காலம். ஆகிலும் நியாயங்கள் புத்தகத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் முன்னுரைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் வீட்டுக்காரர் தன் கருத்தை வெளிப்படுத்தும்படி அழைப்பதை கவனியுங்கள். வீட்டுக்காரர் பேசப்படும் பொருளின் முக்கியத்துவத்தையும் அது எவ்வாறு அவரை தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது என்பதையும் காண்பதற்கு உதவிசெய்கிறது. இந்த முன்னுரைகளை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதானது அதிக சாதாரணமான ஒரு சில எதிர்ப்புகளை வீட்டுக்காரர்கள் பயன்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுத்து வைக்கும்.

8 உங்களுடைய பிராந்தியத்தில் அதிக பயனுள்ளதாக இருக்குமென நீங்கள் நம்பக்கூடிய முன்னுரைகளுக்குக் கவனமாக சிந்தனைச் செலுத்துங்கள். நியாயங்கள் புத்தகத்திலுள்ள முன்னுரைகளைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். மற்ற பிரஸ்தாபிகளின் அனுபவத்திலிருந்து பயனடையுங்கள். உங்களுடைய முயற்சிகளில் யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக ஜெபியுங்கள். நல்ல முயற்சியோடும் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடும் உங்கள் பிராந்தியத்திலுள்ள அநேக ஆட்கள் இரட்சிப்பின் நற்செய்திக்குச் சாதகமாக பிரதிபலிக்கக்கூடும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்