இடைவிடாமல் தொடர்ந்து கற்பியுங்கள்
1 அப்போஸ்தலர்களுக்கும், பூர்வ கிறிஸ்தவ சீஷர்களுக்கும் என்னவிதமான பிராந்தியம் இருந்தது என்பதைப் பற்றி பைபிள் நம்மை சந்தேகத்தில் விட்டுவைப்பதில்லை. இயேசுவின் மரணத்துக்குக் கொஞ்ச காலத்திற்குப் பின், அதிகாரிகள் அவர்களை இயேசுவைப் பற்றி “எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று” எச்சரித்தனர். (அப். 4:18) ஏன்? ஒரு காரணம் அவர்களுக்குக் கிடைத்த வியப்பான வெற்றி. அப்போஸ்தலர் 4:4 அறிவிக்கிறபடி ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளானார்கள்: “வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.”
2 நாமும் இடைவிடாமல் தொடர்ந்து கற்பிப்பதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர், ஆம், நம் நாளில் இலட்சக்கணக்கானோர் விசுவாசிகளாக ஆகின்றனர். விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் பத்திரிகைகளை சந்தாவாக அளிக்கும் சிலாக்கியம் நமக்கு நவம்பர் மாதத்தில் இருக்கிறது. ஜனங்களுக்கிருக்கும் ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து அவர்களை உணர்வுள்ளவர்களாக்குவதில் விழித்தெழு! ஒரு முக்கியமான பங்கை வகித்திருக்கிறது என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு கற்பதன் மூலம் சந்தோஷம் பெற இது அநேகரை வழிநடத்தியிருக்கிறது.—மத். 5:3 ஒப்பிடுக.
ஒவ்வொருவரையும் எட்டுங்கள்
3 அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியம் நமக்கு ஒருவேளை இருந்தாலும், நற்செய்தியைக் கேட்பதற்கு கொஞ்சம் வாய்ப்பே கிடைத்த சிலரிடம் பேசும் சந்தர்ப்பம் இன்னும் ஒருவேளை கிடைக்கக்கூடும். அது எவ்வாறு? நம் மாவட்ட மாநாட்டிலும், ஆகஸ்ட் 1990 நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலும் கொடுக்கப்பட்ட ஆலோசனையைப் பயன்படுத்தி வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அணுக முடியாத பிராந்தியத்தில் தொலைபேசியைக் கொண்டு சாட்சி கொடுத்தலில் ஏன் பங்குகொள்ளக்கூடாது? சாயங்காலம் அல்லது வார இறுதிநாட்களில் சாட்சி கொடுப்பதில் ஈடுபடும்போது வீட்டிலிருக்கும் ஆணோடு பேசுவதற்கு ஒரு விசேஷ முயற்சியை எடுக்கலாம். நல்ல வீட்டுக்கு வீடு பதிவு சீட்டுகளை வைப்பதன் மூலம் மற்ற குடும்ப அங்கத்தினர்களை—பாட்டி, பள்ளிக்குச்செல்லும் உடன்பிறந்தார் மகன் அல்லது பெற்றோரின் உடன்பிறந்தாரின் பிள்ளை அல்லது வாரநாட்களில் வேலை செய்யும் நாத்தினார் போன்றவர்களை—நாம் ஒருவேளை நாடமுடியும். குடும்பத்தில் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் பேச எடுக்கும் மிகைப்படியான முயற்சி ஒருவேளை நல்ல பலனளிக்கக்கூடியதாய் இருக்கும்.
4 இந்த மாதத்தின்போது சந்தாக்களை எடுப்பதற்கு அநேக சிறந்த வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் பைபிள் மாணாக்கர்களையும் அக்கறைக் காட்டும் மற்ற ஆட்களையும் சந்தா செய்வதற்கு அழைப்பதாகும். ஒருவேளை நம் பைபிள் மாணாக்கர்களில் ஒருவர் பத்திரிகைகளில் ஒன்றுக்கு ஏற்கெனவே சந்தா செய்திருக்கலாம். இரண்டையும் பெற்றுக்கொள்ள ஏன் ஆலோசனை கொடுக்கக்கூடாது? காவற்கோபுரம் படிப்புக்கு தயார் செய்வதற்காக குடும்பங்கள் தங்கள் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு காவற்கோபுரம் சந்தாவை எடுக்குமாறு உற்சாகப்படுத்தலாம். மற்றொரு யோசனை பத்திரிகை மார்க்கங்களை வளரச்செய்து, அதற்குப் பின்பு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாக அக்கறைகாட்டுபவர்களுக்கு சந்தாக்களை அளிக்கலாம். உண்மையான அக்கறை காட்டுபவர்களிடம் பைபிள் படிப்பையும் நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.
உங்கள் ஊழியத்தை விரிவாக்குங்கள்
5 நவம்பர் மாதத்தில் துணைப்பயனியர் ஊழியம் செய்வதற்கு விண்ணப்ப நமுனாவை கொடுப்பதற்கு இன்னும் அதிக காலம் தாமதமாகிவிடவில்லை. டிசம்பர் மாதத்தில் உலகப்பிரகாரமான விடுமுறை நாட்களில் ஒரு குடும்பமாக பயனியர் வேலையில் பங்குகொள்ள நீங்கள் திட்டமிடுகிறீர்களா? அதை எவ்வாறு நீங்கள் வெற்றிகரமாகச் செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பதற்கு இப்பொழுதே நேரமாய் இருக்கிறது. முழு குடும்பமும் துணைப் பயனியர் ஊழியம் செய்யமுடியாவிட்டாலும், குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் அல்லது இருவர் செய்வதற்கு நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து உழைக்கலாமா? அப்படி முடியவில்லையென்றால் விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் பத்திரிகைகளை அளிக்க ஊழியத்தில் அதிக நேரமாவது செலவழிக்க முடியுமா?
6 விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் பத்திரிகைகளின் பக்கங்களின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் நாம் போற்றுகிறோம். நம் பிராந்தியத்தில் இருக்கும் நேர்மையான இருதயமுள்ள தனிப்பட்ட ஆட்களும் ஓர் ஒழுங்கான அடிப்படையில் பத்திரிகைகளை வாசிப்பதன் மூலம் முழுநிறைவாக பயனடைவர் என்று நமக்குத் தெரியும். யெகோவா நமக்கு கிடைக்கச் செய்திருக்கும் சிறந்த கருவிகளைக் கொண்டு நவம்பர் மாதத்தில் தொடர்ந்து கற்பிக்கும் வேலையை செய்வோமாக. அவ்வாறு செய்வதன் மூலம் நாம் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். மேலும் மற்றவர்களுக்கு நாம் ஓர் ஆசீர்வாதமாக நிரூபிப்போம்.—கலா. 6:9.