ஊழியத்தில் முன்னேற்றம் அடைதல்
1. முன்னேற்றத்தைப் பற்றி ஒரு பழைய முதுமொழி இருக்கிறது. அது சொல்லுகிறது: “நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கிருந்து ஆரம்பியுங்கள் ஆனால் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே தங்கி விடாதீர்கள்.” ஊழியத்தில் முன்னேற்றம் அடைவதற்கு அந்த முதுமொழி எவ்வளவு பொருந்தக்கூடியதாயிருக்கிறது! நீங்கள் ஊழியத்தை ஆரம்பித்த போது, ராஜ்ய செய்தியை ஒரு சுருக்கமான பிரசங்கமாக மட்டுமே செய்திருப்பீர்கள். ஆனால் ஒரு சில வருடங்கள் கடந்த பின்பும் நீங்கள் அந்தப் படிநிலையிலிருந்து நகராமல், நீங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கேயே தங்கிவிட்ட நிலையில் இருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்?
2. திறமையுடன் கற்பிப்பதற்கும் தேவையான ஞானத்துக்காக யெகோவாவை கேட்பது முதற்படியாகும். (நீதி.15:14; யாக். 1:5) உங்கள் ஜெபத்துக்கு இசைவாக வேலை செய்வது இரண்டாவது படியாகும். நியாயங்கள் புத்தகத்தில் உள்ள அளிப்புகளை எடுத்துப் பார்க்க கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி வையுங்கள். திறம்பட்ட விதமாக உபயோகிக்கலாம் என்று நீங்கள் உணரும் ஒன்றை கண்டித்தது. அது உங்கள் மனதில் தெளிவாக இருக்கும்வரை மறுபடியும் மறுபடியுமாக சொல்லிப் பாருங்கள். நீங்கள் தயாரித்திருக்கும் அளிப்பைச் செய்வதற்கு உங்கள் சகோதரர்களோடு வெளி ஊழியத்தில் செல்வது மூன்றாவது படியாகும்.
உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள்
3. ‘அது செய்வதைவிட சொல்வதற்கு சுலபமானது’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். உண்மைதான், ஆனால் அதற்காகத் தான் உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் இருக்கின்றனர். நீங்கள் இளைஞராக இருந்தால் உங்கள் பெற்றோரோடு அல்லது பலன்தரும் ஊழியர்களாக இருக்கும் அனுபவமிக்க பிரஸ்தாபிகளோடு பேசுங்கள். வீடுகளில் ஜனங்களோடு எவ்வாறு சம்பாஷிப்பது என்பதற்கான ஆலோசனைகளுக்காக அவர்களைக் கேளுங்கள். உங்கள் அளிப்பை ஒத்திகை பார்ப்பதற்கு, அவர்கள் ஒருவேளை பயிற்சி நேரங்களை ஆலோசனையாக சொல்லக்கூடும். அவர்கள் ஒரு வீட்டுக்காரரின் பாகத்தை நடித்து, வீடுகளில் எதிர்ப்படும் பொதுவான எதிர்ப்புகளை எழுப்பலாம். பழகப் பழக நீங்கள் திறமையுடன் ஜனங்களோடு சம்பாஷிப்பதற்கு கற்றுக்கொள்ள முடியும்.
4. உங்களுக்கு உதவிசெய்ய உங்களுடைய மற்ற நண்பர்களும் இருக்கின்றனர். அனுபவத்தின் மூலமாகவும், பயனியர் சேவை பள்ளிக்கு ஆஜராவதன் மூலமாகவும், பிரசங்கிக்கும் தனிச் செய்முறை திறங்களை கற்ற பயனியர்கள் இருக்கின்றனர். உங்கள் புத்தகப் படிப்பு நடத்துபவர் அல்லது ஊழியக் கண்காணி உங்களோடு வீட்டுக்கு வீடு வேலை செய்வது, எவ்வாறு ஜனங்களோடு உரையாடுவது மற்றும் காரணம் காட்டி பேசுவது என்பதை நடைமுறையில் செய்து காட்டக்கூடும்.
காண்பிக்கப்பட்ட அக்கறையைத் தொடருதல்
5. நம் பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளும் ஜனங்களுக்கு இன்னுமதிகமான ஆவிக்குரிய உதவியை கொடுப்பதில் நாம் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். இன்னுமதிகமான ஆர்வத்தை தூண்டுவதற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று இது அர்த்தமாகிறது. மறுசந்திப்பைச் செய்வதற்கு முன்னால், முதல் சந்திப்பில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறு ஆலோசனை செய்யுங்கள். இதன் மூலம் அவர்களுடைய ஆர்வத்தைக் கவர்ந்த கருத்தை மேலும் திறம்பட்ட விதமாய் வளர்க்க முடியும். நாம் நட்டு நீர்ப்பாய்ச்சினாலும், யெகோவா தாமே அதை வளரச் செய்கிறார் என்பதையும் மனதில் வையுங்கள். சந்திப்பை செய்வதற்கு முன்னால் அவருடைய வழிநடத்தலுக்காக வேண்டுங்கள். (1 கொரி. 3:6; 2 கொரி. 9:10) மற்றவர்கள் கற்றறிய நாம் உதவிசெய்கையில், நாம்தாமே தனிப்பட்ட வளர்ச்சியடைகிறோம்.
6. அடுத்த முக்கியமான படி, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து நடத்துவது ஆகும். உங்கள் ஊழிய வளர்ச்சியில் அந்த நிலையை நீங்கள் இன்னும் எட்டவில்லையெனில், ஜெபத்தில் யெகோவாவை தொடர்ந்து அணுகுங்கள், செய்மறியாட்டைப் போன்ற ஒருவரை கண்டுபிடித்து போஷிக்க உங்களுக்கு உதவி செய்ய அவரைக் கேளுங்கள். ஒரு திறம்பட்ட போதகர் எவ்வாறு ஒரு பைபிள் படிப்பை நடத்துகிறார் என்பதைக் கவனிப்பதும், பின்பு அவருடைய கற்பிக்கும் முறைகளை கடைப்பிடிப்பதும் உதவியளிப்பதாக நீங்கள் ஒருவேளை காணலாம். ஆங்கிலம் காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1984, பக்கங்கள் 8-17-ல் உள்ளதைப் போன்ற கற்பித்தலின் பேரில் உள்ள தகவலையும் விமர்சனம் செய்யுங்கள். இவ்வாறு உங்களை தயாராக்கிக் கொள்வதன்மூலம், உங்கள் ஜெபங்கள் பதிலளிக்கப்படுகையில் ஒரு படிப்பை நடத்துவதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
இலக்குகளை வைத்து அவற்றை அடையுங்கள்
7. மேலும் திறம்பட்டவிதமாக கற்பித்தல், மறு சந்திப்புகளை செய்தல், படிப்புகளை நடத்துதல் போன்ற இலக்குகளை எட்டுவதற்கு நேரம் எடுக்கிறது. துணை அல்லது ஒழுங்கான பயனியராக இருப்பதற்கான மற்றொரு இலக்கை உங்களுக்காக நீங்கள் வைக்கமுடியுமா? ஊழியத்தில் தொடர்ந்து முன்னேற்றம் செய்கையில், மற்றவர்களுக்கு நீங்கள் உற்சாகத்தின் ஊற்றுமூலமாய் இருக்கலாம் நீங்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே தங்கிவிடாமல் சீராக வளர்ச்சியடைந்தால், யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்கள் உங்களுடையதாகும்.