சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஏப்ரல் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 4 (19)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வார இறுதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை விளக்குங்கள்.
23 நிமி: “அணுகிவரும் மேலான நிலைமைகளைப் பற்றிய நற்செய்தியை கூறுங்கள்.” கேள்விகளும் பதில்களும். பாரா 6-ஐ சிந்திக்கையில், வெளி ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படக்கூடிய பேச்சுக் குறிப்புகளின் பேரில் சபையில் இருக்கும் திறம்பட்ட பிரஸ்தாபிகள் திட்டவட்டமான ஆலோசனைகளை அளிக்கவும், குறிப்பு சொல்லவும் ஏற்பாடு செய்யுங்கள். இந்தக் குறிப்புகளை முன்னமே தயாரித்திருக்கும்படிச் செய்யுங்கள்.
12 நிமி: மேலுமான அக்கறையைத் தூண்ட மறுபடியும் செல்லுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் அக்கறை காண்பித்த எல்லாரிடமும் மறுசந்திப்புகள் உடனடியாக செய்ய பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். தேவையைக் குறித்தும், அக்கறை கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் எல்லாரும் மறுபடியும் செல்லுமாறு அனலான உற்சாகம் கொடுத்த சுருக்கமான கலந்தாலோசிப்புக்குப் பிறகு, ஒரு புத்தகம் அளிக்கப்பட்ட இடத்தில் எவ்வாறு ஒரு மறுசந்திப்பு செய்யப்படலாம் என்பதைக் காண்பிக்க ஒரு சுருக்கமான நடிப்பை அளியுங்கள்.
பாட்டு 6 (4), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 87 (47)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். நன்கொடை பெற்றுக்கொண்டதைப் பற்றிய அறிவிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: சபை தேவைகள் அல்லது நவம்பர் 1, 1990 ஆங்கில காவற்கோபுரம் கட்டுரை “தொடர்ந்து சரிசெய்யப்படுங்கள்” அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், நவம்பர் 1, 1990 “கடவுளுக்குச் செவிசாய்க்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?”)
20 நிமி: திறம்பட்ட முன்னுரைகளை தயார் செய்யுங்கள். வெளி ஊழியத்தில் திறம்பட்ட விதமாக இருக்கும் மூப்பர் உள்ளூர் பிராந்தியத்துக்குப் பொருத்தமாக இருக்கும் முன்னுரைகளை பிரஸ்தாபிகள் தயாரிக்க உதவுகிறார். நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 9–15-ல் உள்ள ஆலோசனைகளை அடிப்படையாகக் கொள்ளுங்கள். தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு அல்லது இந்நாளுக்குப் பொருத்தமான மற்றொரு பொருளோடு உபயோகப்படுத்த இரண்டு அல்லது மூன்று முன்னுரைகளை கலந்தாலோசியுங்கள். அனுபவமிக்க பிரஸ்தாபிகள் இரண்டு வீட்டுக்கு வீடு அளிப்புகளை நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால், வீட்டுக்காரரின் அக்கறையை கவரும் முன்னுரைகளின் மதிப்பை விளக்கும் உள்ளூர் அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
பாட்டு 129 (66), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 135 (72)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள், பத்திரிகை ஊழியத்தில் உபயோகப்படுத்த தற்போதைய பத்திரிகைகளில் இருக்கும் சிறப்பு அம்சங்களை கலந்தாலோசியுங்கள். தற்போதைய அளிப்பைச் செய்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் சொல்லப்படலாம். மே மாதத்தில் துணைப்பயனியர் வேலை செய்யுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “மே மாதத்துக்கான உங்கள் திட்டங்கள் யாவை?” ஊழியக் கண்காணியினால் பேச்சு. வார மத்திப மற்றும் சாயங்கால ஊழியத்தை போன்ற இந்த விசேஷ மாதத்துக்கான வேலைகளை விரிவாக்க வழிகளைக் குறிப்பிடுங்கள். பயனியர்களும், முதிர்ச்சி வாய்ந்த பிரஸ்தாபிகளும் சில மாற்றங்களை செய்து கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழு வேலைக்கு அதிகமான ஆதரவு கொடுக்க முடியுமா?
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தோஷத்துடன்.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாரா 3-ன் சம்பந்தமாக முதிர்ச்சி வாய்ந்த பிரஸ்தாபி, சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளையோ அல்லது நியாயங்கள் புத்தகத்தையோ உபயோகித்து ஒரு புதியவருக்கு அளிப்பை தயாரிக்க உதவுவதாக நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 126 (25), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 168 (84)
10 நிமி: சபை அறிவிப்புகள். “உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராகுங்கள்” கட்டுரையில் உள்ள முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். வார இறுதி நாட்களில் வெளி ஊழிய வேலையில் பங்கெடுக்குமாறும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “புதிய மாநாட்டு வெளியீடுகளோடு அறிமுகமாகுங்கள்.” சபையாரோடு குறிப்பான கலந்தாலோசிப்பு, உள்ளூருக்கு உதவியாயிருக்கும் ஒவ்வொரு பிரசுரத்திலிருந்தும் சில முக்கிய குறிப்புகளை அழுத்திக் காண்பியுங்கள். இந்தத் தகவலை தங்களுடையதாக்கிக் கொள்ள சகோதரர்கள் தாமதிக்கக்கூடாது.
20 நிமி: “ஊழியத்தில் முன்னேற்றம் அடைதல்.” அனுபவமிக்க மூப்பருக்கும், சில காலமாக சத்தியத்தில் இருந்து ஆனால் முன்னேற்றமடையாத ஒரு சகோதரரின் பாகத்தை எடுத்துக் கொண்ட ஒரு சகோதரருக்கும் இடையே கலந்தாலோசிப்பு. பாரா 3-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பயிற்சி நேரத்தை சுருக்கமாக நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். பாரா 4-ஐ கலந்தாலோசிக்கையில், ஒரு பயனியரோ அல்லது மற்ற திறம்பட்ட பிரஸ்தாபியோ குறைந்த அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபிக்கு அவ்வப்போது உள்ளூர் பிராந்தியங்களில் எதிர்ப்படும் ஒரு நிலையை எவ்வாறு சந்தித்து கையாளுவது என்பதைக் காட்டும்படி செய்யுங்கள். ஆகஸ்ட் 1, 1985, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 15–20-ல் இருதயங்களை எட்டுங்கள் என்பதன் பேரில் உள்ள ஆலோசனைகளை கலந்தாலோசிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஜனங்களோடு சம்பாஷிப்பதிலும், அக்கறையைத் தொடருவதிலும் முன்னேற்றமடைய எல்லாரும் திட்டவட்டமான திட்டங்களைச் செய்யுமாறு உற்சாகப்படுத்தி பகுதியை முடியுங்கள்.
பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.