மேலும் முன்னேறுவதற்கு நம்பிக்கையோடு செயற்படுதல்
1 இதற்குள் 1992 வருடாந்தரப் புத்தகத்தை நம்மில் அநேகர் வாசித்துவிட்டிருப்போம். நாற்பதே-கால் லட்சத்துக்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகள் 211 நாடுகளில் வேலைசெய்கிறார்கள் என்ற 1991 உலகளாவிய உச்சநிலையை—6.5 சதவீத அதிகரிப்பு—பற்றி கேள்விப்பட்டதானது நம் இருதயத்துக்குச் சிலிர்ப்பூட்டியது! உண்மையில், உலகமுழுவதும் நடைபெறுகிற ராஜ்ய அதிகரிப்பு, ஏசாயா 2:2-4 மற்றும் மீகா 4:1-4-ன் நிறைவேற்றத்துக்கு முனைப்பான சான்றுபகருகிறது.
2 இன்னும் 1992 ஊழிய ஆண்டின் அறிக்கை முடிக்கப்படவில்லையென்றாலும், யெகோவா, இந்த ஊழிய ஆண்டைக் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக்கொண்டு வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் என்பதற்கு தெளிவான சான்றிருக்கிறது. நம்முடைய திரண்ட சர்வதேச சகோதரத்துவத்தைச் சேர்ந்துகொள்ளுவதற்கான அழைப்பு தொடர்ந்து விடுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ஆட்கள் ராஜ்ய செய்திக்கு செவிகொடுத்து கேட்கிறார்கள் என்பதை நினைவு ஆசரிப்பு மற்றும் மாவட்ட மாநாடு ஆஜர் எண்ணிக்கைகள் காட்டுகின்றன. தேவாவியால் ஏவப்பட்டு கோரப்படும் பின்வரும் இந்த அழைப்புக்குப் பிரதிபலித்து அவர்கள் எல்லா தேசங்களிலுமிருந்து வருகிறார்கள்: “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம்.”
3 முன்னேற்றம் செய்வதற்கு உறுதியாய்த் தீர்மானித்திருங்கள்: யெகோவாவின் அமைப்பு முன்னேறிக்கொண்டே செல்கிறது. யெகோவாவுடைய மெய் வணக்கமாகிய பர்வதத்துக்கு அநேக புதிய ஆட்கள் திரண்டுவருவதினிமித்தம் நாம் ஒவ்வொருவரும் மேலும் அதிகமான ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக நம்பிக்கையோடு செயற்படுவதும் பின்னர் இன்னும் புதிய ஆட்களாக வருவோரும் இப்படிச்செய்ய அவர்களையும் சென்றெட்டி உதவிசெய்வதும் இன்றியமையாதது. யெகோவாவுடைய பர்வதத்தினிடம் வருவதற்கு கொடுக்கப்படும் அழைப்புக்கு பிரதிபலிப்பவர்கள் மற்றவர்களிடம், “வாருங்கள்” என்று சொல்லும் கூற்றிலிருந்து இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கான அவசியம் குறிப்பாக உணர்த்திக் காட்டப்படுகிறது. வெளிப்படுத்துதல் 22:17-ல் இதுபோன்ற ஒரு கூற்றை அப்போஸ்தலன் யோவான் அறிக்கைசெய்தான்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக.”
4 இந்த அழைப்பு எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு செய்துகாட்டினார். ஜனங்கள் அவருடைய போதனைக்குப் பிரதிபலித்தபோது, அவர்களைத் தம்முடைய ஊழியத்தில் பங்குகொள்ளும்படியாக அவர் அழைத்து, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்குக் கற்பித்தார். (மத். 4:19; 10:5-7, 11-14) சீஷர்கள் அவரோடுகூட சென்று, அவர் செய்பவற்றை நேரில் கவனித்துப் பார்த்து, அவர் உபயோகித்த திறம்பட்ட வழிமுறைகளைக் கற்றுக்கொண்டனர். பின்னர் அவர் வைத்துப்போன மாதிரியின்படி தங்கள் ஊழியத்தைச் செய்தனர். அவருடைய வழிமுறைகளை அவர்கள் அவ்வளவு நன்றாய்க் கற்றிருந்ததால், அவர்கள் தைரியத்தோடு சாட்சிகொடுத்ததைப் பார்த்த சத்துருக்களுங்கூட அவர்களை இயேசுவின் சீஷர்களென அவர்களை தெளிவாய்க் கண்டுணர்ந்தனர். அப்போஸ்தலர் 4:13 அறிக்கை செய்கிறது: “பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, . . . அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.”
5 இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச்செல்வதற்கு முன்பு, தம்முடைய சீஷர்கள் புதிய சீஷர்களை உண்டுபண்ணி, தங்களுக்கு போதிக்கப்பட்டவாறு அவர்களுக்கும் போதிப்பதன் மூலம் இந்தக் கிறிஸ்தவ ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுச்சென்றார். மத்தேயு 28:19, 20-ல் இயேசு கட்டளையிட்டதாவது: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” இந்த வேலை நம் நாள் வரையாக நீடித்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுபவராய், இந்த மேலுமான உறுதியை அவர் அளித்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”
6 அவர் கட்டளையிட்டுச் சொன்ன அனைத்துக் காரியங்களையும் புதிய சீஷர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்ற கட்டளைகளுக்கு அவருடைய உண்மையான சீஷர்கள் தவறாது கீழ்ப்படிந்தனர். என்றாலும், உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது சபையில் புதிதாக முழுக்காட்டப்பட்டவர்கள் மற்றும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் மேலும் நம்மோடு பைபிளை படிப்போராக சபைக் கூட்டங்களுக்கு ஒருவேளை ஓரளவு ஒழுங்காக வருவதற்கு தொடங்கியிருக்கிற ஆட்கள் ஆகியோருடைய விசேஷ தேவைகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்படி அவசியப்படுத்துகிறது.
7 இந்தியாவிலுள்ள ஒவ்வொரு 9 பிரஸ்தாபிகளிலும் 1 பிரஸ்தாபி, 1992 ஊழிய ஆண்டின் தொடக்கத்தில், ஒரே ஒரு வருடம் ஊழியத்தில் செயல்பட்டிருக்கிறார். மேலும், 4-ல் ஒருவர் மூன்று வருடமோ அதற்குக் குறைவாகவோ பிரசங்கம் செய்திருக்கிறார்; ஐந்து வருடகாலமாக மட்டுமே 3-ல் ஒருவர் ஊழியத்தில் பங்குகொண்டிருக்கிறார். புதிதான ஆட்களில் அநேகர் சபையின் அங்கத்தினர்களாக ஆனது முதற்கொண்டு நல்ல முன்னேற்றம் செய்திருக்கிறபோதிலுங்கூட, அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு சில விஷயங்களில் கூடுதலான உதவியைக் கொடுப்பது உண்மையிலேயே துணைகொடுக்கும்.
8 “முதிர்ச்சியை நோக்கி முன்னேறு”ம்படியாக எபிரெயர் 6:1 (NW) நம்மனைவரையுமே உற்சாகப்படுத்துகிறது. கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது வெளிஊழிய அறிக்கை சீட்டை எழுதிப்போடுவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அது, தனிப்பட்ட படிப்பிலும், ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராவதிலும் முன்னேறுவதையும், வெளிஊழியத்தில் வைராக்கியத்தோடு பங்குகொள்வதையும் உட்படுத்துகிறது. இரட்சிப்பிற்காக சத்தியத்தைப் பற்றி அறிகிற அறிவைப்பெற மற்றவர்களுக்கு உதவிசெய்வதும் இதில் உட்பட்டிருக்கிறது. நாம் ‘வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதில்’ நம்முடைய திறமைகளைக் கூர்மைப்படுத்துவதில் உழைக்க வேண்டும். (அப். 17:2) முதிர்ச்சியை நோக்கி வளருவதற்கு நேரம் தேவையாயிருக்கிறது, மேலும் இது நம்முடைய சொந்த தெய்வபக்தியையும் வெளிஊழியத்தில் நாம் உண்மையில் ஈடுபடும்போது கிடைக்கும் அனுபவத்தையும் பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. நம்மிடமுள்ள தெய்வபக்தியின் ஆழத்திற்கு நம்மிடம்தானே கட்டுப்பாடு இருக்கிறபோதிலும், நடைமுறையான அனுபவம் கிடைப்பதற்கு முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளும் நமக்கு உதவி செய்யும்படி நாம் அனுமதிப்பது ஞானமான வழியாகும். முக்கியமாய் வெளிஊழியத்தில், அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். சொந்தமாக ஒவ்வொன்றையும் நாம்தானே சோதனைசெய்துபார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
9 அனுபவமில்லாதவருக்கு உதவி: கிறிஸ்தவ சபை ஆரம்பமான சமயத்தில் உதவி கொடுப்பதற்கான மாதிரி வைக்கப்பட்டது. இயேசு அவருடைய சீஷர்களுக்கு கற்பித்தார். (மாற்கு 3:14; லூக். 9:1; 10:1) தங்கள் முறையாக, சீஷர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்தனர். தீமோத்தேயு பவுல் அப்போஸ்தலனிடமிருந்து தனிப்பட்ட உற்சாகத்தையும் உதவியையும் பெற்றான். சீஷனாகிய அப்பொல்லோ அதிக அனுபவம்வாய்ந்த ஆட்களாயிருந்த ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமுடைய தனிப்பட்ட உதவியைக்கொண்டு முன்னேறினான். (அப். 18:24-27; 1 கொரி. 4:17) இன்று கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சியுள்ள அங்கத்தினர்களும் குறைந்த அனுபவமுள்ள ஆட்களாயிருப்பவர்களுக்கு, விசேஷமாக புதிய ஆட்களாயும் இளைஞராயும் இருப்பவர்களுக்குப் போதித்து, அவர்களுக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்து வருவதன் மூலம் அவர்களுடைய முன்மாதிரியை பின்பற்றுகின்றனர். ரோமர் 15:1, 2 சொல்கிறது: “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் . . . பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்.”
10 பெற்றோர் உறுதியான நடிவடிக்கை எடுத்து தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய பிரகாரமாக முன்னேறுவதற்கு உதவிசெய்யும் பொறுப்பை உடையவராயிருக்கின்றனர். இது குடும்ப படிப்பை உட்படுத்துகிறது. அவர்கள் எப்படி தனிப்பட்ட விதமாக படிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பது, ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராவது, அதில் பங்குகொள்வது, மற்றும் கற்கும் காரியங்களை பொருத்திப் பிரயோகிப்பதில் அனுபவமடைவது ஆகியவை இதில் உட்படுகின்றன. (எபே. 6:4; 1 தீமோ. 5:8) விசேஷமாக சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்கள், தங்கள் புத்தகப் படிப்பிலுள்ளவரும், வெளிஊழிய தொகுதிகளிலுள்ள எல்லாரும் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுவதற்கு உதவி செய்வதில் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஊழியக் கண்காணியும், மற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும், சபையின் மற்ற அங்கத்தினர்களுங்கூட உதவிசெய்யலாம்.
11 தேவையானதைக் கொடுங்கள்: ஒருவேளை கிறிஸ்தவ நடவடிக்கைகளில், தனிப்பட்ட படிப்பு போன்ற ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் மட்டுமே உதவி தேவைப்படலாம். வேறொருவருக்கு நடைமுறையான படிப்பு அட்டவணையை கொண்டிருக்க ஆலோசனைகள் தேவைப்படலாம். மற்றொரு நபருக்கு கூட்டங்களில் குறிப்புகள் சொல்வதற்கோ பேச்சுக்களைத் தயார்செய்வதற்கோ உதவி தேவைப்படலாம். மற்றவர்கள் ஒருவேளை பைபிள் விஷயங்களின்பேரில் எப்படி ஆராய்ச்சி செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
12 புதிய ஆட்களில் அநேகருக்கு வெளிஊழியத்தில் உதவி தேவைப்படுகிறது. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது, மறுசந்திப்புகள் செய்வது, அல்லது ஒரு பைபிள் படிப்பு ஆரம்பித்து நடத்துவது போன்ற காரியங்களில் ஒரு பிரஸ்தாபி மிகவும் திறம்பட்டவராக விரும்பலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்தோ நம் ராஜ்ய ஊழியத்திலிருந்தோ கொடுக்கப்பட்டுள்ள அறிமுகங்களையும் பிரசங்கங்களையும் பயன்படுத்தி செய்துபழகிக்கொள்வதற்கான ஒருசில நடிப்புகள் மட்டும் ஒருவேளை அவருக்கு போதுமானதாயிருக்கலாம். மற்ற சமயங்களில், வெளிஊழியத்திற்காக நடைமுறையான அட்டவணையை வைத்துக்கொள்ள ஆலோசனைகளும் அதைக் கடைப்பிடித்துவர உதவியும் தேவைப்படுவதாய் மட்டும் இருக்கலாம். உதவி தேவைப்படும் நபரோடு சேர்ந்து வெளிஊழியத்தில் வேலை செய்வதற்கு திட்டமான ஏற்பாடுகளை செய்வது அந்தச் சகோதரரோ சகோதரியோ ஒருசில திட்டமான குறிக்கோள்களை அடைய முன்னேறுவதற்கு உதவியாயிருக்கும்.
13 நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை யாவருக்கும் விளங்கச் செய்யவேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. இந்த அறிவுரையைத்தானே பவுல் தன் உடன் வேலையாளனாயிருந்த தீமோத்தேயுவுக்கு எழுதினார். (1 தீமோ. 4:15) அந்த உற்சாகப்படுத்தலுக்கிசைய, பந்தய ஓட்டத்திற்காக போட்டியிடுவதற்கு பயிற்றுவித்துக்கொள்வது போல பயிற்சிபெறுவதை அல்லது ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு பயிற்சிபெறுவதன் அவசியத்தை அப்போஸ்தலன் வலியுறுத்தினான். (1 கொரி. 9:24-27; 2 கொரி. 10:5, 6) நம்மை காண்பவர்கள் மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தின் உயிருள்ள மாதிரிகளை நம்மில் காணும்படி நாம் கடவுளுடைய சித்தத்தைப்பற்றி கற்றுக்கொள்ளும் எல்லா காரியங்களையும் உடனே பொருத்திப் பிரயோகிக்க வேண்டும். இவ்வாறே, மற்றவர்களும் இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்த சீஷர்களாகும்படி அவர்களுக்குக் கற்பிக்கும் கலையில் நாம் முன்னேற வேண்டும்.—யாக். 1:22-25; 1 தீமோ. 4:12-16.
14 சோதனைகளை சகித்துநிலைத்திருப்பதையும் முன்னேற்றம் உட்படுத்துகிறது: இயேசு கிறிஸ்துவுங்கூட பட்ட பாடுகளினாலே மதிப்புவாய்ந்த பாடங்களைக் கற்றுக்கொண்டார். (எபி. 5:8) நாமும் அவ்வாறே கற்றுக்கொள்ளலாம். இதற்கிசைய, யாக்கோபு 1:2, 3-ல் பரிந்துரை செய்யப்பட்டுள்ள உறுதியான மனநிலையை நாம் ஏற்கும்போது ஆவிக்குரிய முன்னேற்றம் மிகைப்படுத்தப்படுகிறது: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” இப்படியாக, தீராத நோய்கள், பொருளாதார நெருக்கடிகள், பிளவுபட்ட குடும்பத்தில் வாழ்க்கை நடத்துவது, பிராந்தியத்தில் எதிர்ப்பு, அல்லது வேறுபல இன்னலான சூழ்நிலைகள் ஆகிய எந்தச் சவாலை நாம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தாலும் யெகோவாவுடைய உதவியைக்கொண்டு நாம் அவற்றை மேற்கொண்டு தொடர்ந்து அவருடைய வணக்கத்தில் முன்னேறுவோம் என்ற அவருடைய உறுதி நமக்கு இருக்கிறது. (1 கொரி. 10:13; 2 கொரி. 12:9; 1 பேதுரு 5:8-11) ‘எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் கடவுள் மகிமைப்படுத்தப்படும்படி, கடவுளுடைய பரிசுத்த வசனிப்புகளைப் பேசிக்கொண்டும் கடவுள் அருளும் பலத்தில் சார்ந்து ஊழியஞ்செய்துகொண்டும்,’ எல்லா சூழ்நிலைமைகளிலும் மாறா-உறுதியோடு இருப்பதன் மூலம் வெற்றிக் கிடைக்கிறது.’—1 பேதுரு 4:11, NW.
15 மேலுமான முன்னேற்றத்துக்கு வேண்டிய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்: மேலுமான ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு உதவி தேவைப்படும் நபர்களில் நீங்கள் ஒருவராக இருந்தீர்களேயானால், சபையில் அதிக அனுபவம்வாய்ந்த நபர் ஒருவர் கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருங்கள். உதவி வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்படவில்லையென்றாலும், உதவிபெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்போது வெட்கம் உங்களுக்குத் தடையாயிராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்காக கேளுங்கள். சபையிலுள்ள அனுபவம்வாய்ந்தோரான எவரிடமும் உதவி கேட்பதற்குத் தயங்காதீர்கள். அல்லது சபை புத்தகப் படிப்பு நடத்துபவர், ஊழியக் கண்காணி, அல்லது மற்ற மூப்பர்களில் எவரிடமாவது தேவையான உதவியை நீங்கள் கேட்கலாம்.—ஆதியாகமம் 32:26 ஒப்பிடவும்; மத்தேயு 7:7, 8.
16 உண்மையில், யெகோவாவுடைய தூய்மையான வணக்கமாகிய பர்வதத்துக்குத் திரண்டுவரும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் சர்வதேச “திரள் கூட்ட”த்தாரோடு சேர்ந்துகொள்வது ஒரு மகத்தான சிலாக்கியம். (வெளி. 7:9) இந்த ஏறுவரிசையில் மற்றவர்களையும் நம்மோடுகூட வருவதற்கு அழைப்பதும் ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. இருதயப்பூர்வமான போற்றுதலோடு, நாம் தொடர்ந்து மேலுமான முன்னேற்றத்துக்கு நம்பிக்கையான நடவடிக்கை எடுத்துக்கொண்டும், நம்மில்நாமே ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொண்டும், யெகோவாவுடைய சேவையில் நம்மோடுகூட மற்றவர்களும் முன்னேற அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்துகொண்டும் இருப்போமாக.