நம் தனிப்பட்ட முயற்சிக்கு ஏற்றவாறு அறுவடை செய்தல்
1 யெகோவா தேவன் தம் அன்பை மனிதவர்க்கத்துக்கு அநேக வழிகளில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். கடவுளின் மிக மேம்பட்ட அன்பை இயேசு சிறப்பித்துக் காட்டி, கடவுள் “தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்,” என்று கூடியிருந்த ஒரு ஜனக்கூட்டத்துக்கு சுட்டிக் காட்டினார். (மத். 5:43–48) மற்றொரு சமயத்தில் இயேசு தம் தகப்பனின் மிக அதிக முதன்மையான அன்பின் வெளிக்காட்டை அடையாளங் காட்டினார்—நமது இரட்சிப்புக்காக கடவுள் கொடுத்த தமது ஒரே பேறான குமாரனின் பலி. (யோவான் 3:16) யெகோவாவின் அன்புக்கு போற்றுதலோடு பிரதிபலிக்குமாறு இயேசு தம்மைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். அதை செய்வதற்கு நாம் முயற்சி செய்கிறோமா?
2 யெகோவாவின் அன்பிலிருந்து நித்திய நன்மைகளைப் பெறுவதற்கும், முழுமையான போற்றுதலை நாம் வெளிப்படுத்துவதற்கும் நாம் அவரை கட்டாயம் அறிய வேண்டும். (யோவான் 17:3) ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் நாம் எவ்வாறு அவரை சேவிக்கலாம் என்பதற்கு நமக்கு புத்திமதியும் வழிநடத்துதலும் தேவை. தமது ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளை நமக்கு கொடுப்பதன் மூலமும், தமது மகத்தான அமைப்பை எழும்பச் செய்து அதன் மூலம் நாம் புத்திமதியும் போதனையும் பெற்றுக்கொள்ளச் செய்வதன் மூலமும் யெகோவா தம் அன்பான அக்கறையை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். (மத். 24:45–47; 2 தீமோ. 3:16, 17) யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஜனங்களாக, நாம் அவருடைய வழியில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். யெகோவாவின் அன்பை போற்றுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை நம் தனிப்பட்ட முயற்சியின் மூலம் நாம் காண்பிக்கிறோமா? அவருக்குப் பிரியமாக இருக்க அவருடைய புத்திமதியை கருத்தில் கொண்டு, அதன் மூலம் நாம் பயனடைகிறோமா? (ஏசா. 48:17; யாக். 1:22) 1 கொரிந்தியர் 3:8-ல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத்தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.”
3 ஆம், கடவுள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ, அதன் பேரில் நாம் உழைக்க வேண்டும். எல்லோருமே ஒரே வேகத்தில் ஆவிக்குரிய முன்னேற்றமடைவதில்லை. நம் முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்ட அம்சங்கள் அநேகம் இருக்கின்றன, எனவே உற்சாகமிழக்கச் செய்யும் ஒப்பிடுதல்களை செய்வது ஞானமற்றதாக இருக்கும். இருப்பினும், நாம் செய்யும் தனிப்பட்ட முயற்சியே அதிமுக்கியமானது. அமைப்பினிடமாக நெருங்கி வர நாம் என்ன செய்யலாம்? கிறிஸ்தவர்களாக நம் தனிப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதில் நாம் முன்னேற்றமடைய வேண்டிய அம்சங்கள் ஏதாவது இருக்கிறதா? சபையின் வேலைகளுக்கு மேம்பட்ட ஆதரவைக் கொடுப்பதற்கு என்ன முயற்சி தேவைப்படும்? அமைப்பு நமக்கு கொடுக்கும் போதனைகளில் நாம் பொருத்த வேண்டிய குறிப்புகள் எவையாவது இருக்கின்றனவா?—1 தீமோ. 4:16.
விசுவாசமுள்ளவர்களை பார்த்துப் பின்பற்றுங்கள்
4 விசுவாசமுள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளால் ராஜ்யத்தின் நற்செய்தி பல பத்தாண்டுகளாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. பவுலைப் போன்று இந்த விசுவாசமுள்ளவர்கள் பின்பற்றுவதற்கு தகுதியுள்ளவர்களாயிருக்கின்றனர். (1 கொரி. 11:1) அவர்கள் கடவுளுடைய அன்புக்கு பிரதிபலித்திருக்கின்றனர், தங்களுடைய கடினமான வேலையின் காரணமாகவும், பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதற்கு தங்களுடைய தனிப்பட்ட முயற்சிகள் மூலமாகவும் அநேக நன்மைகளைப் பெற்றிருக்கின்றனர். தங்களுடைய தனிப்பட்ட உத்தரவாதத்தை தட்டிக்கழிக்காமல், அவர்கள் சபையில் சுறுசுறுப்பான வேலையாட்களாலான, உறுதியான மையப்பகுதியை உருவாக்குகின்றனர். அவர்களுடைய தனிப்பட்ட உழைப்புகளின் பலன்களை நாம் காணலாம்.—ரோமர் 1:13; 2 கொரி. 3:1–3.
5 இப்பொழுது, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புதியவர்கள் அமைப்புக்கு திரளாய் வந்துகொண்டிருக்கின்றனர். (ஏசா. 60:8) முழுமையாக வளர்ச்சியடைந்த ஆவிக்குரிய ஆட்களாக ஆவதற்கு உழைப்பதைக் குறித்து அவர்களும் அக்கறையுடையவர்களாய் இருக்கின்றனர், மேலும் பிரசங்க வேலையில் அவர்களுடைய வைராக்கியம் போற்றுதலுக்கு தகுதிவாய்ந்ததாய் இருக்கிறது. யெகோவா அவருடைய சேவையில் கடினமாக வேலை செய்பவர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பதைக் காண்பதில் அவர்கள் நன்மையடைகின்றனர். கடவுளுக்கு நம்முடைய சேவையில் தளர்ந்துவிட அல்லது விட்டுவிட இது காலமல்ல என்பதை புதியவர்கள் போற்றுவதற்கு முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் முன்மாதிரி உதவி செய்கிறது. புதியவர்களாக இருந்தாலும் சரி அல்லது அனுபவமிக்க பிரஸ்தாபிகளாக இருந்தாலும் சரி, நம்முடைய தனிப்பட்ட கிறிஸ்தவ உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டு, எல்லா தேவராஜ்ய ஏற்பாடுகளையும் அனுகூலப்படுத்திக் கொண்டு ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைகிறோமா?
நாம் கற்றுக்கொள்வதைப் பிரயோகித்தல்
6 நாம் “கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும்” என்று யாக்கோபு எழுதுவதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே மோச யூதர்களிடம் சொன்னார்: “நீங்கள் இந்த வார்த்தைகளை பொருத்த வேண்டும்.” (யாக். 1:25; உபா. 11:18) ஆகையால் அறிவு மட்டுமே போதுமானதாயில்லை. யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலாக யூதர்கள் நியாயப்பிரமாண சட்டத்தின் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டியது தேவையாக இருந்தது. இந்த அடிப்படை நியமம் அப்படியே நிலைத்திருக்கிறது. கடவுளுடைய குமாரனாகிய இயேசு கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை நிச்சயமாகவே அறிந்திருந்தார். (யோவான் 8:28) அவர் மத்தேயு 7:24-ல் சொன்னார்: “ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனை புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.”
7 வட்டார மாநாடுகளில் என்ன கற்றுக்கொள்ளுகிறோமோ அவற்றை நாம் பிரயோகிக்கிறோமா? இந்தக் காலத்தில் நாம் விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை நாம் போற்றுகிறோமா? சாத்தான் வைத்திருக்கும் கண்ணிகளுக்கும், மறைமுகமான தாக்குதல்களுக்கும் நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கிறோமா? சபையில் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய சுத்தத்திற்கான தேவையைப் பற்றி அமைப்பு நமக்கு திரும்பத் திரும்ப கொடுக்கும் புத்திமதியையும், எச்சரிப்புகளையும் நாம் போற்றுகிறோமா? நாம் என்ன கேட்கிறோமோ அதை எந்த அளவுக்கு நாம் தனிப்பட்டவர்களாக பிரயோகிக்கிறோம்?—யாக். 1:23–25.
8 தற்போதைய விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சி நிரல், யெகோவா பரிசுத்தராயிருப்பதினால் நாமும் பரிசுத்தமுள்ளவர்களாயிருப்பதற்கான தேவையை அழுத்திக் காட்டுகிறது. (1 பேதுரு. 1:14–16) பரிசுத்தம் என்றால் மத சம்பந்தமான சுத்தம் அல்லது தூய்மை, புனிதம் என்று அர்த்தம். கடவுளின் சேவைக்கென தனியே பிரிந்து இருக்கும் ஒரு நிலையை இது குறிப்பிடுகிறது. நம்மிடம் நற்செய்தியின் ஊழியம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், சத்தியத்தின் பரிசுத்த வார்த்தையை எடுத்துச் செல்வதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்க நாம் ஆவிக்குரிய, ஒழுக்க மற்றும் உடல் சம்பந்தமாக சுத்தமாக இருக்க வேண்டும். நம்மை நாமே சாதாரணமாக கவனிப்பதைவிட அதிகமாக நாம் கவனிக்க வேண்டியதை இது தேவைப்படுத்துகிறது. (எபி. 2:1) அவ்வாறு நாம் செய்கையில், நம் தனிப்பட்ட முயற்சிக்கு ஏற்றவாறு ஆசீர்வாதங்களை நாம் பெறுவோம்.
தனிப்பட்ட படிப்பிலிருந்து பயனடையுங்கள்
9 தனிப்பட்ட படிப்பு பலமான விசுவாசத்தை வளர்க்க நமக்கு உதவி செய்கிறது, மேலும் சத்தியத்துக்காக நம் போற்றுதலை அது ஆழமாக்குகிறது. அது நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது, நாம் அதிகாரத்தோடு பேசுவதற்கு நம்மை தகுதியாக்குகிறது. அது நமக்கு உட்பார்வையையும் விவேகத்தையும் கொடுக்கிறது, புதிய ஆள்தன்மையையும் தரித்துக் கொள்வதற்கு நமக்கு உதவி செய்கிறது. (கொலோ. 1:9–11) என்றபோதிலும், பலன்தரும் படிப்புக்கு நேரமும் முயற்சியும் தேவை. திருத்தமான அறிவும், ஆவிக்குரிய ஆழமும் பெறுவதற்கு எந்த குறுக்குவழியும் இல்லை. நாம் படிப்புக்காக எதை செலவிடுகிறோமோ, அதை தான் நாம் அதிலிருந்து பெறுவோம்.—2 கொரி. 9:6, 7; கலா. 6:7.
10 சபை கூட்டங்களுக்கு தயாரிப்பதற்கு ஒவ்வொரு வாரமும் போதுமான நேரத்தை நாம் ஒதுக்கி வைக்கிறோமா? உண்மையும் விவேகமுமுள்ள ஊழியர் மூலமாக யெகோவா ஏற்பாடு செய்யும் ஆவிக்குரிய உணவுக்கு நாம் போற்றுதலைக் காண்பிப்பதற்கு இது ஒரு வழியாகும். கூட்டங்களுக்காக சரியாக தயாரிப்பது, கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கும், படிப்பதற்குமான அட்டவணையை பின்பற்ற நமக்கு உதவுகிறது. தேவராஜ்ய ஊழியப்பள்ளி நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வாசிப்பை நாம் செய்வதற்கு ஒவ்வொரு வாரமும் நாம் நேரத்தை ஒதுக்குகிறோமா? அந்தப் பகுதியை வாசித்து, தியானிப்பதற்கு வெறுமென ஒரு சில நிமிடங்களே ஒவ்வொரு நாளும் எடுக்கிறது. ஊழியக்கூட்டம் நம் பொது ஊழியத்தை நாம் திறம்பட்ட விதமாக ஆக்குவதற்கான வழிகளுக்கு நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க உதவுகிறது. ஊழியத்தில் இந்த விஷயங்களை நாம் எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதற்கு விசேஷ சிந்தனையைக் கொடுத்து நாம் தயாரிக்கிறோமா? அதை உடனடியாக உபயோகிப்பதற்கு நாம் முயற்சி எடுக்கிறோமா? காவற்கோபுரம் படிப்புக்கும், சபை புத்தகப் படிப்புக்கும் தயார் செய்வதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நாம் அதை செய்கிறோமா?
கூட்டங்களில் பங்கெடுங்கள்
11 நாம் கூட்டங்களில் பங்கெடுக்கும் போது, அவைகளிலிருந்து அதிக நன்மையடையலாம். கூட்டங்களுக்காக தயாரித்து, பின்பு பங்கெடுப்பதற்காக முயற்சி எடுப்பது, கூட்டங்கள் நடைபெறும் போது நம்மை கவனிக்க வைத்து, மற்றவர்களுடைய குறிப்புகளிலிருந்து நாம் பயனடைவதை அது சுலபமாக்குகிறது. ஒரு கூட்டத்தில் தங்கள் முதல் குறிப்பைச் சொல்வதற்கு அல்லது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் தங்கள் முதல் மாணாக்கர் பேச்சை கொடுப்பதற்கு, அவர்கள் செய்த கடின வேலையை அநேகர் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றனர். மனதிடமற்ற நிலை பெருமளவு தணிந்து இருக்க வேண்டுமென்றாலும், நம் ஆவிக்குரிய வளர்ச்சியை எல்லோருக்கும் வெளிப்படுத்திக் காட்ட நாம் தொடர்ந்து கடினமாக வேலை செய்கிறோமா? (1 தீமோ. 4:15) நம்முடைய குறிப்புகளால் மற்றவர்கள் பயனடைகின்றனர் மேலும் உற்சாகப்படுத்தவும் படுகின்றனர். கூட்டங்களில் சிந்திக்கப்படப் போகும் விஷயங்களைப் படித்து, நாம் நன்கு தயாரித்திருந்தோமேயானால், அவைகளில் நம்முடைய அர்த்தமுள்ள பங்கு மற்றவர்களை அன்புக்கும், நற்கிரியைகளுக்கும் தூண்டும்.—எபி. 10:23–25.
12 நம்முடைய குறிப்புகள் நீளமானதாகவும், சிக்கலானதாகவும் இருக்கக்கூடாது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியான பதிலைக் கொடுப்பதற்கு அல்லது ஒரு வேதவசனத்தின் பொருத்தத்தை தெளிவாக்க உதவி செய்வதற்கு, சுருக்கமான குறிப்புகளைச் சொல்வது சாதாரணமாக சிறந்ததாயிருக்கிறது. நாம் நன்கு தயாரித்திருப்போமேயானால், நம்முடைய சொந்த வார்த்தைகளில் குறிப்பு சொல்ல நம்மால் முடியும். நாம் அதை செய்யும்போது, நமக்கும் மற்றவர்களுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும். ஏன்? ஏனென்றால் நாம் என்ன சொல்லுகிறோமோ அதைப் பற்றி நாம் சிந்திப்பதையும், நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ அவ்வாறே அந்தக் குறிப்பை விளக்குவதையும் அது தேவைப்படுத்துகிறது. இது மற்றவர்கள் விஷயங்களை விளங்கிக் கொள்வதை சுலபமானதாக ஆக்கக்கூடும். மேலும், மற்றொரு சமயத்தில் அந்தத் தகவலை ஞாபகப்படுத்தி, உபயோகப்படுத்துவதற்கு அது நமக்கு உதவும்.
வெளி ஊழியத்தில் தாராளமாக விதையுங்கள்
13 நம்முடைய கிறிஸ்தவ ஊழியம், சேவையின் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. (2 கொரி. 4:7) நீங்கள் அந்த விதத்தில் அதை நோக்குகிறீர்களா? ஊழியத்தின் மூலம் நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் சிலாக்கியம் நமக்கிருக்கிறது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45) வெளி ஊழியத்தில் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருக்க நாம் செய்யும் தனிப்பட்ட முயற்சி, அநேக நன்மைகளை அறுவடை செய்ய நம்மை அனுமதிக்கிறது. சத்தியத்தைப் பற்றிய நம்முடைய புரிந்து கொள்ளுதல் கூர்மையாக்கப்படுகிறது, பைபிளை உபயோகிப்பதற்கு அதிகமான திறமையை நாம் வளர்த்துக் கொள்கிறோம். மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கொண்டு செல்வதிலும், தங்களுடைய மகத்தான சிருஷ்டிகரைப் பற்றி கற்றறிய அவர்களுக்கு உதவி செய்வதிலும் சந்தோஷம் நமக்கிருக்கிறது. கடவுளுடைய ஆட்சியின் சரியானத் தன்மைக்கும், அவருடைய சர்வலோக பேரரசுரிமைக்கும் நாம் சாட்சிகளாக இருக்கிறோம். நாம் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை அறிந்திருப்பதாலும், அவருடைய சாயலுக்கொப்பாய் மாறி அவருடைய சித்தத்தை செய்வதாலும் நாம் சந்தோஷமாக இருக்கிறோம்.—மத். 5:48.
14 நம்முடைய தனிப்பட்ட முயற்சியை நாம் தொடர்ந்து அளவிட்டுப் பார்ப்போமானால், யெகோவாவை நாம் வணங்குவது வெறும் பெயருக்கென்று செய்யும் ஒரு சேவையாக ஒருபோதும் ஆகாது. அது எதை அர்த்தப்படுத்துகிறது? கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக ஆவதில் நாம் அரை இருதயமுள்ளவர்களாக ஆகமாட்டோம், வெறுமென ஒரு வெளித்தோற்றமான சேவையை மட்டுமல்ல அல்லது இருதயப்பூர்வமான பக்தியும், முயற்சியும் அற்ற மிகக்குறைவான சேவையை அவருக்கு நாம் செய்ய மாட்டோம். யெகோவாவுக்கு நம்முடைய சேவை முழு இருதயத்தோடு இருக்க வேண்டும். அவருடைய சேவையில் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு வேதப்பூர்வமான கடமை நமக்கிருக்கிறது. (கொலோ. 3:23, 24) சூழ்நிலைமைகள் பல்வேறு வகையாய் இருக்கின்றன என்பது உண்மை, நம்மால் செய்ய முடிவதைவிட அதிகமாக யெகோவா நம்மிடம் கேட்பதில்லை. என்றபோதிலும், நாம் என்ன செய்ய முடியுமோ, அதை நாம் செய்யும்படி அவர் எதிர்ப்பார்க்கிறார்! (மத். 22:37) விழுந்து போன மானிட சுபாவம் சுய தியாகமற்ற மனச்சாய்வை உடையதாக இருப்பதால், கடவுளுக்கு நம்முடைய சேவையில் எங்கு முன்னேற்றங்கள் செய்யலாம் என்பதை பார்ப்பதற்கு அவ்வபோது நம்மையே ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அதைச் செய்வதை நாம் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோமா?
15 யெகோவாவின் சேவையில் நம் சிறந்ததைக் கொடுப்பதிலிருந்து நம்மை தடைசெய்யும் தனிப்பட்ட நாட்டங்கள் மற்றும் விருப்பங்களை அனுமதிப்பதை நாம் தவிர்க்க வேண்டுமென்றால் நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். இன்பங்கள், ஓய்வுநேர விருப்ப வேலைகள் மற்றும் பொழுபோக்கு வேலைகள் அவற்றிற்குரிய இடங்களில் வைக்க வேண்டும். உலகப்பிரகாரமான வேலைகளில் அளவுக்கு மீறி உட்பட்டுவிடும் மனப்போக்கிற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். மத்தேயு 6:22, 23-ல் உள்ள இயேசுவின் புத்திமதியை கடைபிடிப்பதன் மூலம், ஆவிக்குரிய அக்கறைகளை பின்தொடருவதில் அதிகமான முயற்சி எடுத்து, அதற்கு ஏற்றவாறு அறுவடை செய்வோம் என்பதில் சந்தேகமேயில்லை.
16 புதிய ஆள்தன்மையை தரித்துக் கொள்வதில் தொடர்ந்து கடினமாக வேலை செய்கையில், சபை கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் மற்றும் பிரசுரங்கள் மூலமாக நாம் பெறும் புத்திமதி மற்றும் ஆலோசனைகளைப் பொருத்துவதில் நம் சொந்த உத்தரவாதத்தை நாம் ஏற்றுக்கொள்வோம். நம்மில் ஒவ்வொருவரும் ஊக்கமாக படித்து, சுறுசுறுப்பாக கூட்டங்களில் பங்கெடுத்து, நம் தனிப்பட்ட சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்கு சீஷர்களை உண்டுபண்ணும் இந்தப் பெரிய வேலையில் பங்கு கொள்வோமாக. கடவுளுடைய அன்புக்கு இவ்வாறு போற்றுதலோடு பிரதிபலிப்பதன் மூலம், ஏராளமான ஆவிக்குரிய வெகுமானங்களை இப்பொழுது அறுவடை செய்து, யெகோவாவின் புதிய உலகில் நித்திய ஜீவன் என்ற உறுதியான நம்பிக்கையை காத்து வரலாம் என்று நாம் உறுதியளிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.