தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
மார்ச் 2 துவங்கி ஜூன் 15, 1992 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமர்சனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமர்சனத்தின்போது எந்த கேள்விக்கும் விடையளிக்க பைபிள் மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகளை எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளியுங்கள்:
1. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், எல்லா பாவங்களையும் பாவிகளையும் ஒரே வகையில் கருதினர். [8, si பக். 29 பா. 34 (1983 பதிப்பு, பக். 29 பா. 34 (1983 பதிப்பு, பக். 29 பா. 34)]
2. எண்ணாகமம் என்ற பெயர் சீனாய் மலையிலும் பின்னால் மோவாபின் சமவெளியிலும் ஜனங்களை எண்ணிக்கையிட்டதோடு சம்பந்தப்பட்டது. [10, si பக். 30 பா. 2 (பக். 30 பா. 2)]
3. எண்ணாகமம் நேர்மையின் முன்மாதிரியாக இருக்கிற போதிலும், மோசே தன் சொந்த குறைபாடுகளை மறைத்து வைத்தான். [11, si பக். 31 பா. 7 (பக். 31 பா. 7)]
4. நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ், பாவம் பாவநிவாரண பலிசெலுத்துவதையும், அறிக்கையிடுதலையும் மனந்திருப்புதலையும், கூடிய அளவில் இழப்பீடு செய்தலையும் தேவைப்படுத்தியது. [8, si பக். 29 பா. 32 (பக். 29 பா. 32)]
5. “யாவரறிய சபிப்பது” உண்மையில் தேவதூஷணம். (லேவி. 5:1) [வாராந்தர பைபிள் வாசிப்பு; W87 9/1 பக். 13 பாருங்கள்.]
6. “தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும்” பாவநிவாரண பலியாக ஒரு காளையைப் பிரதான ஆசாரியன் பலிசெலுத்தினது, கீழ்ப்பட்டுள்ள ஆசாரியர்களான “தன் வீட்டாருக்கும்” பயன்படுத்தும் இயேசுவின் பலியைச் சித்தரித்துக் காட்டியது. (லேவி. 16:6) [6, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 3/1 பக். 24-ஐ பாருங்கள்.]
7. ஒரு சகோதரனுக்கு வட்டி விதிப்பது ஒருபோதும் சரியல்ல. (லேவி. 25:35-37) [9, வாராந்தர பைபிள் வாசிப்பு; W84 2/15 பக். 13-ஐ பாருங்கள்.]
8. குஷ்டரோகிகளின் மற்றும் தீட்டுப்பட்ட வீடுகளின் சுத்திகரிப்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் நோய்க் கிருமிகள் இருப்பதைப் பற்றிய உணர்வைக் எதிராகப் பாதுகாத்து. (லேவி. அதி. 14) [5, வாராந்தர பைபிள் வாசிப்பு; g81 9/22 பக். 25-ஐ பாருங்கள்.]
9. உடன்படிக்கை பெட்டியின் மூடியின் மீதிருந்த கேருபீன்களுக்கு இடையில் அல்லது மேல், அற்புதமான ஷெக்கீனா ஒளி, மகா பரிசுத்த ஸ்தலத்தில் கடவுளுடைய சமூகத்தின் அடையாளமாகத் தோன்றினது. (எண். 7:89) [12, வாராந்தர பைபிள் வாசிப்பு; kj பக். 165-ஐ பாருங்கள்.]
10. இஸ்ரவேலர், மோவாபியர், எகிப்தியர், அல்லது மற்றவர்களுக்கு ஒத்த நடையுடைபாணியில் தாங்கள் இராதபடியும் தாங்கள் வேறுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென்பதைத் தங்களுக்கு நினைப்பூட்டிக்கொள்ளவும் தங்கள் வஸ்திரங்களின் “ஓரங்களிலே தொங்கல்களை” உண்டாக்க வேண்டும். (எண். 15:38-40) [14, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 7/1 பக். 16-ஐ பாருங்கள்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடை கொடுங்கள்
11. லேவியராகமம் எவ்வாறு யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துகிறது? [2, si பக். 26 பா. 9 (பக். 26 பா. 9)]
12. ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, பிரதான ஆசாரியர் இயேசுகிறிஸ்துவும், அவருடைய கீழ்ப்பட்ட ஆசாரியர்களும் என்ன ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றுவார்கள்? [9, பக். 30 பா. 39 (பக். 30 பா. 39)]
13. கொழுப்பைச் சாப்பிடக்கூடாதென்ற தடையுத்தரவு இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு எதை நினைப்பூட்டுகிறது? (லேவி. 3:17) [1, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 3/1 பக். 23-ஐ பாருங்கள்.]
14. நாதாபும் அபியூவும் செய்த பாவத்தில் என்ன உட்பட்டிருக்கலாம்? (லேவி 10:1, 2) [4, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 3/1 பக். 24-ஐ பாருங்கள்.]
15. பிள்ளைப்பெறுவது ஒரு பெண்ணை ஏன் ‘தீட்டுப்படுத்தினது’? (லேவி. 12:2, 5) [4, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 3/1 பக். 24-ஐ பாருங்கள்.]
16. தன் பெற்றோரைச் ‘சபிக்கிற எவருக்கும்’ ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது? (லேவி. 20:9) [7, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 பக். 24-ஐ பாருங்கள்.]
17. ‘பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் அப்பத்தைச் சுடுவது’ எதைக் குறிக்கிறது? (லேவி. 26:26) [9, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 3/1 பக். 25-ஐ பாருங்கள்.]
18. கூஷ் தேசத்துப் பெண்ணாயிருந்த மோசேயின் மனைவியினிமித்தம் மிரியாம் ஏன் அவனுக்கு எதிராகப் பேசினான்? (எண். 12:1,. தி. மொ.) [13, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL 84 பக். 26-ஐ பாருங்கள்.]
19. எந்த முக்கியமான உண்மையைக் கோராகு மதியாமற்போனான்? (எண். 16:1-3) [15, வாராந்தர பைபிள் வாசிப்பு; W78 11/15 பக். 14-ஐ பாருங்கள்.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் நிறைவாக்குவதற்கு தேவைப்படும் சொல்லை அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
20. லேவியராகமத்தை மோசே------------------ஆண்டில் எழுதினான். [1, si பக். 25 பா. 4 (பக். 25 பா. 4)]
21. ----------என்பதே லேவியராகமம் முழுவதிலும் முக்கிய பொருளாக உள்ளது. இந்தத் தேவையை இது, பைபிளின் மற்ற எந்தப் புத்தகத்தைப் பார்க்கிலும் அதிக தடவைகளை குறிப்பிடுகிறது. [2, si பக். 26 பா. 9 (பக். 26 பா. 9)]
22. லேவியராகமத்திலுள்ள தீர்க்கதரிசன மாதிரிகள் பலவற்றின் நிறைவேற்றங்கள்--------புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. [9, si பக். 29 பா. 37 (பக். 29 பா. 37)]
23. எண்ணாகமம் பொ.ச.மு.------------லிருந்து---------வரையான காலப்பகுதியை அடக்குகிறது. [10, si பக். 30 பா. 4 (பக். 30 பா. 4)]
24. எண்ணாகமத்தில், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையான மற்றும் கலகத்தனமான போக்கு----------இன்றியமையாதத் தேவையை அறிவுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. [11, si பக். 31 பா. 9 (பக். 31 பா. 9)]
25. ----------ஆகியவற்றைக் குறித்து லேவியராகமத்திலுள்ள சட்டங்கள், உலகப்பிரகாரமான மருத்துவ ஆட்கள் அதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே தெரிந்துணர்ந்த உண்மைகளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறது. [2, si பக். 26 பா. 7 (பக். 26 பா. 7)]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் திருத்தமான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
26. லேவியராகமம் புத்தகத்தில் அடங்கிய காலம் (40 ஆண்டுகள்; ஓர் ஆண்டு; ஒரு மாதம்). [1, si பக். 25 பா. 4 (பக். 25 பா. 3)]
27. எண்ணாகமத்தை மோசே பொ.ச.மு. (1513; 1512; 1473)-ம் ஆண்டில் எழுதி முடித்தான். [10, si பக். 30 பா. 4 (பக். 30 பா. 4)]
28. ‘ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்துவது’ உபவாசமிருப்பதை; தன்னைத்தான் அடித்துக்கொள்வதை; பொழுது போக்கு நடவடிக்கைகளைத் தவிர்ப்பதைக்) குறித்ததென தெரிகிறது. (லேவி. 16:29) [6, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 5/1 பக். 24-ஐ பாருங்கள்.]
29. ஒரு ஸ்திரீயின் ‘தொடை சூம்புவது’ (அவள் யெகோவாவைச் சேவிப்பதை விட்டு விலகுவாள்; அவள் தன் காலின் உபயோகத்தை இழந்தாள்; அவளுடைய பிள்ளை பிறப்பிக்கும் உறுப்புகள் சத்தின்றி தோய்ந்து போய், கர்ப்பந்தரித்தலைக் கூடாததாக்குவது) என உண்மையில் குறித்தது. (எண். 5:21, தி. மொ.) [11, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 5/1 பக். 25-ஐ பாருங்கள்.]
30. “யெகோவாவின் யுத்த புஸ்தகம்” (விசுவாசத்துரோகம் சம்பந்தப்பட்டது; நம்பத்தக்க சரித்திரப்பூர்வ பதிவு பைபிள் கதைகளின் ஒரு கற்பனைக்கதை இலக்கிய பதிவு). (எண். 21:14, 15, தி. மொ.) [16, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 5/1 பக். 26]
பின்வரும் வேதவாக்கியங்களைக் கீழ்க்கொடுத்துள்ள கூற்றுகளோடு பொருந்த இணையுங்கள்:
லேவி. 2:11, 12; லேவி. 17:10-14; லேவி. 19:32; எண் 15:30, 31; எபி. 13:11
31. இரத்தம் பரிசுத்தமானதால், எந்த வகையிலும் அதை உடலுக்குள் ஏற்கக்கூடாது. [8, si பக். 29 பா. 33 (பக். 29 பா. 33)]
32. பிராயச்சித்த நாளில் பாவநிவாரண பலிசெலுத்தப்பட்ட மிருகங்களின் உடல்களை பாளையத்துக்குப் புறம்பே எடுத்துச் சென்று சுட்டெரிக்கப்பட்டன. [9, si பக். 29 பா. 38 (பக். 29 பா. 38)]
33. “தேன்” பழப் பாகுவைக் குறிக்கையில், புளித்துப்போகக்கூடும். இதன் விளைவாக, பலிசெலுத்துவதற்கு ஏற்கத்தகாததாகும். [1, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL84 5/1 பக். 23-ஐ பாருங்கள்]
34. முதியோருக்கு மரியாதைக் காட்டுவது இஸ்ரவேலில் ஜனத்துக்குரிய பொதுநடத்தைப்போக்காக இருந்தது. [15, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL87 6/1 பக். 5-ஐ பாருங்கள்.]
35. கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே மீறி மனந்திருப்பாதவர்கள் கொல்லப்பட்டனர். [14, வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL91 4/15 பக். 15-ஐ பாருங்கள்.]