உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/91 பக். 2
  • மே மாத ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே மாத ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • துணை தலைப்புகள்
  • மே 11-ல் துவங்கும் வாரம்
  • மே 18-ல் துவங்கும் வாரம்
  • மே 25-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 1-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 5/91 பக். 2

மே மாத ஊழியக் கூட்டங்கள்

மே 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 186 (101)

12 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து அறிவிப்புகளும். “மே உங்களுக்கு விசேஷ மாதமாக இருக்குமா?” துணைப் பயனியர் ஊழிய விண்ணப்பங்களை உடனடியாக கொடுக்கும்படி அழுத்திக் காட்டுங்கள். மாலை நேர சாட்சி கொடுக்கும் வேலையையும் உற்சாகப்படுத்துங்கள், அதற்காக செய்யப்பட்டிருக்கும் சபை ஏற்பாடுகளை அறிவியுங்கள்.

15 நிமி: “காவற்கோபுரம் பத்திரிகையோடு நற்செய்தியை அறிவியுங்கள்.” கட்டுரையின்பேரில் கேள்வி-பதில் சிந்திப்பு. பிரசுரங்களில் உண்மையான அக்கறை காண்பித்து, சந்தா பெற்றுக்கொள்ள விருப்பமாயிருக்கும் நபர்களுக்கு சிந்தனையார்ந்த கவனம் செலுத்தும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.

18 நிமி: “ஞாபகார்த்த நாளைப் பின்தொடர்ந்து செயல்படுங்கள்.” நடிப்போடு கூடிய பேச்சு. பாரை 7-ஐ சிந்தித்துப் பிறகு, ஞாபகார்த்த தினத்துக்கு முதல் முறையாக ஆஜரான ஒரு புதிய நபரிடம் பிரஸ்தாபி எவ்வாறு மறுசந்திப்பு செய்யலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.

பாட்டு 208 (6), முடிவு ஜெபம்.

மே 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 209 (84)

10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி.

15 நிமி: “பலன்தரும் முதல் சந்திப்புகள்.” கேள்வி-பதில் சிந்திப்பு. பாரா 6-ஐ சிந்தித்தப் பிறகு, சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை அளித்து எவ்வாறு ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்தலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.

20 நிமி: காவற்கோபுரம் பத்திரிகையை வீட்டுக்கு வீடு அளித்தல். “பலன்தரும் முதல் சந்திப்புகள்” என்ற கட்டுரையில் பாரா 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்பை உபயோகித்து தகுதிவாய்ந்த பிரஸ்தாபி வீட்டுக்காரரோடு சம்பாஷிக்கிறார். (இந்திய மொழிகளில் கிடைக்கக்கூடிய தற்போதைய பத்திரிகையை உபயோகியுங்கள், அதில் இருக்கும் பொருளுக்கு ஏற்ப பிரசங்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.) வீட்டுக்காரர் மற்ற பத்திரிகைகளுக்கு ஏற்கெனவே சந்தா செய்திருப்பதாகவும், இன்னும் கூடுதலான பத்திரிகைகள் வேண்டாம் என உணருவதாகவும் தெரிவிக்கிறார். பிரஸ்தாபி நிலைமையை தான் புரிந்து கொள்வதாக சொல்லி, ஒரு துண்டுப்பிரதியை கொடுத்துவிட்டுச் செல்கிறார். மறுபடியும் வந்து இந்தப் பொருளைக்குறித்து கூடுதலாக கலந்தாலோசிப்பதாகவும் கூட சொல்கிறார். நடிப்புக்குப்பிறகு, அந்நிலைமையைக் கையாளுவதற்கு எது சிறந்த முறையாக இருந்திருக்கும் என்று நடத்துபவர் சபையாரைக் கேட்கிறார். குடும்பத்துக்கு அதிக பயனுள்ளதாயிருக்கும் பிரசுரங்கள் மட்டும் சந்தா மூலம் வருவதற்கு ஒருவர் பிரசுரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்நாட்களில் இருக்கிறது என்பதை சொல்வதன் மூலம் பிரச்னையை கையாண்டிருக்கலாம். இப்படிப்பட்ட பத்திரிகைகள் வீட்டுக்கு வருவதன் மூலம் பெறப்படும் நிறந்தரமான நன்மைகளை சிறப்பித்துக்காட்டும் குறிப்புகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்துக்காட்டுங்கள். சந்தா பெற்றுக் கொள்ள மறுத்தால், இரண்டு பத்திரிகைகளையும் ஒரு புரோஷூருடன் சேர்த்து விட்டு வருவது நல்லது. இவைகளும் மறுக்கப்பட்டால் மட்டுமே நாம் பொதுவாக ஒரு துண்டுப்பிரதியை அளிப்போம்.

பாட்டு 87(47), முடிவு ஜெபம்.

மே 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 195 (105)

10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். சங்கத்துக்கும், சபைக்கும் கொடுத்த நன்கொடைகளுக்காக பாராட்டு தெரிவிக்கவும்.

15 நிமி: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 32-33-ல் உள்ள “அந்திக்கிறிஸ்து” என்பதன் பேரில் உள்ள பொருளை கலந்தாலோசியுங்கள். “அந்திக்கிறிஸ்து” என்ற சொல்லின் விளக்கம் என்ன? ஒருவன் மட்டும் தான் இருக்கிறானா அல்லது அதற்கும் அதிகமானோர் இருக்கின்றனரா? அந்திக் கிறிஸ்து எப்போது தோன்றினான், யார் அப்படிப்பட்டவராக காட்டப்படுவர்? யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி எச்சரிக்கப்பட்டிருந்த சர்ச் செல்பவரை பிரஸ்தாபி சந்திப்பதுபோல் சுருக்கமான நடிப்பு.

20 நிமி: “ஆவிக்குரிய விதத்தில் பலமாய் இருங்கள்.” சேர்க்கை கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. தகவலை சபைக்கு பொருத்துவதற்கு இப்பகுதியை கையாளும் மூப்பர் சில கேள்விகளை தயாரிக்க வேண்டும். ஆவிக்குரிய பலத்தை காத்துக்கொள்வதற்கு பாரா 7-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைந்த பட்சம் இலக்கை அழுத்திக் காட்டுங்கள்.

பாட்டு 197(22), முடிவு ஜெபம்.

ஜூன் 1-ல் துவங்கும் வாரம்

பாட்டு 169 (32)

10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். ஞாபகார்த்த நாள் சிறப்பு அம்சங்களை அறிவியுங்கள். எத்தனை பேர் ஆஜராயிருந்தனர்? புதியவர்களோடு பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? தற்போது படித்துக் கொண்டிராத ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்களின் பேரில் மறுசந்திப்புகள் செய்வதற்கு ஊழிய கண்காணி ஏற்பாடு செய்யவேண்டும்.

20 நிமி: “மறுசந்திப்புகளில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை உபயோகியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நன்கு ஒத்திகைப் பார்க்கப்பட்ட இரண்டு நடிப்புகளை பாராக்கள் 3, 4-ல் முக்கிய பகுதியாய் சிறப்பித்துக் காண்பியுங்கள்.

15 நிமி: ஏப்ரல், மே மாதங்களின் போது துணைப் பயனியர் ஊழியம் செய்தவர்களிடமிருந்து அனுபவங்களை கேளுங்கள். அவர்கள் என்ன தியாகங்களை செய்தனர், யெகோவா அவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார் என்று அவர்கள் எவ்வாறு உணர்கின்றனர். அந்த மாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வேலையின் விளைவாக ஏதாவது புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா? அனுபவங்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். வரப்போகும் மாதங்களின் போது துணைப் பயனியர் ஊழியம் செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 90 (48), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்