மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு நம்முடைய உத்தரவாதத்தை மேற்கொள்ளுதல்
1 அப்போஸ்தலனாகிய பவுல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “அன்றியும் நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்.” (எபி. 13:16) இக்கட்டான சூழ்நிலைமைகளின் கீழும்கூட தங்கள் சகோதரர்களுக்கு உதவி செய்வதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், கடவுளுக்கான அவர்களுடைய அன்பையும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பையும் வலுப்படுத்தும். (யோ. 13:35) நாமும்கூட மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் உற்சாகப்படுத்தப்படுகிறோம்.
2 இதை செய்ய, நாம் ஆவிக்குரிய விதத்தில் நன்கு போஷிக்கப்பட்டவர்களாயும், நல்ல தகுதியுள்ளவர்களாயும் இருப்பதற்கு யெகோவா நமக்காக ஏற்பாடு செய்திருக்கிறார். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியிலும் என்னே அபரிமிதமான தகவலை நாம் கொண்டிருக்கிறோம்! அதை பெற்றுக்கொண்டவுடனேயே ஒவ்வொரு இதழையும் வாசிப்பதில் நாம் என்னே சந்தோஷத்தை அடைகிறோம்! வேதப்பூர்வமான தகவலின் பேரில் தியானம் செய்கையில், வெளி ஊழியத்திலும் மற்றவர்களோடு நம்முடைய சம்பாஷணைகளிலும் உபயோகிப்பதற்கான குறிப்புகளை நாம் குறித்துக்கொள்ளலாம். அதே போன்று, ஒவ்வொரு கூட்டத்துக்கும், விசேஷமாக காவற்கோபுரம் பத்திரிகையின் வாராந்தர சிந்திப்புக்கும் தயார் செய்வதற்கு நாம் நேரத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளக்கூடும். கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பது, “கிறிஸ்துவின் சிந்தை”யை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது, மேலும் நாம் சந்திக்கும் நபர்களிடம் நலமான காரியங்களை தெரிவிப்பதற்கும் நம்மால் முடிகிறது.—1 கொரி. 2:14–16; சங். 19:14.
3 ஏற்றுக்கொள்ளத்தக்க தகுதியான உத்தரவாதங்கள்: யெகோவாவை நேசிக்கும் அனைவரும் தங்கள் ஜீவன்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கின்றனர். ஒப்புக்கொடுத்தலோடு சம்பந்தப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் யெகோவாவுக்காக வாழ்கிறோம் என்பதையும் சாத்தானின் உலகத்திலிருந்தும் அதன் வெறுப்பூட்டும் வழிகளிலிருந்தும் நாம் நம்மை பிரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் வெளிக்காட்டுகிறோம். கிறிஸ்து இயேசுவினால் விட்டுச்செல்லப்பட்ட மாதிரியை பின்பற்றுவதன் மூலம், மற்றவர்களுக்கு நாம் ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறோம். (1 பேதுரு 2:21) “நம்முடைய சொந்த உத்தரவாத சுமையை சுமத்தல்” என்ற பொருளையுடைய 1992-ம் ஊழிய ஆண்டுக்காக திட்டமிடப்பட்டுள்ளதைப் போன்ற வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்கள் நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்ப வாழும்படி நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
4 சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவது, ஒருவரோடொருவர் கட்டியெழுப்பும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நம்மை அனுமதிக்கிறது. நம்முடைய தனிப்பட்ட படிப்பு மற்றும் கூட்டங்களுக்காக தயாரிப்பது, நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல தகவலை நமக்கு அதிகமாக கொடுக்கும். மற்றவர்களில் அப்பேர்ப்பட்ட தனிப்பட்ட அக்கறையை காண்பிப்பது, ஓர் அனலான, சிநேகப்பான்மையான குடும்ப ஆவியை வளர்க்கிறது. கூட்டங்களில் பங்குகொண்டு அளிப்பதன் மூலம், எபிரெயர் 10:24, 25-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகளை நாம் உண்மையிலேயே ஒத்துக்கொள்ளுகிறோம் என்பதையும், மேலும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு நம்முடைய உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் நாம் காண்பிக்கிறோம்.
5 கூடுதலான உத்தரவாதங்களை அடைய நாடுங்கள்: 1992-ம் ஊழிய ஆண்டின் போது, துணைப்பயனியர் அல்லது ஒழுங்கான பயனியர் சேவை செய்வது போன்ற கூடுதலான உத்தரவாதங்களை நாம் அடைய நாட முடியுமா? மணிநேரத் தேவையின் பேரில் மட்டுக்கு மீறி அழுத்தம் வைப்பதற்கு மாறாக, கூட்டிச்சேர்க்கும் வேலையில் பங்குகொள்வதற்கு அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தின் பேரில் ஏன் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடாது? (யோ. 4:35, 36) மற்ற தகுதிவாய்ந்த பிரஸ்தாபிகளோடும் பயனியர்களோடும் ஒழுங்காக வேலை செய்வது, ஊழியத்தில் நம்முடைய திறமைகளை மேம்படுத்துவதற்கு நமக்கு உதவி செய்யும். துணைப்பயனியர்களின் அதிகமான எண்ணிக்கையும், சபைக்கு ஓர் ஆரோக்கியமான தூண்டி எழுப்புதலாக சேவிக்கிறது. கூடுமானால், ஓர் ஒழுங்கான பயனியராகவோ அல்லது ஒழுங்கான அடிப்படையில் ஒரு துணைப்பயனியராகவோ அல்லது அவ்வப்போது ஒரு துணைப்பயனியராகவோ இந்த வருடம் ஏன் சேவை செய்யக்கூடாது?
6 ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட, தகுதிவாய்ந்த சபையின் ஆண் அங்கத்தினர்களுக்கு உத்தரவாதங்கள் உடனடியாக அளிக்கப்படுகின்றன. (1 தீமோ. 3:1–10, 12, 13) கூட்டங்களில் நன்கு சிந்திக்கப்பட்ட குறிப்புகளை சொல்வதன் மூலமும், தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் பங்கெடுப்பதன் மூலமும், ஊழியக்கூட்டத்தில் ஒரு நடிப்பை அளிப்பதற்கோ அல்லது மற்ற பாகங்களை கவனித்துக் கொள்வதற்கோ நியமிப்புகள் கொடுக்கப்படும் போது அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமும், எல்லாரும் சேவை செய்வதற்கான தங்கள் மனமுவந்த விருப்பதை காண்பிக்கலாம். பிள்ளைகளும்கூட இந்த வழிகளிலும், ராஜ்ய மன்றத்தில் தங்களுடைய நடத்தையின் மூலமும் முன்மாதிரிகளாக இருக்கலாம். ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதற்கோ அல்லது மற்ற தேவைகளை கவனித்துக் கொள்வதற்கோ நியமிக்கப்படும்போது, தங்கள் புத்தகப்படிப்பு தொகுதியோடு வேலை செய்வதில் அவர்கள் உதவியாயிருக்கலாம்.—km 4/76 பக். 1, 8.
7 “எனக்கு சித்தமுண்டு” என்ற வார்த்தைகளைக் கொண்டு, மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு தன் மனமுவந்த விருப்பத்தை இயேசு தெரிவித்தார். (லூக். 5:12, 13) அவருடைய முன்மாதிரியை பின்பற்றி, நாமும்கூட நம்முடைய சகோதரர்கள், அக்கறை காண்பிப்பவர்கள், வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கும் உண்மை மனதுள்ள ஜனங்கள் ஆகியோர் யெகோவாவின் அமைப்போடு ஒழுங்காக கூட்டுறவு கொள்வதற்கு உற்சாகப்படுத்தி, உதவி செய்யலாம். “யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” என்ற நம்முடைய உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வது, நம்முடைய பங்கில் உறுதியான முயற்சியையும், தனிப்பட்ட தியாகத்தையும் தேவைப்படுத்துகிறது. (கலா. 6:10) ஆனால் விளையும் நன்மையை காணும்போது, “இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்ற பவுலின் வார்த்தைகளை நாம் ஒத்துக்கொள்ளலாம்.—எபி. 13:16.