தேவராஜ்ய செய்திகள்
◆ ஆஸ்திரேலியா மார்ச் மாதத்தில் 54,306 பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலையை அறிக்கை செய்தது, இது தொடர்ச்சியான மூன்றாவது உச்சநிலையாகும்.
◆ இந்த ஊழிய வருடத்தின் முதல் ஏழு மாதங்களின் போது பொலிவியா பிரஸ்தாபிகளில் ஐந்து உச்சநிலைகளைக் கொண்டிருந்தது. 8,031 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தலோடு, ஒரு புதிய உச்சநிலை மார்ச் மாதத்தில் எட்டப்பட்டது. சபை பிரஸ்தாபிகள் ஊழியத்தில் 14.4 மணிநேரங்கள் சராசரியாக செய்தனர். ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்கள் 33,377 பேர். இது பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கையைவிட நான்கு மடங்குக்கு மேல் அதிகம்.
◆ ஒன்பது வருட தடைகளுக்குப் பின் நிக்கராகுவா மறுபடியும் ஒரு கிளைக்காரியாலயமாக மே 1, 1991-லிருந்து வேலை செய்ய ஆரம்பித்தது. நிக்கராகுவாவுக்கு முன்பு அனுப்பப்பட்ட 5 மிஷனரிகள் தொடர்ந்து மிஷனரி சேவை அங்கு செய்வதற்கு திரும்பிச் செல்ல முடிந்தது.