சத்திய வார்த்தையைத் திறமையாகக் கையாளுங்கள்
1 கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் நம்முடைய திறமைதானே மக்கள் நற்செய்திக்குப் பிரதிபலிக்கும் விதத்தைப் பாதிக்கக்கூடும். “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வார்த்தையைச் சரியாகக் கையாளுபவனாக உன்னைத் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டவனாய் நிறுத்தும்படி, உன்னாலானவற்றையெல்லாம் செய்” என்று சொல்வதன் மூலம் பவுல் ஊழியத்தில் செயல்திறமையை வளர்த்துக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தினான்.—2 தீமோ. 2:15, NW.
2 பைபிளை உபயோகிப்பதில் திறமை வளர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட படிப்புக்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதற்கும் நேரத்தை ஒதுக்கிவைப்பது இன்றியமையாதது. என்றபோதிலும், ஊழியத்தில் பைபிளை ஒழுங்காக உபயோகிப்பதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை நடைமுறை பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும். இது கடவுளுடைய உதவியையும் வழிநடத்துதலையும் நாம் நாடுகையில் தொடர்ச்சியான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது.—1 யோ. 3:22.
3 கடவுளுடைய வார்த்தையினிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துதல்: நம்முடைய செய்தி நம் சொந்த கற்பனை மூலத்தையுடையது அல்ல, ஆனால் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையிலிருந்து வருகிறது என்பதை மக்கள் உணருவது முக்கியம். (யோ. 7:18) பைபிளில் இருக்கும் ஒரு பொருளின் பேரில் கடவுள் என்ன சொல்கிறார் என்பதை ஒரு நபருக்குக் காண்பிப்பது பெருத்த செயல் விளைவுகளைக் கொண்டிருக்கலாம். நேர்மை இருதயமுள்ள மக்கள், பைபிளின் வல்லமையான செயலிடமாக இழுக்கப்படுகின்றனர். வேதாகமத்தை நாம் அதிகமாக உபயோகிக்கையில், நாம் அதிக திறமையுள்ளவர்களாக ஆகிறோம். கடவுளுடைய வார்த்தையை நாம் மற்றவர்களுக்கு அதிகமாக வெளிப்படுத்துவோம். அது அவர்களுக்குப் பயனளிக்கக்கூடியதாய் இருக்கும்.
4 அநேகர் பைபிளோடு அறிமுகமாய் இல்லை. அதை உபயோகிக்கையில் வெறுமென வசனங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், நாம் அதிகத்தைச் செய்ய வேண்டும். ஒரு வசனத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதை நிர்ணயிக்க, சிந்தனையுள்ள தயாரிப்பு அவசியமாயிருக்கிறது. அக்கறையைத் தூண்டுவதற்கு, கேள்விகளை அல்லது குறிப்பிட்ட ஒரு பிரச்னையை உபயோகிக்கலாம். வசனத்தை வாசித்த பின்னர் நாம் என்ன சொல்கிறோம் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். வெறுமென ஒருமுறை வாசிப்பதிலேயே அந்த நபர் குறிப்பைக் கிரகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம் முக்கியமான வார்த்தைகளை மறுபடியும் அழுத்துவதும், அதைப் பொறுத்துவதும், கருத்துகளை ஆழ பதிய வைப்பதற்கு உதவும்.—பள்ளி துணைநூல் (School Guidebook) படிப்புகள் 24 மற்றும் 25.
5 அளிப்பு: டிசம்பர் மாதத்தின் போது உண்மையிலேயே அக்கறையுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்கும்போது, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) மற்றும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s?) ஆகியவற்றை அளிப்போம். நாம் எவ்வாறு மக்களை இந்த அளிப்போடு அணுகலாம்? நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு நாம் இவ்வாறு சொல்லலாம்: “இன்று அநேகர் வழிநடத்துதலுக்காக பலவகையான ஆட்களையும் அல்லது பிரசுரங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றனர். நடைமுறையான வழிநடத்துதலுக்கு சிறந்த ஊற்றுமூலம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] ஞானத்தின் மெய்யான ஊற்றுமூலத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைச் சிந்தியுங்கள். [நீதிமொழிகள் 2:6, 7-ஐ வாசிக்கவும்.] மனித ஞானம் விசனகரமாக குறைவுள்ளதாய் நிரூபித்திருக்கிறது, அது இன்னல்களுக்கும் மனமுறிவுக்கும் வழிநடத்தியிருக்கிறது. ஆனால் கடவுளுடைய ஞானமோ எல்லா சமயத்திலும் நம்பத்தகுந்ததாயும் பயனுள்ளதாயும் நிரூபித்திருக்கிறது. [ஏசாயா 48:17, 18-ஐ வாசிக்கவும்.] ஆகையால், நம்மை எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளை எடுத்துச் சமாளிப்பதற்குத் தேவையான வழிநடத்துதலை கொடுக்கும் கடவுளை நாம் நோக்கியிருக்க வேண்டும்.” பிறகு நாம் கடவுளுடைய வார்த்தை புத்தகத்தில் 12-ம் அதிகாரத்துக்குத் திருப்பி, பாரா 2-க்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்பலாம். அதற்குப் பிறகு, அந்த அதிகாரத்திலிருந்து ஒரு பொருத்தமான குறிப்பை இணைக்கலாம்.
6 கடவுளுடைய ஞானத்தின் மேம்பட்ட தன்மையைச் சிறப்பித்துக் காட்டுவதற்கு நீதிமொழிகள் 2:6, 7-ஐ உபயோகித்தப் பிறகு புதிய உலக மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் ஏன் பைபிளுக்கு மதிப்பு கொடுத்து அதைப் பொக்கிஷமாக கருதுகிறீர்கள் என்பதை வீட்டுக்காரருக்கு விளக்குங்கள். அதனுடைய போதனைகள் அவருக்கு பயனளிக்கும் என்பதையும் எதிர்காலத்துக்கு ஓர் உறுதியான நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அப்படிப்பட்ட ஒரு கலந்தாலோசிப்பு அன்றாட பிரச்னைகளின் பேரில் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு வாய்ப்புகளை ஒருவேளை திறந்து வைத்து, ஒரு பைபிள் படிப்புக்கு வழிநடத்தக்கூடும்.
7 நேர்மை இருதயமுள்ள நபர்களுக்கு உதவி செய்வதற்கும், தன்னை எதிர்ப்பவர்களை மறுத்து வாதிடுவதற்கும் இயேசு எப்போதும் வேதவசனங்களை மேற்கோள் காட்டினார். தான் கற்பித்த காரியங்களை ‘மேற்கோள்களுடன் நிரூபிப்பதும் விளக்குவதும்’ பவுலுடைய வழக்கமாயிருந்தது. (அப். 17:2, 3) சத்திய வார்த்தையை கையாளுவதில் அதிக திறமையுள்ளவர்களாக ஆவதற்கு நாம் ஊக்கமாக முயற்சி செய்கையில் ஊழியத்தில் நம்முடைய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.