வெளி ஊழியத்துக்காகத் தயாரிப்பதன் பேரில் ஒருநடைமுறையான அணுகுமுறை
1 என்ன சொல்வது என்று தெரியாததன் காரணமாக வெளி ஊழியத்தின் ஏதோவொரு அம்சத்தில் பங்கு கொள்வதற்கு நீங்கள் சில சமயங்களில் தயங்குகிறீர்களா? அப்படியிருந்தால், நம் ராஜ்ய ஊழியம் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அணுகுமுறையை நீங்கள் போற்றுவீர்கள் என்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.
2 வீட்டுக்கு வீடு ஊழியம், மறு சந்திப்பு, பைபிள் படிப்பு ஆகியவற்றில் ராஜ்ய செய்தியை அளிப்பதற்கு, இந்த இதழ் முதற்கொண்டு, நம் ராஜ்ய ஊழியம் பல்வேறு வகையான ஆலோசனைகளை மிகப் பெரிய அளவில் அளிக்கும். வெளி ஊழியத்தில் என்ன கூற்றுகளை நீங்கள் உபயோகிக்க விரும்புவீர்கள் என்பதன் பேரில் இவை உங்கள் சிந்தனையைத் தூண்ட வேண்டும். ஊழியத்துக்காகத் தயாரிக்கும் போது, உங்களுடைய பிராந்தியத்துக்கு நன்கு பொருந்தகூடிய ஒரு அளிப்பைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து, கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை நீங்கள் உபயோகிப்பீர்களா அல்லது உள்ளூர் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு வார்த்தைகளை மாற்றிக் கொள்வீர்களா அல்லது உங்களுடைய சொந்த ஆள்தன்மைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வீர்களா என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த வார்த்தைகளில் இயல்பான முறையில் நீங்கள் தெரிவித்தீர்களானால், உங்களுடைய அளிப்பு அதிக சம்பாஷணை நடையில் தொனிக்கும். முதல் முறையாக ஏதோவொரு அம்சத்தில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் உங்களுடைய ஊழியத்தை ஏதாவது ஒரு விதத்தில் விஸ்தரிக்க விரும்புகிறீர்களா? அளிக்கப்பட்டிருக்கும் விவரமான ஆலோசனைகள் தானே ஒருவேளை தொடங்குவதற்குத் தேவையானவையாய் இருக்கக்கூடும்.
3 சபையின் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களில் ஒன்றை நீங்கள் நடத்துவீர்களானால், நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய பிரதியை நன்கு படியுங்கள், உள்ளூருக்கு அதிக பயனுள்ளதாயிருக்கக்கூடிய ஆலோசனைகளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள்.
4 நாம் நன்றாக செய்யும் காரியங்களை நாம் அனைவருமே அனுபவித்து மகிழ்கிறோம். இந்த நடைமுறையான அணுகுமுறை, புதிய பிரஸ்தாபிகளும் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகளும் தங்களுடைய ராஜ்ய ஊழியத்தில் திறம்பட்டவர்களாகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.