பிரதிபலிப்பை வரவழைக்கும் பிரசங்கங்கள்
1 பேசப்படும் விஷயம், வீட்டுக்காரருக்கு எவ்வளவு சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது, அது அவருக்கு தேவைப்படும் ஏதோவொன்று அல்லது அவர் அதை உபயோகிக்கலாம் போன்றவற்றை தெளிவாகக் காண்பிக்கும் பிரசங்கங்கள் பிரதிபலிப்பைப் பெறுகின்றன. உங்களுடைய சம்பாஷணை முழுவதும், “இது என்னை உட்படுத்துகிறது” என்று வீட்டுக்காரர் உணரும்படி உதவி செய்யுங்கள். ஓர் அளிப்பை தயாரிக்கையில், நாம் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என் பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களுக்கு எந்த விஷயங்கள் அதிக அக்கறைக்குரியவையாய் இருக்கின்றன? அவர்களுடைய தேவைகள் என்ன? யெகோவா அவர்களுடைய தேவைகளை மனதில் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படி நான் எவ்வாறு செய்தியை அளிக்க முடியும்?’ இன்றுள்ள ஜனங்களுக்கு முக்கிய அக்கறையாய் இருக்கும் சில காரியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் ஒன்றை நீங்கள் உபயோகிக்க முடியுமா அல்லது உங்களுடைய அளிப்பில் அதற்கு ஒத்த ஏதோவொன்றை உபயோகிக்க முடியுமா? இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்திலிருந்து குறிப்புகள் எவ்வாறு இணைக்கப்படலாம் என்பதையும் கவனியுங்கள்.
2 மகிழ்ச்சியின்றி இருப்பதைக் குறித்த கவலை: “நம்முடைய சமுதாயத்தில் இருக்கும் வாழ்க்கை தரத்தைப் பற்றி உண்மையிலேயே அக்கறையாயிருக்கும் ஜனங்களோடு நாங்கள் பேசுகிறோம். ஜனங்களுக்கு பொருளாதார தேவைகள் இருந்தாலும், அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையில் மகிழ்ச்சியுள்ளவர்களாக இல்லை. அணுஆயுதப் போர், பணவீக்கம் போன்றவை ஏற்படும் சாத்தியம், ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் பயமுறுத்துகிறது. ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு நாம் மனிதன் பேரில் சார்ந்திருக்க முடியுமா? எரேமியா 10:23-ஐ வாசிக்கையில், வெற்றியடைவதற்கு மனிதனின் இயலாத்தன்மையைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். (வாசியுங்கள்) எதிர்காலத்தைப் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடும். அவருடைய வாக்குகளில் ஒன்றை சற்று கவனியுங்கள்.” வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள், பின்பு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கம் 307-ல் உள்ள பாரா 2-ஐ வாசியுங்கள்.
3 எதிர்காலத்தைப் பற்றிய கவலை: “எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையான எண்ணத்தை எங்களுடைய அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த நம்பிக்கைக்கு தடையாய் இருப்பது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எரேமியா 10:23-ஐ நாம் வாசிக்கையில், எதை ஒரு தடையாக பைபிள் குறிப்பிடுகிறது என்பதை கவனியுங்கள். (வாசியுங்கள்) ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கு தன்னுடைய சிருஷ்டிகரால் வழிநடத்தப்பட வேண்டிய மனிதனின் தேவையை அடுத்த வசனம் காண்பிக்கிறது.” வசனம் 24-ஐ வாசியுங்கள்.
4 நல்ல ஆரோக்கியத்தை காத்துவருவதைப் பற்றிய கவலை: “நல்ல ஆரோக்கியத்தை காத்துவர வேண்டும் என்று நம்முடைய சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அநேகர் உணர்வுள்ளவர்களாய் இருக்கின்றனர். எனினும், முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுத்துங்கூட, வியாதியால் நாம் கஷ்டப்படுகிறோம். எல்லாரும் பரிபூரண ஆரோக்கியமும், பலமும் அனுபவிக்கப் போகும் ஓர் உலகில் நீங்கள் வாழ விரும்புவீர்களா? இது நம்புவதற்கு கடினமாக தோன்றினாலும் கூட, பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் அப்படிப்பட்ட ஒரு காலத்தைப் பற்றி பேசுகிறது, மேலும் அது அண்மையான எதிர்காலத்தில் இருக்கிறது என்று நமக்கு சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நிலைமைகளை அனுபவிப்பதற்கு நம்முடைய பங்கில் தேவையானது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பின்பு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கம் 308-ல் உள்ள பாரா 2-ஐ நீங்கள் வாசிக்கலாம், கடவுளிடமிருந்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்கு விசுவாசம் எவ்வாறு இன்றியமையாததாயிருக்கிறது என்பதை இது காண்பிக்கிறது.
5 தூய்மைக்கேடு, சுற்றுச்சூழல் பற்றிய கவலை: “நம்முடைய அயலகத்தாரோடு பேசுகையில், நம்முடைய காற்று, நீர், உணவு ஆகியவை எவ்வாறு மாசுபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்து அநேகர் கவலை தெரிவித்திருப்பதாக நாங்கள் கண்டோம். இதற்கு அரசாங்கங்கள் ஒரு முடிவைக் கொண்டுவர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [குறிப்புக்காக நேரம் அனுமதியுங்கள்.] பூமியைக் கெடுப்பவர்களுக்கு என்ன நேரிடும் என்று பைபிள் சொல்வதை கவனிப்பது உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது.” வெளிப்படுத்துதல் 11:18பி-ஐ வாசியுங்கள். பூமியைக் கெடுப்பவர்களை நீக்குவது மட்டுமல்லாமல், சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை ஒரு பரதீஸாக மாற்ற வேண்டும் என்பதும் கடவுளின் நோக்கமாயிருக்கிறது, இது சங்கீதம் 37:10, 11 அல்லது ஏசாயா 65:21, 22-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
6 மதசம்பந்தமாக மனச்சாய்வு உள்ளவர்களிடம்: “நாங்கள் நம்முடைய அயலகத்தாரை ஒரு கேள்வி கேட்கிறோம்: ‘சிறந்தது என்று தனிப்பட்ட நபர்கள் உணரும் வழியில் மனிதன் தம்மை வணங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ (குறிப்புக்காக நேரம் அனுமதியுங்கள்) பைபிள் எரேமியா 10:23-ல் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்.”
7 உங்களுக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இருதயத்தை எட்டுவதற்கு நீங்கள் ஊக்கமாக முயற்சி செய்கையில், சத்தியத்துக்காகவும் நீதிக்காகவும் பசியாயிருப்பவர்கள் பிரதிபலிப்பர்.—மத். 5:3, 6.