அவசர உணர்வுடன் நற்செய்தியை அளித்தல்
1 கிறிஸ்தவ ஊழியத்தில் முழு இருதயத்துடன் பங்கெடுப்பதன்மூலம் கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தமான வாக்குறுதிகளுக்கு நாம் ஆழ்ந்த போற்றுதலைக் காண்பிக்கிறோம். இந்த வேலையில் நாம் ஓர் அவசர உணர்வுடன் பங்கெடுக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கி வருகிறது; மேலும் நம்முடைய பிராந்தியத்தில் இருப்பவர்களின் உயிர்கள் பேராபத்தில் இருக்கின்றன. (எசே. 3:19; மத். 9:37, 38) அப்படிப்பட்ட முக்கியமான பொறுப்பு, ஊழியத்தில் நாம் மிகச் சிறந்த முயற்சி எடுத்து செயல்படுவதை தேவைப்படுத்துகிறது. நம்முடைய வெளி ஊழிய நடவடிக்கையைப் பொறுத்ததில் அவசர உணர்வை நாம் எப்படி காண்பிக்கலாம்? நல்ல பிரசங்க அளிப்புகளை முன்கூட்டியே தயாரிப்பதன்மூலமும், மக்கள் எங்கெல்லாம் காணப்படுவார்களோ அங்கெல்லாம் அவர்களைத் தேடுவதில் ஊக்கந்தளராமல் செயல்படுவதன்மூலமும், அக்கறை காட்டும் அனைவரையும் குறித்து ஒரு திருத்தமான பதிவை வைத்திருப்பதன் மூலமும், அந்த அக்கறையைப் பின்தொடர தாமதமின்றி திரும்பிச்செல்வதன் மூலமும், உயிர்கள் உட்பட்டிருப்பதால் நம் ஊழியத்தில் கருத்தூன்றியபடி செயல்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்திருப்பதன் மூலமுமேயாகும். பிப்ரவரியில் நற்செய்தியை அவசர உணர்வுடன் அளிப்பதற்காக நாம் தயாரிக்கையில் பின்வரும் ஆலோசனைகள் உதவியாக இருக்கக்கூடும். அளிப்பிற்குரிய புத்தகங்கள், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், அல்லது உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், அல்லது இரண்டும்.
2 சமுதாயம் எதிர்ப்படுகிற சில பிரச்சினைகளைச் சுருக்கமாக கூறி, ஓர் உரையாடலை நீங்கள் தொடங்கக்கூடும்; பின்னர் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“அநேக மக்கள் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறார்கள்; ஆனால் ‘அவர் நமக்காக என்ன விதமான எதிர்காலத்தை மனதில் கொண்டிருக்கிறார்?’ என்பதைக் குறித்து யோசிக்கிறார்கள். நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] மனிதவர்க்கத்துக்காக கடவுளுடைய சித்தத்தைப் பற்றியும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் படிப்படியாக என்ன செய்துவருகிறார் என்பதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?” வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசித்துவிட்டு, என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 11-ல் இருக்கும் படத்துடன் அதைப் பொருத்துங்கள். இது நம்முடைய எதிர்காலத்திற்கு எதைக் குறிக்கும் என்பதை மேலுமாக விளக்குவதற்கு பக்கங்கள் 12-13-லுள்ள படத்திற்குத் திருப்புங்கள். பாரா 12-லிருந்து ஏசாயா 11:6-9-ஐ வாசியுங்கள். அந்தப் புத்தகத்தை அளியுங்கள். அந்த உரையாடலைத் தொடருவதற்கு மீண்டும் வர வசதியான நேரத்தை ஏற்பாடு செய்யுங்கள்.
3 வெளிப்படுத்துதல் 21:4-ன் முந்தின கலந்தாலோசிப்பை பின்வரும் இந்தச் சுருக்கமான பிரசங்க அளிப்புடன் நீங்கள் தொடரலாம்:
◼“நான் போனமுறை வந்தபோது, மனிதவர்க்கத்துக்காக ஒரு புதிய பூமிக்குரிய சமுதாயத்தை உருவாக்கும் கடவுளுடைய வாக்குறுதியைப் பற்றி நாம் பேசினோம். [என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 12-13-லுள்ள படத்திற்கு மீண்டும் கவனத்தைத் திருப்புங்கள்.] அப்படிப்பட்ட நிலைமைகளை உங்கள் குடும்பம் அனுபவிப்பதைக் காண நீங்கள் விரும்புவீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கேள்வி என்னவென்றால், கடவுளின் வாக்குறுதிகள் எந்தளவுக்கு நம்பத்தக்கவை? அவர் தாமே என்ன சொல்லுகிறார் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். தீத்து 1:3-ஐயும் பக்கம் 56-ல் பாரா 28-ஐயும் வாசியுங்கள். அச்சிடப்பட்ட கேள்வியின் (எ) பாகத்தைக் கேளுங்கள்; அந்தப் பாராவின் கடைசி வாக்கியம் உட்பட, அதன் பதிலுக்கு கவனத்தை ஈர்க்கவும். இலவச பைபிள் படிப்பு அளிப்பைப் பற்றி கூறுங்கள். பின்னர் அது எப்படி நடத்தப்படும் என்பதைக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
4 குடும்பத்தில் அதிகரித்துவரும் பிரச்சினைகளைக் குறித்து அநேகர் அக்கறை உள்ளவர்களாய் இருப்பதன் காரணமாக, முதல் சந்திப்பில் இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லக்கூடும்:
◼“ஏறக்குறைய நான் சந்திக்கும் ஒவ்வொருவரும், நவீன நாளைய குடும்பம் எதிர்ப்படும் பிரச்சினைகளைக் குறித்து அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். [பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதை மருந்து பிரச்சினைகள், மனைவிகளும் வேலைக்குப் போகையில் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பிரச்சினை போன்ற சிலவற்றை குறிப்பிடுங்கள்.] இந்த விஷயங்கள் பற்றி பல பத்தாண்டுகளாக மனித ஆலோசகர்கள் அறிவுரைகள் கொடுத்துவந்திருக்கிறார்கள்; மக்களும் அவற்றைக் கேட்டுவந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், நிலைமைகள் தொடர்ந்து மோசமாகி வருவதற்கு காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பழம்பாணியானது என்று சிலர் நினைக்கிறதாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் நடைமுறையானதாக நிரூபித்து வந்திருக்கிற அறிவுரையை பைபிள் அளிக்கிறது.” உதாரணமாக, குடும்ப வாழ்க்கை புத்தகத்தில் பக்கம் 39-லிருந்து நீதிமொழிகள் 10:19-ஐ வாசியுங்கள். அந்தப் பக்கத்திலும் அதற்கு முந்தின பக்கத்திலும் உள்ள மற்ற வேதவசனங்களைக் குறிப்பிட்டுக்காட்டி, பைபிளிலுள்ள காலாகாலத்துக்கும் பொருந்தும் ஞானத்தை அந்தப் புத்தகம் எப்படி நடைமுறையில் பொருத்திக்காட்டுகிறது என்பதை விளக்குங்கள். மீண்டும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து, குடும்ப வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து மேலுமாக கலந்துபேசுங்கள்.
5 ஒருவருடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கலாம் என்பதை விளக்குவதற்காக மீண்டும் வருவதாக நீங்கள் வாக்களித்திருந்தால், இந்த அணுகுமுறையை முயற்சிக்கக்கூடும்:
◼“குடும்ப வாழ்க்கையை எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி நாம் கலந்து பேசியதைத் தொடருவதற்காக மீண்டும் வர நான் விசேஷ முயற்சி எடுத்தேன். நான் போனமுறை வந்தபோது, அதற்காக பைபிள் சிறந்த அறிவுரையை அளிக்கிறது என்று பார்த்தோம்.” குடும்ப வாழ்க்கை புத்தகத்தில் ‘பொருளடக்கத்திற்கு’ திருப்பி, வீட்டுக்காரருக்கு மிகவும் பிடித்தமான ஒரு அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அந்தப் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் பயன்படுத்தி அதைப் படிப்பதன்மூலம் அதில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அதிக பயனை அவர் எவ்வாறு பெறலாம் என்று காண்பியுங்கள். அவருடன் சேர்ந்து படிப்பதற்கு முன்வந்து, உடனடியாகவே படிப்பைத் தொடங்க முயலுங்கள்.
6 சுற்றுச்சூழல் பற்றி அநேகர் அக்கறை உள்ளவர்களாய் இருப்பதால், ஓர் உரையாடலைத் தொடங்குவதற்கு இதுபோன்ற எதையாவது நீங்கள் சொல்லலாம்:
◼“காற்று, தண்ணீர், மற்றும் உணவின் தூய்மைக்கேடு பற்றி ஏறக்குறைய எல்லாருமே அக்கறை உள்ளவர்களாய் இருப்பதாக நாங்கள் காண்கிறோம். சில நாடுகளில் சுற்றுச்சூழலின் நிலை ஏற்கெனவே உயிரை அச்சுறுத்துவதாய் இருக்கிறது. கடவுள், பூமியின் படைப்பாளராக இருப்பதால் இதைக் குறித்து அவர் என்ன செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நாம் இந்தக் கிரகத்தைப் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து கடவுள் கணக்குக் கேட்பார் என்று பைபிள் சொல்லுகிறது. [வெளிப்படுத்துதல் 11:18ஆ-வை வாசிக்கவும்.] தூய்மைக்கேடே இல்லாத ஒரு பூமியில் வாழ்வதைக் கற்பனை செய்து பாருங்கள்!” வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பரதீஸைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியைச் சுட்டிக் காண்பியுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 153-லுள்ள கடைசி படத்தைக் காண்பித்துவிட்டு, பக்கங்கள் 156 முதல் 158 வரையுள்ள படங்களுடன் ஒப்பிடுகையில் உள்ள வித்தியாசத்தை காட்டுங்கள். புத்தகத்தை அளித்துவிட்டு, மீண்டும் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
7 பரதீஸான பூமியில் அக்கறை காண்பித்த ஒருவரை மீண்டும் சந்திக்க செல்கையில், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“நான் சென்றமுறை வந்தபோது, மாசுபட்ட பூமியின் பிரச்சினையை தீர்ப்பதற்கு, மனிதனின் விவகாரங்களில் கடவுள் தலையிட வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டோம். ஆனால் கேள்வி என்னவென்றால், கடவுளால் உண்டாக்கப்படும் நீதியுள்ள புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். இந்த விசேஷ அறிவைப் பெறுவதற்கு இலவச பைபிள் படிப்பு திட்டத்திலிருந்து பயனடையும்படி வீட்டுக்காரரை உற்சாகப்படுத்துங்கள்.
8 நவீன நாளைய அறுவடையின் வேலையாட்களாக பயன்படுத்தப்படுவதும் உயிர்காக்கும் பிரசங்க வேலையைச் செய்வதும் என்னே ஒரு சிலாக்கியம்! ‘நாம் படுகிற பிரயாசம் விருதாவாய் இராதென்று அறிந்தவர்களாய்’ அவசர உணர்வுடன் நற்செய்தியை அளிப்பதில் நாம் அனைவரும் சுறுசுறுப்பாய் இருப்போமாக.—1 கொ. 15:58.