மேலும் ஆர்வத்தைத் தூண்ட நான் என்ன சொல்லக்கூடும்?
1 நற்செய்தியை பிரசங்கிப்பதில் நம்முடைய நோக்கத்தின் ஒரு பெரும்பாகம் சீஷர்களை உண்டுபண்ணுவதாகும், பிரசுரங்களை வெறுமென விட்டுவருவதற்கு மட்டுமல்ல. ஆகையால், அக்கறையை கண்டுபிடித்தவுடன், விதைக்கப்பட்டிருக்கும் விதைகளை நாம் வளர்த்து போஷிக்க வேண்டும். அந்த நபர் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதற்கு யெகோவா உதவி செய்யக்கூடிய ஓர் ஆரோக்கியமான சூழ்நிலைமையை உருவாக்குவதற்கு நம்முடைய பங்கை செய்ய வேண்டும். (1 கொரி. 3:6) மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப அளிப்புகளை பின்தொடரும் வகையில் நீங்கள் என்ன சொல்லக்கூடும்? நீங்கள் எதிர்ப்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைமைகளுக்கு இதோ சில ஆலோசனைகள்.
2 கண்டுபிடிக்கப்பட்ட அக்கறையை வளர்த்தல்: “இதற்கு முன்பு நாம் சுருக்கமாக பேசியபோது, நீங்கள் அதிக வேலையாயிருந்தீர்கள், ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய உங்களுடைய கவலையை தெரிவிக்க நீங்கள் நேரம் எடுத்துக் கொண்டீர்கள். ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொடுப்பதற்கு மனிதன் தகுதியற்றவன் என்று பைபிளில் எரேமியா 10:23-ல் நாம் வாசித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்த வசனத்தைப் பற்றி இப்புத்தகம் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். (இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கம் 305-ல் பாரா 5-லிருந்து வாசியுங்கள்.) இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் பல்வேறு விஷயங்களை இப்பிரசுரம் கலந்தாலோசிக்கிறது. இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள நீங்கள் ஆர்வமுள்ளவர்களாய் இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
3 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை உபயோகித்தல்: “உங்களை மறுபடியும் பார்ப்பது சந்தோஷமளிக்கிறது. நான் உங்களிடம் விட்டுச்சென்ற புத்தகத்தில் இருக்கும் கூடுதலான குறிப்பை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அது அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. கடவுளுடைய ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நம்முடைய பெற்றோர்களை கனம்பண்ணுவதைக் குறித்து பைபிள் பேசுகிறது. நம்முடைய பெற்றோர்களை கனம்பண்ண வேண்டும் என்பதன் அர்த்தமென்ன?” இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கம் 11-க்கு திருப்புங்கள். “அவர்களை ‘கனம்பண்ணுவது’ என்பதன் அர்த்தம்” என்ற உபதலைப்பின் கீழிருக்கும் பாராக்களை வாசியுங்கள், பின்பு பக்கம் 17-ல் உள்ள “கலந்தாலோசிப்புக்கான கேள்விகள்” என்ற அம்சத்துக்குத் திருப்பி, வாசிக்கப்பட்ட பாராக்களுக்கு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேளுங்கள். மறுபடியும் சந்தித்து கலந்தாலோசிப்பை தொடரலாம் என்று சொல்லி முடியுங்கள்.
4 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு மற்றொரு பிரசுரத்தை உபயோகித்தல்: “இன்று உங்களை வீட்டில் காண்பதில் நான் சந்தோஷப்படுகிறேன். சென்ற முறை நாம் பேசியபோது, வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் உள்ள பைபிளின் வாக்கை நாம் சேர்ந்து வாசித்தோம். [மறுபடியும் வாசியுங்கள்.] என்றபோதிலும் வாக்களிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான நிலைமைகளை நாம் எவ்வித முயற்சியும் இல்லாமல் அனுபவித்துவிட முடியாது. வெளிப்படுத்துதல் 1:3-ல் காண்கிறபடி இரண்டு காரியங்கள் தேவைப்படுகின்றன. (வாசியுங்கள்) பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் வாசிக்க வேண்டும், அதை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது எழுதப்பட்டிருக்கும் காரியங்களை நடைமுறையில் பிரயோகிக்க வேண்டும். ‘இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்’ என்ற இந்தப் புரோஷுர், நான் உங்களிடம் விட்டுச்சென்ற பிரசுரத்தை நீங்கள் வாசிக்கும்போது அதை அதிக மகிழ்ச்சியுள்ளதாக்கும் ஏனென்றால் கடவுளுடைய தேவைகள் என்ன என்பதை இது எளிய முறையில் விளக்குகிறது. அநேக ஆட்கள் கேட்கும் 12 கேள்விகள் அடங்கிய பட்டியல் பக்கம் 30-ல் இருக்கிறது. அதில் எந்தக் கேள்விக்கு பதிலைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?” வீட்டுக்காரர் பதிலளித்த பிறகு, புரோஷுரில் அந்தக் கேள்விக்கு பதில் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்.
5 மறுசந்திப்புகளில், முதல் சந்திப்பின்போது போட்ட அஸ்திபாரத்தின் மேல் நாம் கட்ட வேண்டும். நம்முடைய ஊழியத்தில் இந்த அம்சத்துக்கு அக்கறையான கவனம் செலுத்துவது, யெகோவாவிடமிருந்து செழுமையான ஆசீர்வாதங்களை நமக்கும், நமக்கு செவிகொடுத்துக் கேட்பவர்களுக்கும் கொண்டு வரும்.—1 தீமோ. 4:16.