ஜனவரியில் ஒரு துணை பயனியராக இருங்கள்
1 நாம் எல்லாரும் நம்மை நாமே பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘ஜனவரியில் நான் எந்த அளவிற்கு ஒளியைக் கொண்டுசெல்பவராக இருப்பேன்? நான் ஒரு துணை பயனியராக இருக்க முடியுமா?’—மத். 5:14, 16.
2 முழுக்காட்டப்பட்ட இளைஞருக்குப் பள்ளியிலிருந்து அதிக நேரம் ஓய்வு கிடைக்கக்கூடும். சில பெற்றோரும் மற்ற வயதுவந்த பிரஸ்தாபிகளும் விஸ்தரிக்கப்பட்ட வெளி ஊழியத்தில் இந்த மாதம் இவர்களுடன் சேர்ந்துகொள்ளக்கூடும். அதேவிதமாக முழுநேர வேலைகளைக் கொண்டிருக்கும் அநேகருக்கு இந்த உயிர்காக்கும் ஊழியத்திற்கு அர்ப்பணிப்பதற்கு சற்றுக் கூடுதல் நேரமிருக்கக்கூடும்.
3 தேவையான அதிக முயற்சியை எடுப்பதற்கு நாம் மனமுவந்து முன்வருவதே ஒரு துணை பயனியராக சேவிக்க முடிவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். (லூக்கா 13:24) குடும்ப மற்றும் சபைக்கான காரியங்களை உட்படுத்தி நம்முடைய வேலையைக் கவனமாக அமைத்தோமேயானால், ஒரு துணை பயனியராகச் சேவிக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கும் வகையில், நேரம் கிடைக்கும்படி செய்யலாம்.
4 ஜனவரியில் நீங்கள் உங்கள் ஊழியத்தை விஸ்தரிக்கக்கூடுமா? அவ்வாறு செய்வது, வீடுகளில் உங்களை அதிக நம்பிக்கையுள்ளவர்களாக உணரும்படி செய்து, கட்டியெழுப்பும் அனுபவங்களில் பலனடையும். அவ்வாறாக அதிக சந்தோஷம் உங்களுடையதாக இருக்கும்.—அப்போஸ்தலர் 20:35.