டிசம்பர் மாத ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 49 (23)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்துப் பொருத்தமான அறிவிப்புகளும். ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பிரஸ்தாபிகள் வகிக்கும் பங்கிற்காக அவர்களைப் பாராட்டுங்கள். அந்தப் பிராந்தியத்தில் பயன்படுத்தக்கூடிய பேச்சுக்குறிப்புகளைத் தற்போது புதிதாகவுள்ள பத்திரிகைகளிலிருந்து குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
15 நிமி:“தேவனுடைய வார்த்தையின் வல்லமை.” கேள்விகளும் பதில்களும். வெளி ஊழியத்திற்குப் பயன்படும் வகையில், நியாயங்காட்டும்முறை, எளியமுறை மற்றும் பலமுள்ள வாதம்செய்யும் முறைகளில் எடுத்துச்சென்று நீங்கள் பைபிளை ஏன் நம்பலாம் என்ற துண்டுப்பிரதியை வாசிக்க எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“உங்களுடைய முதல் சந்திப்பில் அடித்தளமிடுங்கள்.” இந்தப் பாகத்தைக் கையாளும் சகோதரர், பாராக்கள் 2 மற்றும் 3-லுள்ள இரண்டு அறிமுகங்களில் ஒன்றைப் பயன்படுத்தியும், பாராக்கள் 4, 5, 6-ல் ஒவ்வொன்றிலுமுள்ள குறிப்பையும் காண்பிக்கும் வகையிலும் நான்கு நடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார். கடைசி நடிப்பு என்றும் வாழலாம் புத்தகத்தை எவ்வாறு அளிக்கலாம் என்பதைக் காண்பிக்கவேண்டும்.
பாட்டு 52 (59), முடிவு ஜெபம்.
டிசம்பர் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 141 (64)
5 நிமி:சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும்.
15 நிமி:“நீங்கள் சொன்னபடி செய்கிறீர்களா?” அக்டோபர் 1, 1990, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 30-1-லுள்ள கட்டுரையின் அடிப்படையில் நடத்தும் கண்காணியின் பேச்சு. இந்தக் கட்டுரை இந்திய மொழிகளில் நவம்பர் 1, 1991 காவற்கோபுரம் பத்திரிகையில் வந்துள்ளது. உள்ளூர் சபையின் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தவேண்டும்: வெளி ஊழிய மணிநேரங்களை அறிக்கைசெய்தல், ராஜ்ய மன்றம் சுத்தம் செய்தல், வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்குக் குறித்தநேரத்தில் வந்துசேருதல், ராஜ்ய மன்றத்தில் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துதல், இவை போன்றவை. பொருத்தமான இடங்களில் பாராட்டுதல் தெரிவித்து, எல்லோரும் அறிவுரைகளைப் பின்பற்றும்போது நியமிக்கப்பட்ட ஊழியரின் வேலை எவ்வளவு எளிதாக இருக்கிறது என்றும் அதனால் முழு சபையும் எவ்வாறு பலனடைகிறது என்றும் எல்லோரும் பகுத்துணர உதவுங்கள்.
10 நிமி:“நீங்கள் ஜனவரியில் ஒரு துணை பயனியராக இருங்கள்.” அனலோடும் ஆர்வமூட்டும் வகையிலும் கேள்வி-பதில்கள் மூலமாக இந்தப் பகுதியைச் சிந்தியுங்கள். வெளி ஊழியத்திற்கான உள்ளூர் ஏற்பாடுகளையும் ஜனவரியில் பெரிய தொகுதிகளுக்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்படப்போவதைப்பற்றியும் அறிவியுங்கள்.
15 நிமி:நாம் ஏன் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில்லை. மூப்பருக்கும் நல்ல முன்மாதிரி வகிக்கும் பருவவயதைஅடையாத தகப்பனில்லாத பையனுக்கும் இடையில் கலந்தாலோசிப்பு. ஒரு பிறந்தநாள் விருந்துக்குச் செல்வதைக்குறித்துச் சகாக்களிடமிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு உதவிகேட்பதற்காக அந்தப் பையன் மூப்பரை அணுகுகிறான். அது தவறு என்பதை அவன் புரிந்திருக்கிறான்; ஆனால் மற்றவர்களுக்கு அதைத் தெளிவாக விளக்கமுடியவேண்டுமென விரும்புகிறான். மூப்பர் தயவாகவும் எளிய மொழிநடையிலும் செப்டம்பர் 1, 1992, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 30-1-லுள்ள விஷயங்களையும் (காவற்கோபுரம் பத்திரிகை மாதம் இருமுறை வெளிவரும் மொழிகளில் இந்தக் கட்டுரை டிசம்பர் 1, 1992 பத்திரிகையில் வந்துள்ளது) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 68-70-ஐயும் அந்தப் பையனுடன் விமர்சிக்கிறார்.
பாட்டு 27 (7), முடிவு ஜெபம்.
டிசம்பர் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 179 (29)
15 நிமி:கணக்கு அறிக்கைகள், நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது உட்பட சபை அறிவிப்புகள். உள்ளூர் சபைக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் கொடுக்கப்படும் நிதிஉதவிக்காக சபையைப் பாராட்டுங்கள். பொருத்தமான இடங்களில், விடுமுறை காலப்பகுதிக்கென்று விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைத் திட்டமிடுங்கள். விசேஷமாக, விடுமுறை காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க பெற்றோர் பள்ளிபிள்ளைகளுடன் பள்ளி (ஆங்கிலம்) புரொஷூரின் பக்கங்கள் 17-21-ஐ உபயோகித்துப் பயிற்றுவிக்கவேண்டும்.
20 நிமி:“அக்கறையை வளர்ப்பது எப்படி?” பேச்சும் நடிப்புகளும், ஊழியக் கண்காணியால் கையாளப்படவேண்டும். பாராக்கள் 5, 6-ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை எடுத்துக்காண்பியுங்கள். நடிப்புகளை தெளிவானதாயும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதாயும் வையுங்கள்.
10 நிமி:“பொருத்தமான பேச்சுக்குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.” வெளி ஊழியத்திற்காக தயாரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் சம்பாஷணை.
பாட்டு 198 (50), முடிவு ஜெபம்.
டிசம்பர் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 54 (71)
10 நிமி:சபை அறிவிப்புகள். இந்த வார இறுதியில் தற்போது புதிதாகவுள்ள பத்திரிகையிலிருந்து ஒரு பேச்சுக் குறிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதுபற்றிய ஒரு நடிப்பை அளிக்கவும். சென்ற வார ஊழியக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பயன்படுத்துங்கள்.
20 நிமி:“என்னிடத்தில் திரும்புங்கள், அப்போது நான் உங்களிடத்தில் திரும்புவேன்.” நவம்பர் 1, 1992 காவற்கோபுரம் பத்திரிகையின் மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகைகளில் பக்கம் 28-ல் மற்றும் மாதாந்தர பத்திரிகையில் பக்கம் 30-லும் வந்த கட்டுரையின் அடிப்படையில் மூப்பரின் பேச்சு. இந்தக் கட்டுரை ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையில் ஆகஸ்ட் 1, 1992-ல் வெளிவந்தது. யெகோவாவின் இரக்கத்தையும் அவருடைய அமைப்பிலிருந்து வழிதவறிபோய் செயலற்றுப்போயிருக்கும் ஆட்களைத் திரும்பவுமாக வரவேற்பதற்கான அவருடைய மனமுவந்தத்தன்மையையும் அழுத்திக் கூறுங்கள். உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைய யெகோவாவின் அமைப்புதான் ஒரே இடமாக இருக்கிறது என்பதைக் காண்பியுங்கள்.
15 நிமி:“நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?” உற்சாகமான பேச்சு.
பாட்டு 24 (70), முடிவு ஜெபம்.