பொருத்தமான பேச்சுக் குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்
1 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை ஒழுங்காக வாசிப்பதற்கு மக்களை உற்சாகப்படுத்த நாம் என்ன செய்யலாம்? பத்திரிகைகளை மற்றவர்களுக்குச் சிபாரிசு செய்யும்போது ஆர்வமூட்டும் குறிப்புகளை நாம் பேசுவதற்குக் கொண்டிருக்கவேண்டும். நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுடன் நன்கு பழக்கப்பட்டவர்களாயிருந்து, பத்திரிகைகளை வாசிக்கும்போது அவர்களை மனதில் கொண்டிருந்தோமானால், அவர்களுடைய ஆர்வத்தைக் கவரக்கூடிய பேச்சுக் குறிப்புகளுக்காக நாம் கவனமாக இருக்கலாம்.
2 சில பகுதிகளில், மக்கள் ஒத்த பின்னணியை உடையவர்களாய் இருப்பதால், பொதுவான அக்கறையுடைய ஒன்றைக் குறிப்பிடுவது மிக எளிதாக இருக்கும். ஆனால் மற்ற இடங்களில், பல வித்தியாசமான பின்னணிகளிலிருந்து வரும் மக்களைக் காணலாம். நாம் பல பேச்சுக் குறிப்புகளை மனதில் கொண்டிருந்தோமேயானால், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் நன்கு பொருந்தக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கூறலாம்.
3 புதிய பத்திரிகைகளைப் பெறும்போது பழைய வெளியீடுகளைக் களைந்துவிட அவசரப்படாதீர்கள். ஒரு சகோதரர் பொதுவாக காவற்கோபுரம் பத்திரிகையின் மூன்று அல்லது நான்கு வெளியீடுகளை வீட்டுக்காரரிடம் காண்பித்து, அவருக்கு வாசிக்க விருப்பமானதை அவரே தேர்ந்தெடுக்கும்படிச் செய்கிறார். நாம் விநியோகிக்க முடிவதற்கும் அதிகமான பத்திரிகைகளைப் பெறுவதாகக் கண்டால், நம்முடைய ஆர்டரை சரிசெய்வதைக்குறித்துச் சிந்திக்க வேண்டும்.
4 எப்போதும் பொருத்தமான பேச்சுக்குறிப்புகளைப் பயன்படுத்துவதன்மூலம், மற்றவர்கள் நம்முடைய பத்திரிகைகளை வாசிப்பதற்குத் தூண்டவும், ஒருவேளை அப்படிப்பட்டவர்களை ஜீவனுக்கான பாதையில் செலுத்தவும்கூடும். (மத். 7:14) இந்த முக்கியமான காரியத்திற்கு நாம் கூர்ந்து கவனம் செலுத்தினால், யெகோவாவின் ஆசீர்வாதத்தைக்குறித்து உறுதியாயிருக்கலாம்.