காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வைநன்றாய் பயன்படுத்துதல்
1 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இன்று மக்கள் வாசிக்கக்கூடிய பத்திரிகைகளிலேயே மிகவும் மதிப்புவாய்ந்ததாகவும் மிகவும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கின்றன. ஏன்? ஏனென்றால் அவற்றில் அடங்கியுள்ள ஆவிக்குரிய சத்தியங்கள் மக்களின் வாழ்க்கையின்மீது நித்தியத்துக்குமான நல்ல பாதிப்பைக் கொண்டிருக்கமுடியும். என்றபோதிலும், அநேகர் தங்களுடைய ஆவிக்குரியத் தேவையைக்குறித்து முழுமையாக உணர்வுடையவர்களாய் இல்லை, அல்லது அதைத் திருப்திசெய்வதற்கு எங்கே நோக்குவது என்பதை அவர்கள் அறியவில்லை. மக்கள் தங்களுடைய கண்களை ஆவிக்குரிய விதமாகத் திறப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்வதன்மூலம் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுவது நம்முடைய சிலாக்கியமாய் இருக்கிறது.—மத். 5:3; அப். 26:18.
2 நம்பிக்கையுடனும் நன்கு தயாரித்தவர்களாயும் இருங்கள்: சத்தியத்திற்கு பிரதிபலிக்கிற செம்மறியாடுபோன்ற மக்கள் பெரும்பாலும் உங்களுடைய பிராந்தியத்தில் இருக்கலாம். சிலருக்கு வெறுமனே பத்திரிகைகளை வாசிப்பதற்கு அன்பான உற்சாகப்படுத்துதல் தேவையாய் இருக்கலாம். ஆகவே, நீங்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை அளிக்கும்போது நம்பிக்கையோடும் தூண்டுவிக்கும் விதமாகவும் பேசுங்கள். பத்திரிகைகளைக் கொண்டிருங்கள், மேலும் மற்ற பிரசுரங்களை அளிக்கையிலுங்கூட, அவற்றை விநியோகிப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக்கொள்ளுங்கள்.
3 பத்திரிகைகளை விநியோகிப்பதில் எது நம்மை அதிகப் பலன்தரக்கூடியவர்களாக்கக்கூடும்? முதலாவதாக, நாம்தாமே அவற்றின் மதிப்பை உண்மையில் போற்றவேண்டும். நாம் அளித்துக்கொண்டிருக்கிற பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளை நன்கு அறிந்திருக்கவேண்டும்; இது நம்முடைய நம்பிக்கையையும் அவற்றை அளிப்பதற்கு நம்முடைய ஆர்வத்தையும் கூடுதலாக்கும். அவற்றை நீங்கள் ஆரம்பத்தில் வாசிக்கும்போது இந்தக் கருத்தை மனதில் கொண்டிருங்கள். ஊழியத்தில் சிறப்பித்துக்காட்டுவதற்கு குறிப்புகளைத் தெரிந்தெடுக்க விழிப்புடனிருங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘குறிப்பாக யாருக்கு இந்தக் கட்டுரை கவர்ச்சியூட்டும்? இதை ஒரு குடும்பத் தலைவி, ஓர் இளைஞன், அல்லது ஒருவேளை ஒரு வியாபாரி போற்றுவாரா? இந்தக் குறிப்பு ஒரு மாணவனுக்கு, திருமணமான ஒரு நபருக்கு, சுற்றுப்புறச் சூழலைக்குறித்து அக்கறையுள்ள ஒருவருக்கு ஆவலைத் தூண்டிக்கொண்டிருக்குமா?’ உண்மையில் பலன்தரக்கூடியவர்களாக இருப்பதற்கு, நம்முடைய தனிப்பட்ட அறிவையும் அவற்றிலுள்ள காலத்திற்கேற்ற கட்டுரைகளை மகிழ்ந்து அனுபவிப்பதையும் அடிப்படையாகக்கொண்டு அந்தப் பத்திரிகைகளைச் சிபாரிசு செய்யக்கூடியவர்களாய் இருக்கவேண்டும்.
4 பழைய இதழ்களை நன்கு பயன்படுத்துங்கள்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை அவற்றின் இதழ் தேதியின் ஓரிரண்டு மாதத்திற்குள் அவை அனைத்தும் அளிக்கப்படாவிட்டாலுங்கூட, அவற்றினுடைய மதிப்பை இழந்துவிடுவதில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவற்றில் அடங்கியிருக்கிற தகவல் காலவோட்டத்தினால் குறைந்த முக்கியத்துவடையதாக ஆகிறதில்லை, மேலும் பழைய பத்திரிகைகள் நல்ல நிலையிலிருந்தால், அவற்றை அளிப்பதற்குத் தயங்கக்கூடாது. பழைய பத்திரிகைகளைக் குவித்துவைக்க அனுமதித்து அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது, இந்த மதிப்புவாய்ந்த கருவிகளுக்கான போற்றுதல் குறைவுபடுவதைக் காட்டுகிறது. ஒவ்வொரு பத்திரிகையும் ஆவிக்குரிய பசியார்வங்களை எழுப்பி திருப்திசெய்வதற்கு உள்ளூர சக்தியை உடைய சத்தியங்களை உள்ளடக்கியுள்ளது. பழைய இதழ்களைப் புறம்பாக ஒதுக்கிவைத்துவிட்டு அவற்றைக்குறித்து மறந்துவிடுவதற்குப் பதிலாக, அக்கறையுள்ள மக்களின் கைகளில் அவற்றைக் கொடுப்பதற்கு ஒரு விசேஷித்த முயற்சிசெய்வது அல்லது குறைந்தபட்சம் மக்கள் வீட்டில் இல்லாதபோது ஓர் ஒதுக்கமான இடத்தில் விட்டுவருவது சிறந்ததாக இருக்குமல்லவா?
5 விழித்தெழு! பத்திரிகை, ஆரம்பத்தில் ஆவிக்குரிய பிரகாரமாக மனம்சாயாத அநேக ஆட்கள் தங்களுடைய ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுள்ளவர்களாவதற்கு உதவிசெய்திருக்கிறது. காவற்கோபுரம் யெகோவாவின் மக்களின் ஆவிக்குரிய உணவளிக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. இந்தப் பத்திரிகைகள் ஒன்றையொன்று அருமையாக முழுமையாக்குகிறது, மேலும் அவை நற்செய்திப் பிரசங்கிக்கப்படுவதில் ஓர் இன்றியமையாத பாகத்தை வகிக்கின்றன.
6 நாம் பத்திரிகைகளை அளிப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக்கொள்ளும்போது, செம்மறியாடு போன்றவர்களின் ஆவிக்குரியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அவற்றினுடைய திறம்பட்டத்தன்மையில் நாம் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். நாம் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளவும் நன்றாகத் தயாரிக்கவும் ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ளவும் விரும்புகிறோம். நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக, நாமனைவரும் ஒழுங்காக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை நன்றாய் பயன்படுத்திக்கொள்வோமாக.