வீட்டுக்கு-வீடு ஊழியத்தின்சவாலை எதிர்ப்படுவது
1 வீட்டுக்கு வீடு செல்லவேண்டும், அயலாரைச் சென்று சந்திக்கவேண்டும் என்ற எண்ணந்தானே தூய வணக்கத்தை மேற்கொள்ளக்கூடிய அநேக ஆட்களுக்கு உண்மையிலேயே ஒரு சவாலை அளிக்கிறது. ஆனால் யெகோவாவிடத்தில் உள்ள உண்மையான அன்பு இந்தச் சவாலை எதிர்ப்பட ஒருவருக்கு உதவுகிறது. இயல்பாக வெகு கூச்சமுள்ள ஆட்களாக இருப்பவர்களுங்கூட இந்த நற்செய்தியை முழுநேரம் பிரசங்கிக்கும் நபர்களாக ஆகும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர்.
2 பூர்வக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை வீட்டுக்கு வீடு சென்று பகிர்ந்துகொண்டனர் என்று பைபிள் தெளிவாக்குகிறது. (அப். 5:42; 20:20, 21) இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிற கிறிஸ்தவர்களாகிய நாமுங்கூட இந்த வேலையில் பங்குகொள்கிறோம். அலட்சிய மனப்பான்மை, கோபம், ஏளனம் அல்லது நேரடியான எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்ப்பட்டாலுங்கூட, கடவுள்மீதும் நம்முடைய அயலார்மீதும் உள்ள அன்பு இந்த வேலையைச் செய்வதற்கு நம்மை ஊக்குவிக்கிறது.
3 சவாலை எதிர்ப்படுவது சாதிக்கக்கூடியவை: ஒவ்வொரு முறை செல்லும்போதும், சத்திய விதைகள் சிலவற்றை நாம் விதைத்து, முடிவில் கிடைக்கும் முழுமையான பலன் ஒருவேளை ராஜ்ய கனி கொடுப்பதாக இருக்கலாம் என அறிந்து நாம் முயற்சி செய்கிறோம். (பிர. 11:6) தனிப்பட்ட ஆட்களுடைய சூழ்நிலைமைகள் மாறுகின்றன. வீட்டுக்காரருக்கு ஏதோவொன்று ஏற்பட்டு, நம்மில் ஒருவர் அவருடைய வீட்டிலிருக்கும்போது சொன்னவற்றின்பேரில் அவரை யோசிக்கும்படி வைக்கும்; இதனால் அவர் அடுத்த முறை நன்கு செவிசாய்க்கிறவராய் இருக்கலாம்.
4 நம்முடைய வீட்டுக்கு-வீடு ஊழியம் சத்தியத்தினிடமும் நீதியினிடமும் மனச்சாய்வுள்ள ஆட்கள் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி கற்றறிந்து, நித்திய ஜீவனுக்குச் செல்லும் பாதையில் நடக்கும்படியான வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறு உலக இன்பங்களைத் தேடுவோர் யெகோவாவுடைய அங்கீகாரத்தை அனுபவிக்க தங்களை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாயிருக்கிறது என்று அன்போடு எச்சரிக்கைக் கொடுக்கப்படுகின்றனர். இந்த ஊழியம் வீட்டுக்காரர்கள் செவிகொடுத்துக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் யெகோவாவுடைய பெயரை யாவரறியும்படியுஞ்செய்து அவருக்குக் கனத்தைக் கொண்டுவருகிறது.—எசே. 3:11.
5 ஊழியத்தில் ஈடுபடுவது தன்னலமற்ற அன்பு, சந்தோஷம், சமாதானம் மேலும் நீடிய பொறுமை போன்ற ஆவியின் கனிகளை நாம் வளர்த்துக்கொள்ள உதவியாயிருக்கிறது. (கலா. 5:22) மற்றவர்களுக்கு நல்லது செய்வதை உட்படுத்துவதன் காரணமாக நாம் மனத்தாழ்மையுள்ளவர்களாயும் ஒத்துணர்வு உள்ளவர்களாயும் இருப்பதற்கு இது நமக்கு உதவியாயிருக்கிறது. யெகோவாவின் வேலையில் விறுவிறுப்புள்ளவர்களாக வைத்துக்கொள்வது நம்மை உலகத்திலிருந்து பாதுகாக்கிறது.—1 கொ. 15:58.
6 சவாலை எதிர்ப்படுவதற்கு உதவி: புதிய ஆட்கள் இந்த அதிகிளர்ச்சியூட்டும் வேலையில் எப்படி ஈடுபடவேண்டும் என்று கற்றுக்கொள்வது அவசியமாயிருக்கிறது. அவர்கள் அவ்வப்போது நம்பிக்கையை இழந்துவிடுவர். இதன் காரணமாக வீட்டுக்கு வீடு செல்லவேண்டிய எண்ணந்தானே அவர்கள் உற்சாகத்தை இழந்துபோகும்படி செய்யும். அவர்களோடு நாம் சாதாரணமாக எதிர்ப்படும் மறுப்புகளைக் குறித்தும் அவற்றிற்கு மறுமொழியாக நாம் என்ன சொல்லலாம் என்பதைக் குறித்தும் கலந்து பேசலாம். உரையாடலை நிறுத்தும் ஆட்களிடம் மறுமொழியளிப்பதன்பேரில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள சில அருமையான ஆலோசனைகளை உபயோகித்து நாம் பழகிப் பார்க்கலாம். வெளி ஊழியத்திற்காக ஆயத்தஞ்செய்ய நீங்கள் ஏன் அவர்களுக்கு உதவ முன்வரக்கூடாது? ஒழுங்காக வெளி ஊழிய கூட்டங்களுக்குச் சென்று பின்னர் அனுபவமிக்க பிரஸ்தாபிகளோடு வேலை செய்வதன் மூலமுங்கூட அவர்கள் மிகுந்த உதவியைப் பெறலாம். தொகுதியாக வேலை செய்வது மிகவும் பலப்படுத்தக்கூடியதாயிருக்கும்.
7 வீட்டுக்கு வீடு செல்கையில் நம்முடைய தேவனாகிய யெகோவாவைப் பிரதிநிதித்துவஞ்செய்யும் சிலாக்கியம் நமக்கு இருக்கிறது. கடவுளுடைய உடன்வேலையாளாக இருப்பதைவிட எது ஒருவருக்கு உண்மையில் அதிக கனத்தைக் கொடுக்கக்கூடும்? (1 கொ. 3:9) நாம் அவரைச் சார்ந்து இருப்போமாகில், அவருடைய ஆவி வீட்டுக்கு-வீடு ஊழியத்தின் சவாலை எதிர்ப்பட நமக்கு உதவும்.—2 கொ. 3:5.