பைபிளில் அக்கறையைத் தூண்டதிரும்பச்செல்லுதல்
1 நற்செய்தியில் ஓரளவு அக்கறைக் காட்டுகிற மக்களை நாம் சிலசமயங்களில் வெளி ஊழியத்தில் சந்திக்கிறோம், ஆனால் நாம் சந்திக்கிற நேரத்தில் நம்மோடு பேசுவதற்கு அவர்கள் அதிக வேலையாய் இருக்கிறார்கள். ராஜ்ய செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நாம் மற்றொரு சமயத்தில் திரும்பச்சென்று சந்திக்க முயற்சிசெய்கிறோமா? அல்லது ஒருவேளை நாம் வீட்டுக்காரரோடு ஓர் அக்கறையூட்டும் சம்பாஷணையைக் கொண்டிருந்திருக்கிறோம், ஆனால் அவர் எந்தப் பிரசுரத்தையும் ஏற்றுக்கொள்கிறதில்லை. நாம் சத்தியத்தைப்பற்றி அவரோடு மேலுமாகப் பேசுவதற்குத் திரும்பிச்செல்கிறோமா?
2 நம்முடைய பிராந்தியத்தை முழுமையாக செய்துமுடிப்பதும் நாம் கண்டுபிடிக்கக்கூடிய அக்கறையுள்ள ஆட்கள் அனைவரையும் திரும்பச் சந்திப்பதும் முக்கியமாயிருக்கிறது. ஒரு புத்தகத்தையோ பத்திரிகைகளையோ ஏற்றுக்கொள்கிறவர்களை மட்டுமே நாம் மறு சந்திப்புச் செய்கிறோமா? அப்படியானால், நாம் அக்கறையுள்ள சில மக்களை கவனிக்கத் தவறிக்கொண்டிருக்கிறோம். வெறுமனே அவர் பிரசுரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, மேலுமான ஆவிக்குரிய உற்சாகமூட்டுதலுக்குத் தகுதியற்றிருப்பதாக ஒருவரை நாம் நிச்சயமாகவே நியாயந்தீர்க்க விரும்பமாட்டோம். (ரோமர் 14:4-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஒருவேளை நம்முடைய சந்திப்புக்குப் பிறகு, வீட்டுக்காரர் நாம் சொன்னதைப்பற்றி சிந்திக்கக்கூடும் அல்லது அவரைச் சந்திப்பதற்கு நாம் செய்த முயற்சியை மதித்துணரக்கூடும். நாம் திரும்பிச்செல்லும்போது, அவர் ஒருவேளை அதிக சாதகமாகப் பிரதிபலிப்பவராக இருக்கலாம்.
3 வேலையாய் இருந்த ஒரு நபரை மீண்டும் சந்திக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் உங்களை மீண்டும் ஒரு முறை பார்ப்பதில் சந்தோஷப்படுகிறேன். கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது, உங்களுக்கு நேரமில்லாத காரணத்தால் நாம் பேசமுடியவில்லை. நீங்கள் அதிக வேலையாக இருப்பவர் என்பதை நான் காணமுடிகிறது. ஆகவே நான் சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறேன். உங்களுக்காகவும் நீங்கள் நேசிக்கிறவர்களுக்காகவும் நல்ல ஆரோக்கியத்தைப்பற்றி நீங்கள் பெரும்பாலும் அக்கறையுடனிருக்கலாம். சகல வியாதிகளுக்கும் முடிவைக்கொண்டுவர கடவுள் வாக்களித்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தீர்களா? அது அதிசயமானதாய் இருக்குமல்லவா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] ‘இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்’ என்று தலைப்பிடப்பட்ட இந்தச் சிற்றேட்டில் 4-வது பத்தியிலுள்ள குறிப்பைக் கவனியுங்கள்.” நேரம் அனுமதிக்குமானால், பத்தியை வாசியுங்கள்; பிறகு புதிய உலகிலுள்ள நிலைமைகளைச் சித்தரித்துக்காட்டுகிற 5-வது பக்கத்திற்குக் கீழுள்ள வேதவசனங்களில் ஒன்றைச் சிந்தியுங்கள். வீட்டுக்காரர் ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையுடையவராக இருந்தால், நீங்கள் ஒரு வீட்டுப் பைபிள் படிப்பைத் தொடங்கக்கூடியவர்களாய் இருக்கலாம்.
4 ஒரு துண்டுப்பிரதியை ஏற்றுக்கொண்ட ஒருவரை திரும்பச் சந்திக்கும்போது, இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “கடந்த முறை நான் உங்களைப் பார்த்தபோது, நிஜமாகவே உலகத்தை ஆளுவது யார்? என்று தலைப்பிடப்பட்ட இந்தத் துண்டுப்பிரதியின் ஒரு பிரதியை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். சாத்தான் இந்த உலகத்தை ஆளுகிறான் என்பதை ஏற்றுக்கொள்வதைக் கடினமாகக் காண்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பக்கம் 6-லுள்ள முதல் பத்தியைக் கவனியுங்கள்.” அந்தப் பத்தியை வாசித்து, பிறகு இவ்வாறு கேளுங்கள்: “ஏன் சாத்தான் நம்மை ஏமாற்ற விரும்புவான்?” வீட்டுக்காரர் பதிலளித்தப் பிறகு, பக்கம் 3-லுள்ள நான்காவது பத்தியை ஒன்றுசேர்ந்து கலந்தாராயுங்கள். நீங்கள் அந்தத் துண்டுப்பிரதியை முற்றுமுழுமையாக சிந்திப்பதுடன் தொடரலாம், அல்லது நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேட்டை அறிமுகப்படுத்தி, பக்கம் 18-ல் உபதலைப்பின்கீழுள்ள தகவலைச் சிந்திக்க நீங்கள் விரும்பக்கூடும்.
5 நம்பிக்கையோடு இருப்பதற்கும், ஒரு மட்டுப்பட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலுங்கூட, நம்முடைய பிரசங்க வேலையில் நாம் காண்கிற அக்கறையுள்ள ஆட்களைத் திரும்பச் சந்திப்பதற்கும் நல்ல காரணம் இருக்கிறது. மற்றவர்களைக்குறித்து அக்கறைகொள்வது, சத்தியத்தை அவர்கள் கற்றுக்கொள்ளும்படி உதவிசெய்யத் தூண்டுவிக்கப்படுவது முக்கியமாய் இருக்கிறது. யெகோவாவின் அமைப்பு, மற்றவர்களைத் தங்களுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையவர்களாக்குவதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடிய பிரசுரங்களையும் ஆலோசனையாகக் கூறப்பட்ட பிரசங்கங்களையும் அளிக்கிறது.—மத். 5:3.
6 ஒருவேளை சிறிதளவே அக்கறையுடனிருந்த ஒருவருடன் நல்ல ஒரு சம்பாஷணையைக் கொண்டிருந்திருப்பீர்களாகில், அக்கறையை வளர்ப்பதற்கு மீண்டும் சென்று சந்திப்பதைத் தவறவிடாதீர்கள். அது ஒரு வீட்டுப் பைபிள் படிப்பைத் தொடங்குவதில் விளைவடைந்து ஒருவரை ஜீவனுக்கான பாதையில் வைக்கக்கூடும். இந்த ஜீவனைக் காக்கும் வேலையில் உள்ளப்பூர்வமாகத் தொடர்ந்து பங்குகொள்வதற்கு நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம்.—1 தீ. 4:16.