ஊழியத்துக்காக பைபிள் மாணாக்கர்களை ஆயத்தம் செய்யுங்கள்
1 புதிய சீஷர்களை, அதாவது, மற்றவர்களுக்கு கற்பிப்பதில் நம்மைச் சேர்ந்துகொள்ளும் ஊழியர்களை உண்டுபண்ணுவதே பைபிள் படிப்புகளை நடத்துவதில் இறுதி இலக்காகும். (மத். 28:19, 20) ஆகவே படிப்பின் நோக்கம் அறிவைப் புகட்டுவது மட்டுமே அல்ல; அது நம்முடைய மாணாக்கர்களில் இருதயப்பூர்வ விசுவாசத்தை படிப்படியாக அறிவுறுத்தி மற்றவர்களுடன் தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஆயத்தம் செய்ய வேண்டும். (2 கொ. 4:13) மற்றவர்களுக்குக் கற்பிக்கத் தகுதியுடையவராகும்படி என்ன நடைமுறையான வழிகளில் நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம்?—2 தீ. 2:2.
2 ஊழியத்தை இலக்காக வையுங்கள்: உண்மையான வணக்கம் ‘இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணுவதை’ உட்படுத்துகிறதென்பதைத் தொடக்கத்திலிருந்தே தெளிவாக்குங்கள். (ரோ. 10:10) யெகோவாவின் சாட்சிகள் என்ற நம்முடைய பெயரே, நாம் மற்றவர்களிடம் பேச வேண்டுமென்று குறிப்பாகத் தெரிவிக்கிறது. அவர்கள் கற்பிக்கப்படுவது அவர்களுடைய சொந்த இரட்சிப்புக்கு மாத்திரமே அல்லவென்பதைக் காணும்படி அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். அவர்கள்தாமே கற்பிப்போராகையில், அவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்போருக்கும் இரட்சிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது.—1 தீ. 4:16.
3 கற்றதை மறுபார்வையிடுங்கள்: கற்றதை அவ்வப்போது மறுபார்வையிடுதல் பயன்மதிப்புள்ள போதக உதவியாக உள்ளது. புதிதாகக் கற்ற சத்தியங்கள் மாணாக்கருடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமாய்ப் பதியச்செய்யப்பட்டு வருகையில் அவர் ஆவிக்குரியப் பிரகாரமாக வளரும்படி அது உதவிசெய்கிறது. காவற்கோபுர படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மறுபார்வையிடும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்கையில் இதை நாம்தாமே அனுபவித்திருக்கிறோம். உங்கள் மாணாக்கர் தன் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லும்படி, எளிய நேர்முகமான கேள்விகளைத் தயாரியுங்கள்.
4 உங்கள் மறுபார்வையிடுதல் வெளி ஊழிய சூழமைவைக் கொண்டிருக்கலாம். ஒரு கேள்வியைக் கேளுங்கள் அல்லது மற்றவர்களுக்குச் சாட்சிகொடுக்கையில் பொதுவாக எதிர்ப்படும் சந்தர்ப்ப நிலைமை ஒன்றை விவரியுங்கள். நீங்கள் வீட்டுக்காரராக நடித்து, உங்கள் மாணாக்கர் சொல்லவிருப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள். அவர் நன்றாகச் செய்தவற்றிற்குப் போற்றுதலைத் தெரிவித்து, அடுத்த முறை இதைப் பார்க்கிலும் இன்னுமதிகத் திறம்பட்ட முறையில் செய்யும்படி அவருக்கு உதவிசெய்ய நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள். இந்தப் பயிற்றுவிப்பு, தான் கற்றிருப்பவற்றைப் பயன்படுத்துவது எவ்வாறென அவருக்குக் கற்பித்து, பைபிளைப் பயன்படுத்துவதில் அவருடைய திறமையை முன்னேற்றுவிக்கும்.
5 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம்: உங்கள் மாணாக்கர் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் ஒரு பிரதியை உடையோராக இருக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அதைப் பயன்படுத்துவதற்கு அவரைப் பயிற்றுவியுங்கள். உரையாடல்களைத் தொடங்குவது, பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, அல்லது எதிர்ப்புகளைக் கையாளுவது ஆகியவற்றின்பேரில் அது ஆலோசனைகளை எவ்வாறு அளிக்கிறதென்பதைக் காட்டுங்கள். மற்றவர்களிடம் நம்பவைக்கும் முறையில் பேசுவதற்கான வழிகளை நடிப்பித்துக் காட்டுவதற்கு படிப்பில் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். இராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு இந்தப் புத்தகம் அவருடைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவருடைய முன்முயற்சியை அதிகரிக்கக்கூடும்.
6 கூட்டங்களின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துங்கள்: சபைக் கூட்டங்கள், முக்கியமாய் ஊழியக் கூட்டமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் வெளி ஊழியத்துக்காக நம்மை ஆயத்தம் செய்யும்படி திட்டமிடப்பட்டிருக்கின்றன. பலன்தரத்தக்க சாட்சிகொடுத்தலுக்குத் தேவைப்படும் அடிப்படையாக முக்கியமானவை யாவும், அனுபவமும் திறமையுமுடையோரால் மறுபார்வையிடப்பட்டு நடித்துக் காட்டப்படுகின்றன. கூட்டங்களின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி, அதற்கு வந்திருக்கும்படி அவருக்கு உதவிசெய்ய உங்களாலானதைச் செய்யுங்கள். தவறாமல் கூட்டங்களுக்கு வருவது உங்கள் மாணாக்கர் இயேசுவின் உண்மையான சீஷராவதற்குத் தேவைப்படும் தூண்டுதலை அவருக்கு அளிக்கக்கூடும்.
7 உங்கள் சொந்த முன்மாதிரிக்குக் கவனம் செலுத்தத் தவறக்கூடாது. பிரசங்க ஊழியத்தில் உங்கள் மனப்பூர்வமும் தவறாது ஈடுபடுவதும் சத்தியத்துக்காகக் கொண்டுள்ள உங்கள் ஆழ்ந்த மதித்துணர்வைக் காட்டுகின்றன. இத்தகைய போக்கு உங்கள் மாணாக்கர் தன் விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்ட இன்னுமதிகம் செய்யும்படி அவரை ஊக்குவிக்கிறது. (லூக். 6:40) புதியவர் ஒருவர், ஊழியத்தை ஒரு சிலாக்கியமாகக் கருதி அதில் பங்குகொள்வதற்கு நன்றியறிதலுள்ளவராக இருக்கும்படி இதெல்லாம் அவருக்கு உதவிசெய்யக்கூடும்.—1 தீ. 1:12.