எவ்வாறு ‘சந்தோஷப்படலாம்’ என்பதை இளைஞருக்குச் சொல்லுதல்
ஆபத்தான நிலைமைகள், நிறைவேற்றமடைந்து வருவதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகிற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இளைஞர் உட்பட, அநேகர் அமைதலும் சமாதானமுமான வாழ்க்கை வாழ்வதற்காக சஞ்சலப்படுத்துகிற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாடிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு ‘இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடுவது’ என்பதன்பேரில் அவர்கள் பைபிளின் ஆலோசனையிலிருந்து பயனடைய முடியும். (பிர. 11:9, 10) மார்ச் மாதத்தின்போது, இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை சிறப்பித்துக் காண்பிப்பதன்மூலம் அவர்கள் ‘சந்தோஷப்படுவதற்கு’ உதவிசெய்யும் வாய்ப்பு நமக்கிருக்கிறது. நாம் அதை அளிக்கையில், இளைஞர் எதிர்ப்படுகிற பிரச்சினைகளும் இன்று பொதுவாக மனிதவர்க்கத்தினர் எதிர்ப்படுகிற பிரச்சினைகளும் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டவை, மேலும் பைபிள் அதற்கான பரிகாரங்களை அளிக்கிறது என்பதை நம் மனதில் வைத்திருக்க வேண்டும். அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்?
2 இந்த அணுகுமுறை பலன்தரத்தக்கதாக இருக்கலாம்:
◼“குடும்ப ஒற்றுமையின்மை, விவாகரத்து, தனிமை, பாலுறவால் கடத்தப்படுகிற வியாதிகள், போதைமருந்து மற்றும் மதுபானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இன்னுமநேக பிரச்சினைகளும் இந்த 20-ம் நூற்றாண்டில் இளைஞரை பீடித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்கையில் அநேகர் ஆச்சரியப்படுகின்றனர். உதாரணமாக, நண்பர்களை கண்டடைவதும் நட்பைக் காத்துக்கொள்வதும் பற்றிய பொருளின்பேரில், புகழ்பெற்ற பிரசங்கங்கள் ஒன்றில் இயேசுவால் கொடுக்கப்பட்ட பொன்விதியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். [இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தைத் திறந்து, பக்கம் 163, பாரா 1-லிருந்து பொன்விதியை வாசியுங்கள்.] குடும்பத்தினருடனும் மற்றவர்களுடனும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் காத்துக்கொள்ள உதவுகிற மற்றொரு நியமம் ரோமர் 12:17, 18-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. [அதே பக்கத்திலுள்ள பாரா 3-லிருந்து இதை வாசியுங்கள்.] உங்களுடைய அன்றாட வாழ்க்கையை இதமாகவும் அதிக சந்தோஷகரமாகவும் ஆக்குவதற்கு இவற்றையும் மற்ற நியமங்களையும் எவ்வாறு பொருத்திப் பிரயோகிப்பது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?” கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிற பொருள்கள் சிலவற்றை பக்கங்கள் 8 மற்றும் 9-ல் உள்ள பொருளடக்க அட்டவணையிலிருந்து சுட்டிக்காட்டி, பின்பு புத்தகத்தை அளியுங்கள்.
3 ஒருவேளை இந்தக் கேள்வி ஒரு நல்ல கலந்துரையாடலைத் தூண்டிவிடலாம்:
◼“இளைஞர் தங்களுடைய பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு உதவ ஏதாவது செய்யமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இன்று மேற்படிப்புக்கான வாய்ப்பு ஏராளம் இருப்பதை அநேக மக்கள் அறிந்திருக்கின்றனர். ஆனால் ஒழுக்கநெறி கல்வியை—வாழ்க்கைக்கான கல்வியை—பற்றியென்ன? மேம்பட்ட, சந்தோஷகரமான வாழ்க்கை வாழ இளைஞருக்கும் முதியோருக்கும் உதவிசெய்வதற்கு ஆலோசனைக்கான நம்பத்தக்க ஊற்றுமூலம் ஏதாவது இருக்கிறதா?” ஏசாயா 48:17, 18-ஐ வாசித்து, இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கம் 6, பாரா 2-ன் இரண்டாவது பகுதியின்பேரில் குறிப்பு சொல்லுங்கள். இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் அடிப்படையிலான ஆலோசனையிலிருந்து வீட்டுக்காரர் எவ்வாறு தனிப்பட்ட விதமாக பயனடையலாம் என்பதை விளக்குங்கள்.
4 இதுபோன்ற ஒன்றை சொல்வதை நீங்கள் எளிதாக உணரலாம்:
◼“அநேக இளைஞர் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மனச்சோர்வடைந்தவர்களாய் இருக்கின்றனர், அவர்களுடைய பெற்றோரும் அதேபோல தங்களுடைய பிள்ளைகளின் நலத்தைப் பற்றியே கவலைப்படுகின்றனர். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற இந்தப் புத்தகம், இளைஞர் திருப்திகரமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை இப்பொழுதே வாழ்வதற்கு உதவிசெய்கிறது, அதோடு அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளிக்கிறது.” 38-ம் அதிகாரம் உட்பட, அதிகாரத்தின் தலைப்புகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுங்கள், பின்பு பக்கம் 306-க்குத் திருப்பி எதிர்காலத்திற்கான யெகோவாவின் நோக்கத்தைக் குறிப்பிடுங்கள். அந்தப் புத்தகத்தின் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்படி வீட்டுக்காரரை அழையுங்கள். எல்லாருக்கும் நன்மைகளைக் கொண்டுவந்து இன்று இளைஞர் எதிர்ப்படுகிற அநேக பிரச்சினைகளை நீக்கி வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு உதவ, அதன் நடைமுறையான தகவலை எவ்வாறு குடும்பத்தில் வாசித்து கலந்தாலோசிக்கலாம் என்பதைக் காண்பியுங்கள்.
5 கடவுளுடைய வார்த்தையில் அடங்கியுள்ள ஆலோசனை மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் நடைமுறையானதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் பைபிளின் வார்த்தைகளைக் கேட்பது அவசியம். இளைஞருக்கும், மற்றவர்களுக்கும் இந்தச் சந்தோஷத்தின் ஊற்றுமூலத்தைச் சொல்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோமாக.