நம்முடைய பயனியர்களை மதித்துணருதல்
1 கடவுளுடைய ராஜ்யத்திற்கான உடன் வேலையாட்கள் ஒருவரையொருவர் பலப்படுத்துகிறார்கள். (கொலோ. 4:11) நற்செய்தியை பிரசங்கிப்பது கிறிஸ்தவ சபையின் முக்கிய வேலை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கையில், நம் மத்தியிலுள்ள முழுநேர ஊழியர்களை நாம் மதித்துணருவதற்கு நமக்கு வற்புறுத்தும் காரணம் இருக்கிறது.—மாற்கு 13:10; ரோ. 16:2; பிலி. 4:3.
ஏன்?
2 பிரசங்க வேலையின் வெவ்வேறு அம்சங்களில் அனுபவத்தில் குறைவுபட்ட பிரஸ்தாபிகளுடன்கூட சேர்ந்து வேலை செய்வதன் மூலம் பயனியர்கள் சபையை நேரடியாக கட்டியமைக்கிறார்கள். பத்திரிகை ஊழியம், மறுசந்திப்புகளுக்கு ஆயத்தம் செய்து அவற்றிற்கு செல்லுதல், வேதப்படிப்புகளைத் துவங்கி திறம்பட்ட முறையில் நடத்துவது ஆகியவற்றை இது உட்படுத்தும். கூடுதலாக, பயனியர்கள் முறைப்படியல்லாத சாட்சி வேலையில் தைரியத்துடன் பங்குகொள்வதில் முன்மாதிரியை வைக்கிறார்கள். வார நடுவில் சாட்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் ஆதரிப்பதானது மற்றவர்களுக்கு உதவுவதற்கு வாய்ப்புகளை அளிக்கிறது. வார கடைசியில், மற்ற பிரஸ்தாபிகளில் அநேகர் பங்குகொள்ளும் இந்தச் சமயத்தில் பயனியர்கள் வெளி ஊழியத்தை ஆதரிக்கையில், ஊழியத்தில் அவர்களுடைய உடன்பாடான செல்வாக்கு உணரப்படுகிறது.
3 பயனியர்கள் பிராந்தியத்தை முழுமையாகவும் அடிக்கடியும் வேலை செய்வதற்கு சபைக்கு உதவுகிறார்கள். ஆட்கள் நம்முடைய செய்தியை நன்றாக அறிந்துகொண்டு, நாம் யார் என்று அறிந்திருப்பதால் நாம் சந்திக்கையில் சாவகாசமான முறையில் பேசுவதற்கு இது உதவுகிறது. பிராந்தியத்தில் பிரசுரங்களை விட்டுவந்து, அக்கறையை வளர்ப்பதிலும்—உண்மையில் சத்தியத்தின் விதைகளை விதைத்து, நீர்பாய்ச்சி வருவதில்—பயனியர்கள் செலவிடும் பல மணிநேரம் கட்டாயமாகவே மேலும் பலன்தரும் பிராந்தியத்தை உண்டுபண்ணுகிறது.—1 கொரி. 3:6.
சபையில்
4 உண்மையுள்ள பயனியர்களின் வைராக்கியத்தாலும் உற்சாகத்தாலும் தங்களுடைய இருதயம் தூண்டப்பட்டதால் அநேகர் முழு-நேர ஊழியத்தை செய்ய உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சபையில் ஒருவரும் ஒழுங்கான பயனியராக இராததால் ஒரு சகோதரி பயனியராவதற்கு சிறிது தயங்கினாள். ஆகிலும், வட்டார கண்காணி உற்சாகப்படுத்தினபோது, அவள் முன்சென்று பயனியர் செய்வதற்கு தன் பெயரைக் கொடுத்தாள். சீக்கிரத்தில் மற்றவர்கள் அவளுடன் சேர்ந்துகொண்டார்கள், இப்போது அந்தச் சபையில் அநேக வைராக்கியமுள்ள பயனியர்கள் இருக்கிறார்கள்.
5 சில சமயங்களில் ஒரு பயனியர் ஒழுங்கற்ற அல்லது செயலற்ற ஒருவருக்கு உதவி செய்யும்படி மூப்பர்கள் கேட்கக்கூடும். அந்த நபருடன் ஒரு வேதப்படிப்பு நடத்துவதையும் இந்த உதவி உட்படுத்தும். பயனியரின் விசுவாசமும் வைராக்கியமும் சத்தியத்திற்கான அந்த நபரின் அன்பை கிளரிவிட்டு, தன்னுடைய ஒப்புக்கொடுத்தலின் உத்தரவாதத்தை நிறைவேற்ற உழைப்பதற்கு அவனை மீண்டும் செயற்படும்படி உற்சாகப்படுத்தக்கூடும்.—1 தெச. 5:14.
பயனியர்களை உற்சாகப்படுத்துங்கள்
6 பயனியர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்த அதிகம் செய்கையில், தங்களுடைய மகிழ்ச்சியூட்டும் ஊழியத்தில் தொடர்ந்திருக்க அவர்களுக்கும் உற்சாகம் தேவை. (ரோ. 1:12) பயனியர் ஊழியத்தைப் பற்றி நீங்கள் உடன்பாடான முறையில் பேசுகிறீர்களா? அவன் அல்லது அவளுடைய வேலைக்காகவும் சுய-தியாகம் செய்யும் ஆவிக்காகவும் ஒரு பயனியருக்கு நீங்கள் போற்றுதலை கடைசியாக எப்போது தெரிவித்தீர்கள்? வெகு சில பிரஸ்தாபிகளே வெளியூழியத்தில் செல்லக்கூடிய அந்த மணிநேரங்களின்போது தங்களோடு ஊழியத்தில் வேலை செய்வதற்கு யாராவது இருப்பதை பயனியர்கள் விசேஷமாக போற்றுவார்கள். நீங்கள் பயனியர்களுடன் சென்று, ஒருவேளை மேலும் அதிக நேரம் அவர்களுடன் இருந்து பிரசங்க வேலையை ஆதரிக்கக்கூடுமா?
7 வேறு என்ன விதத்தில் நீங்கள் பயனியர்களுக்கு உற்சாகம் அளிக்கலாம்? போற்றுதல் தெரிவிப்பதோடுகூட, அவர்களோடு உணவு பகிர்ந்துகொள்வதன் மூலம், முன்வந்து பிரயாண செலவுகளுக்கு உதவி அளிப்பதன் மூலம், மற்றும் உங்களால் கூடிய விதத்தில் வேறு ஆதரவு கொடுப்பதன் மூலம் அவர்களுடைய கடின உழைப்புக்கு காணக்கூடிய போற்றுதலைக் காட்டலாம்.—1 தெச. 5:12, 13.
8 மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபையில் முன்சென்று காரியங்களை செய்கையில், பயனியர்களும் பிரஸ்தாபிகளும், வெளி ஊழியத்திற்கான நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். இப்படியாக, நமக்கு இருக்கும் ஈவுகளை நாம் யாவருமே ‘ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்வதில்’ உபயோகிப்போம்.—1 பேதுரு 4:10, 11.