கட்டியெழுப்புகிறவர்களாய் இருங்கள்
1 நாம் ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதால் நம் அனைவருக்குமே உற்சாகம் தேவைப்படுகிறது. (2 தீ. 3:1, NW) தன்னுடைய நாளிலேயே இந்தத் தேவையைக்குறித்து நன்கு உணர்ந்தவராக பவுல் தன்னுடைய சகோதரர்களுடனுள்ள கூட்டுறவுகளை ‘உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்வதற்கான’ வாய்ப்புகளாகப் பயன்படுத்த வாஞ்சையாய் இருந்தார். ‘ஒருவரையொருவர் கட்டியெழுப்பக்கூடிய காரியங்களை நாடும்படி’ அவர் தன் சகோதரர்களை உந்துவித்தார். (ரோ. 1:11, 12; 14:19; NW) இந்த முயற்சிகள், ‘சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தின.’ (அப். 14:22) இன்று நமக்கு அதுபோன்ற உற்சாகம் மிகவும் தேவை.
2 நாம் சொல்லும் காரியங்களால் மற்றவர்களைக் கட்டியெழுப்புகிறவர்களாய் இருக்க முடியும். சரியாகப் பயன்படுத்தப்பட்டால், நம் வார்த்தைகள் ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களைப்போல’ இருக்கலாம். (நீதி. 25:11) கூட்டங்களில் பங்கெடுப்பதன்மூலம், நாம் ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறோம்.’ (எபி. 10:25, NW) நாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, பாராட்டுகளைத் தெரிவிக்கும்போது, அல்லது ஆவிக்குரிய காரியங்களைக் கலந்துபேசும்போது நம் நாவு நல்லமுறையில் பயன்படுத்தப்படலாம். அப்படிப்பட்ட பயனுள்ள முறையில் நாவைப் பயன்படுத்துவது ‘பக்திவிருத்திக்கு ஏதுவாக, கேட்பவர்களுக்குப் பிரயோஜனமுள்ளதாக’ இருக்கும்.—எபே. 4:29.
3 கட்டியெழுப்பக்கூடிய காரியங்களைப்பற்றி பேசுங்கள்: நம்முடைய பேச்சைக்குறித்து உதவியளிக்கும் வழிகாட்டுக் குறிப்புகளை பிலிப்பியர் 4:8-ல் பவுல் அளித்தார். உண்மையுள்ள, ஆழ்ந்த அக்கறைக்குரிய (NW), நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள, புண்ணியமான, புகழத்தக்க காரியங்களைப்பற்றி சிந்திக்கும்படி அவர் கூறினார். கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு பேசினால், நாம் சொல்பவை உண்மையாகவும் மற்றவர்களுக்குப் பிரயோஜனமுள்ளவையாகவும் இருக்கும் என்று நாம் எப்போதும் நிச்சயமாக இருக்கலாம். (யோவா. 17:17) நம்முடைய கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலும், சபை கூட்டங்களில் நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களும், நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றும் விதமும், அதுபோன்ற மற்ற காரியங்களும் ஆழ்ந்த அக்கறைக்குரிய காரியங்கள். கடவுளுடைய வார்த்தையின் தராதரங்களையும் நியமங்களையும் பற்றிய கட்டியெழுப்பும் உரையாடல்கள் நம்மை “இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ள”வர்களாக்க உதவுவது நிச்சயம். (2 தீ. 3:15) யெகோவாவின் சுத்தமான அமைப்பிலுள்ளவர்களால் பின்பற்றப்படும் கற்புள்ள நடத்தைக்கு நாம் போற்றுதலைத் தெரிவிக்க முடியும். நம்முடைய சகோதரர்களின் தயவான அன்பிற்குரிய செயல்களை நாம் பாராட்டலாம். (யோவா. 13:34, 35) நம் சகோதரர்களிடத்தில் நாம் காண்கிற விசுவாசம், சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை போன்ற ஆரோக்கியமான கிறிஸ்தவ பண்புகளை நற்கீர்த்தியுள்ள காரியங்கள் உள்ளடக்கும். அப்படிப்பட்ட புண்ணியமான புகழத்தக்க காரியங்களைப்பற்றி உரையாடுவது மற்றவர்களை ‘கட்டியெழுப்புவதற்கு நன்மையானது.’—ரோ. 15:2, NW.
4 ஒவ்வொரு நாளும், உலகின் சோர்வூட்டும் கவலைகளை நாம் எதிர்ப்படுகிறோம். இந்தக் காரியங்களில் மூழ்கியிராமல் நம் சகோதரர்களுடன் அன்பான கூட்டுறவைப் பகிர்ந்துகொள்வது எவ்வளவு புத்துணர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது! நாம் ஒன்றாகச் சேர்ந்து செலவிடக்கூடிய அருமையான நேரம் நேசித்துக் காக்கவேண்டிய பொக்கிஷமாக இருக்கிறது. நாம் எப்போதும் உற்சாகமளிக்கிறவராகவும் கட்டியெழுப்புகிறவராகவும் இருந்தால், மற்றவர்கள் நம்மைப்பற்றி உண்மையாக இவ்வாறு சொல்வார்கள்: “அவர்கள் என் ஆவிக்கு . . . புத்துணர்ச்சி அளித்திருக்கிறார்கள்.”—1 கொ. 16:18, NW.