உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/96 பக். 7
  • தைரியத்துடன் பேசுவீர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியத்துடன் பேசுவீர்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • ‘கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • எங்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • தேவவசனத்தைத் தொடர்ந்து தைரியமாகப் பேசுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 1/96 பக். 7

தைரியத்துடன் பேசுவீர்

1 சமீப ஆண்டுகளில், ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் சந்தித்து பேசமுடியாமால் இருப்பது அதிகரித்து வருவதை சில இடங்களிலுள்ள பிரஸ்தாபிகள் கண்டுள்ளனர். தங்களுடைய பிராந்தியத்தில் வீட்டுக்கு வீடு செல்லுகையில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்கள் வீட்டில் இருப்பதில்லை என்று பலர் அறிக்கைசெய்கிறார்கள். அதன் விளைவாக, பெரும் பகுதியான நேரம் பலன் இல்லாமலே செலவிடப்படுகிறது.

2 சில வருடங்களுக்கு முன், ஞாயிற்றுக்கிழமையில் ஜனங்கள் வீடுகளில் இருந்தார்கள், ஓய்வாக இருப்பதற்கான நாளாக அது பொதுவாகவே கருதப்பட்டது. பண்பாடுகள் மாறிவிட்டன. ஜனங்கள் உலகப்பிரகாரமான வேலைக்குச் செல்வது, சாமான்களை வாங்க கடைக்குச்செல்வது போன்ற குடும்பத்தின் தேவையைப் பராமரிப்பது அல்லது பொழுதுபோக்கில் மூழ்கியிருப்பது ஆகிய அனைத்தும் அவர்களை வீட்டிற்கு வெளியே கொண்டு செல்வது இன்று சர்வசகஜம். ஆகவே, ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வீட்டுக்கு வீடு செல்கையில் ஜனங்களை தொடர்புகொள்வது பிரச்சினையாக மாறிவிட்டது.

3 ஜனங்கள் வீட்டில் இல்லையென்றால், அவர்கள் வேறெங்காவது இருப்பார்கள் என்பது தெரிந்ததே. ஜனங்களிடத்தில் பேசுவதே நம்முடைய நோக்கமாக இருப்பதால் அவர்களை—தெருக்களிலும், சந்தைவெளிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும்—சந்திக்கையில் நாம் பேசலாமே. “எதிர்ப்பட்டவர்களோடு” சாட்சிகொடுப்பது பவுலின் வழக்கமாக இருந்தது. (அப். 17:17) இது அந்தக் காலத்தில் பலன்தரும் விதத்தில் பிரசங்கிக்கும் ஒரு முறையாக இருந்தது. இது நம் நாளிலும் பலன்தரும் விதத்தில் பிரசங்கிக்கும் ஒரு முறையாக உள்ளது.

4 நாம் வீட்டுக்கு வீடு செல்கையில், ஜனங்கள் அவசரமின்றி நிதானமாக செல்வதையோ யாருக்காகவாவது காத்திருப்பதையோ பொதுவாகவே நாம் பார்க்கிறோம். ஓர் அருமையான நாளில், அவர்கள் பூங்காவனத்தில் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள் அல்லது தங்களுடைய வாகனங்களைப் பழுது பார்த்துக்கொண்டோ கழுவிக்கொண்டோ இருப்பார்கள். ஒரு சம்பாஷணையை ஆரம்பிக்க, நேசமாகப் புன்னகையைச் சிந்துவதும் நட்பான வாழ்த்துதலை சொல்லுவதும் மாத்திரம் நாம் செய்யவேண்டியிருக்கலாம். அவர்கள் அருகாமையில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை வீட்டில் சந்திக்க தவறிவிட்டோம் என்றும் இப்போது அவர்களிடத்தில் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம் என்றும் நாம் குறிப்பிடலாம். இன்னும் கொஞ்சம் தைரியத்தைக் காட்டும்படி முன்வந்து பேசுவதன்மூலம், பலன் தரும் அனுபவங்களை பலர் கொண்டிருக்கின்றனர்.

5 தைரியம் பலன்களைக் கொடுக்கிறது: நின்று கொண்டிருப்போரையும் பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டிருப்போரையும் நிதானமாக நடந்துசெல்வோரையும் அல்லது தங்களுடைய காரில் அமர்ந்திருப்போரையும் தான் அணுகுவதாக ஒரு சகோதரர் கூறினார். அனலான புன்னகையுடனும், மகிழ்ச்சியான குரலுடன், சந்திக்க விரும்பும் ஒரு சிநேகப்பான்மையுள்ள அயலகத்தானாகத் தன்னை காட்டிக்கொள்கிறார். இவ்விதமாக அவர் அதிகமான பிரசுரங்களை அளித்தது மாத்திரமல்ல, ஆனால் பல பைபிள் படிப்புகளையுங்கூட ஆரம்பித்திருக்கிறார்.

6 ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்து கொண்டிருக்கையில், ஒரு பெரிய பை நிறைய மளிகைச் சாமான்களை சுமந்துகொண்டு, நடந்து வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை அவர்கள் எதிர்ப்பட்டார்கள். அவருடைய குடும்பத்தின் தேவைகளைப் பராமரிப்பதில் அவருக்கிருந்த ஊக்கத்தைப் போற்றுவதன் மூலம், சம்பாஷணையை ஆரம்பித்தார்கள். “ஆனால், யார்தான் மனிதவர்க்கத்தின் தேவைகளை நிறைவு செய்யமுடியும்?” என்று அவர்கள் கேட்டார்கள். இது அந்தப் பெண்ணின் அக்கறையைத் தூண்டியது. ஒரு சுருக்கமான சம்பாஷணை, தன்னுடைய வீட்டிற்கு அவர் அழைப்பதிலும், அங்கே ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிப்பதிலும் விளைவடைந்தது.

7 ஆகவே, அடுத்தமுறை நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சரி அல்லது வாரத்தின் வேறு எந்தக் கிழமையாக இருந்தாலும் சரி, வீட்டில் ஆட்களை சந்திக்க முடியவில்லை என்றால், ஏன் இன்னும் கொஞ்சம் தைரியத்தை திரட்டிக்கொண்டு—தெருக்களிலோ மற்ற இடங்களிலோ—சந்திக்கும் ஆட்களிடத்தில் பேசக்கூடாது? (1 தெ. 2:2) உங்களால் அதிக பலன்தரும் ஊழியத்தைக் கொண்டிருக்கமுடியும், உங்களுடைய சேவையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்