உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/96 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • சீஷராக்கும் அவசர சேவை வளரும் வேகத்தில் ஒரு கண்ணோட்டம்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—⁠பகுதி 2
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 10/96 பக். 7

கேள்விப் பெட்டி

◼ அறிவு புத்தகத்தில் ஒரு நபருடன் எவ்வளவு காலத்திற்கு முறைப்படியான பைபிள் படிப்பை நடத்த வேண்டும்?

இன்று யெகோவா தம்முடைய அமைப்பை ஆசீர்வதித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புதியவர்கள், சத்தியத்திற்காக நிலைநிற்கை எடுக்கையில் இதற்கான அத்தாட்சியை நாம் காண்கிறோம். இதைச் செய்துமுடிப்பதற்கு அறிவு புத்தகம் ஒரு திறம்பட்ட கருவியாக நிரூபித்துவருகிறது. ஒரு பைபிள் மாணாக்கர் சற்று விரைவிலேயே ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்ய, ஒருவேளை ஒருசில மாதங்களுக்குள் முழுக்காட்டுதலைப் பெறுமளவுக்கு உதவும்படி இந்தப் புத்தகம் திட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று ஜனவரி 15, 1996, காவற்கோபுரம் பிரதி குறிப்பிட்டுக் காட்டியது.

இந்தக் காரணத்துக்காக, அதே காவற்கோபுரம், பக்கம் 17-ல் இவ்வாறு ஆலோசனை கூறியது: ‘ஒரு நபர் அறிவு புத்தகத்தில் தன் பைபிள் படிப்பை முடித்து முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, இரண்டாவது புத்தகத்தில் அவரோடு முறைப்படியாக படிப்பு நடத்துவதற்கு அவசியம் இருக்காது.’

அறிவு புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு, முழுக்காட்டுதலைப் பெறாத ஒரு நபரைக் குறித்து என்ன? அறிவு புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு, அதே மாணாக்கருடன் கூடுதலான புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை என்பதைப் பற்றி காவற்கோபுரத்தில் சொல்லப்பட்ட குறிப்பை ஜூன் 1996, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 6, பாரா 23, மீண்டும் நமக்கு நினைப்பூட்டியது. இதற்கும் மேல், ஒரு பைபிள் மாணாக்கருக்கு உதவுவதில் நாம் அக்கறை உடையவர்களாய் இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. மக்கள், சத்தியத்தைக் குறித்து ஓர் அடிப்படை அறிவை பெற நாம் விரும்புகிறோம். இருந்தாலும், ஓரளவு குறைந்த காலப்பகுதிக்குள், உண்மை மனதுள்ள, சராசரி மாணாக்கர் ஒருவர் யெகோவாவைச் சேவிக்கும்படி அறிவுப்பூர்வமாகத் தீர்மானம் எடுப்பதற்குப் போதுமான அறிவைப் பெற்றுக்கொள்ள, ஒரு திறம்பட்ட போதனையாளரால் உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, சில பைபிள் மாணாக்கர்கள் ஒரு வாரத்தில் ஒன்றிற்கும் அதிகமான முறை படிக்கவும்கூட விரும்பக்கூடும்.

ஒத்துக்கொள்ளத்தக்க விதமாக, சில மாணாக்கர்கள் மற்றவர்களைவிட மிகவும் மெதுவாக முன்னேற்றமடைவார்கள். ஆனால், பொதுவாக எடுக்கும் நேரத்தைவிட ஒருவேளை நீண்ட காலமெடுத்து, அறிவு புத்தகத்தைப் படித்த பிறகு, அந்த நபர் சபையுடன் சேர்ந்துகொள்ள விரும்புவதாகத் தீர்மானித்திராவிட்டால், அந்தப் பிரஸ்தாபி, சபை ஊழியக் குழுவிலுள்ள மூப்பர்களில் ஒருவரோடு அந்த நிலைமையைக் குறித்துக் கலந்துபேசுவது நல்லது. விசேஷமான அல்லது அசாதாரணமான சூழ்நிலைகள் உட்பட்டிருந்தால், கூடுதலான சில உதவிகள் கொடுக்கப்படுவதை அவை தேவைப்படுத்தக்கூடும். ஜனவரி 15, 1996, காவற்கோபுரத்தில் பக்கம் 17-ல், 11 மற்றும் 12-ம் பாராக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நியமத்திற்கு இது ஒத்திசைவானதாக இருக்கிறது.

சத்தியத்தைப் பற்றிய ஓர் அடிப்படை அறிவைக் கற்றுக்கொண்டிருப்பதற்கான மதித்துணர்வுதானே, கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லும்படி அந்த மாணாக்கரை உந்துவிக்க வேண்டும். இது அந்த மாணாக்கர், யெகோவாவைச் சேவிப்பதற்கான தன் விருப்பத்திற்கு ஏதாவது தெளிவான அத்தாட்சியைக் கொடுக்க வழிநடத்தலாம். அறிவு புத்தகத்திலிருந்து இன்னும் நீண்ட காலத்திற்கு படிப்பு நடத்தப்பட்ட பிறகும் அப்படிப்பட்ட ஆவிக்குரிய மதித்துணர்வுக்கான அத்தாட்சி காண்பிக்கப்படவில்லை என்றால், அந்தப் படிப்பைத் தொடர்வதை நிறுத்திவிடுவது நல்லதாக இருக்கக்கூடும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்