“உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்”
1 நாம் யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தபோது, நம்மிடமுள்ள மிகச் சிறந்ததையே அவருக்குக் கொடுப்பதாக வாக்களித்தோம். யெகோவாவுக்குமுன் தங்களுடைய நிலைநிற்கையை உறுதிப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு உற்சாகப்படுத்தியது பொருத்தமாகவே இருந்தது. (2 பே. 1:10) இன்று யெகோவாவை சேவிக்கையில் அவரைப் பிரியப்படுத்துவதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய நிச்சயமாகவே நாம் விரும்புகிறோம். இது எதை உட்படுத்துகிறது? யெகோவாவுடன் நமக்குள்ள உறவு நெருக்கமாகையிலும் அவர் நமக்கு செய்திருக்கிற அனைத்தையும் தியானிக்கையிலும், எப்பொழுதும் அவருடைய சேவையில் நம்முடைய மிகச் சிறந்ததையே செய்வதற்கு நம் இருதயம் தூண்டுகிறது. நம்முடைய ஊழியத்தின் தரத்தை முன்னேற்றுவிக்க நாம் விரும்புகிறோம்; அதோடு ஊழியத்தின் எந்த அம்சத்தில் முடியுமோ அதில் அதிகளவு ஈடுபடவும் விரும்புகிறோம்.—சங். 34:8; 2 தீ. 2:15, NW.
2 ஊழியத்தில் அதிகம் செய்ய விரும்பிய இளம் சகோதரர் ஒருவர், கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படித்துவந்தது, யெகோவாவுக்கான தனது போற்றுதலை அதிகப்படுத்தி தன்னில் அதிக வைராக்கியத்தை வளர்த்ததாக கண்டார். இது அவரைப் பயனியர் சேவைக்காக விண்ணப்பிக்கும்படி தூண்டியது. முன்பின் தெரியாதவர்களிடம் பேச சிரமப்பட்ட ஒரு சகோதரி, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள பிரசங்கங்கள் சிலவற்றை பழகிப்பார்த்தார்; சீக்கிரத்தில் தன்னுடைய ஊழியத்தில் பெரும் வெற்றியை அனுபவிக்க ஆரம்பித்தார். ஒரு தம்பதியுடன் அவரால் பைபிள் படிப்பு ஒன்றை நடத்த முடிந்தது; அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
3 உங்களால் செய்ய முடிந்ததில் களிகூருங்கள்: மோசமான உடல்நிலை, குடும்பத்தில் எதிர்ப்பு, வறுமை, அல்லது பிராந்தியத்திலுள்ளவர்களுடைய அக்கறையின்மை போன்ற கடினமான சூழ்நிலைமைகளை நம்மில் சிலர் எதிர்ப்படுகிறோம். இந்தக் கடைசி நாட்களில் சர்வசாதாரணமாய் காணப்படும் மற்ற அநேக பிரச்சினைகள் நம்முடைய ஊழியத்தைத் தடைசெய்யலாம். (லூக். 21:34, NW அடிக்குறிப்பு; 2 தீ. 3:1) யெகோவாவுக்கு கொடுத்த நம்முடைய ஒப்புக்கொடுத்தலில் நாம் தவறிவிட்டோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நம்மால் இயன்றளவுக்கு அவரை சேவித்து வருவோமானால் அவ்வாறு அர்த்தப்படுத்தாது.
4 மற்றவர்களால் என்ன செய்ய முடிந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் நம்மைநாமே மதிப்பிட்டுக் கொள்வது ஞானமானதல்ல. அதற்குப் பதிலாக, “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்” என்பதாக வேதாகமம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் தனிப்பட்ட விதமாக முடிந்தளவுக்கு நம்மையே முழுமையாக மனமுவந்தளிப்பது யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது; மேலும், ‘சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதற்கான காரணத்தை’ (NW) நமக்கு கொடுக்கிறது.—கலா. 6:4; கொலோ. 3:23, 24.
5 ‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே கடவுள் முன்பு நாம் காணப்பட நம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும்படி’ சொல்லப்பட்ட பேதுருவின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போமாக. (2 பே. 3:14, NW) அப்படிப்பட்ட மனப்பான்மை நம்மை பாதுகாப்பாய் உணரும்படிச் செய்து, யெகோவாவால் மாத்திரமே கொடுக்க முடிகிற மனநிம்மதியை நமக்குக் கொண்டுவரும்.—சங். 4:8.