உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/98 பக். 6
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 5/98 பக். 6

கேள்விப் பெட்டி

◼ யெகோவாவின் சாட்சிகள் தன்னுடைய வீட்டிற்கு இனி வரவே வேண்டாம் என்று ஒரு வீட்டுக்காரர் கண்டிப்பாக சொல்கையில் என்ன செய்யப்பட வேண்டும்?

மதத்தைப் பற்றி பேசிக்கொண்டு எவரும் உள்ளே நுழையக்கூடாது என்ற கண்டிப்பான அறிவிப்பை நாம் ஒரு வீட்டின் கதவில் அல்லது கேட்டில் பார்த்தால், அதிலும் விசேஷமாக அந்த அறிவிப்பில் யெகோவாவின் சாட்சிகள் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தால், வீட்டுக்காரருடைய விருப்பத்தை மதித்து கதவைத் தட்டுவதைத் தவிர்ப்பது மிக நல்லது.

சிலசமயங்களில் வியாபாரிகள் அல்லது நன்கொடை வசூலிக்கிறவர்களுக்கு அனுமதியில்லை என்னும் அறிவிப்பை நாம் எதிர்ப்படுகிறோம். மதசம்பந்தமான அறப்பணியை நாம் செய்வதால், அது நமக்குப் பொருந்தாது. அச்சமயங்களில், தயக்கமின்றி கதவைத் தட்டுவது பொருத்தமானது. வீட்டுக்காரர் ஆட்சேபித்தால், இப்படிப்பட்ட அறிவிப்புகள் நம்முடைய விஷயத்தில் பொருந்தாது என்று நாம் ஏன் நினைத்தோம் என்பதை சாமர்த்தியமாக விளக்கிக்கூறலாம். அந்தத் தடை யெகோவாவின் சாட்சிகளுக்கும் பொருந்தும் என்று வீட்டுக்காரர் அப்பொழுது தெளிவுபடுத்துவாராகில், நாம் அவருடைய விருப்பங்களை மதிப்போம்.

நாம் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது, ஒரு வீட்டுக்காரர் வெளிப்படையாக எரிச்சலடைந்து, நாம் மீண்டும் சந்திக்கக்கூடாது என்று கண்டிப்போடு சொல்லலாம். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க மறுப்பாரேயானால், நாம் இந்த வேண்டுகோளுக்கு இணங்கி நடக்கவேண்டும். வருங்காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் ஊழியம்செய்யும் பிரஸ்தாபிகள் அந்த வீட்டைச் சந்திப்பதைத் தவிர்க்கும் பொருட்டாக, பிராந்திய வரைபட அட்டையின் பின்புறத்தில் தேதியிடப்பட்ட ஒரு குறிப்பை பென்சிலால் எழுதி வைக்கவேண்டும்.

அத்தகைய வீடுகளை ஒரேயடியாக ஒதுக்கிவிடக்கூடாது. தற்போது குடியிருப்பவர் காலிசெய்யலாம். சாதகமாகப் பிரதிபலிக்கிற மற்றொரு குடும்ப அங்கத்தினரை நாம் சந்திக்கலாம். நாம் பேசிய அந்த வீட்டுக்காரர் மனமாற்றமடைந்து நாம் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே, சிறிதுகாலம் சென்ற பிறகு, அவருடைய தற்போதைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள அந்தக் குடியிருப்பாளரைப் பற்றி சாதுரியமாக விசாரிக்கலாம்.

பிராந்தியத்திற்கான கோப்பு வருடத்திற்கு ஒருமுறை மறுபார்வைசெய்யப்பட்டு, நாம் சந்திக்கக்கூடாது என்று ஆலோசனை கூறப்பட்டிருக்கிற வீடுகளின் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும். ஊழியக் கண்காணியின் வழிநடத்துதலின்கீழ், இந்த வீடுகளை சந்திப்பதற்கு சில சாதுரியமான, அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் நியமிக்கப்படலாம். அதே வீட்டுக்காரர் இன்னும் அங்கு வசிக்கிறாரா என்பதை விசாரிக்க நாங்கள் வந்தோம் என்று விளக்கலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 15-24-ல் உள்ள “உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்” என்று தலைப்பிடப்பட்ட பகுதியிலுள்ள தகவலை பிரஸ்தாபி அறிந்தவராக இருக்கவேண்டும். ஓரளவு சாதகமான பிரதிபலிப்பு இருக்குமானால், வருங்காலத்தில் வழக்கமான முறையில் ஊழிய சந்திப்புகள் செய்யப்படலாம். வீட்டுக்காரர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பவராக இருந்தால், தொடர்ந்துவருகிற ஆண்டுவரையாக மேலுமான எந்தச் சந்திப்புகளும் செய்யப்படக்கூடாது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் காரியங்களை வித்தியாசமாகக் கையாளுவதற்கு சூழ்நிலைமைகள் உசிதமானதாய் இருக்கின்றனவா என உள்ளூர் மூப்பர் குழு தீர்மானிக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்