‘எல்லா நற்கிரியையும் செய்ய முழுவதுமாக ஆயத்தமாயிருங்கள்’
1 அபரிமிதமான ஆவிக்குரிய உணவினால் யெகோவாவின் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். (ஏசா. 25:6) தனிப்பட்ட படிப்பு, குடும்ப படிப்பு, சபை கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் மூலம் வேத எழுத்துக்களிலிருந்து கற்று அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் இவை எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் பைபிள் சொல்வதுபோல், ‘முற்றிலும் தகுதி உள்ளவர்களாகி, எல்லா நற்கிரியையும் செய்ய முழுவதுமாக ஆயத்தமாய் இருக்கிறோமா’?—2 தீ. 3:17, NW.
2 1998-ஆம் வருடத்திற்காக தயார் செய்யப்பட்டிருக்கும் ஆவிக்குரிய விருந்தின் வகைகள் என்ன என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்; இப்பொழுதே வருடம் கிட்டத்தட்ட பாதி ஓடிவிட்டது! நம்முடைய வாராந்தரக் கூட்டங்களின் மூலம் நாம் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 23 புத்தகங்களிலிருந்து முக்கியக் குறிப்புகளை படித்து வருகிறோம்; காவற்கோபுர பத்திரிகையில் படிப்புக் கட்டுரைகளை தவிர்த்து பைபிள் அறிவு மற்றும் கிறிஸ்தவ பண்பு தொடர்பான 22 அம்சங்களைக் கூறும் கட்டுரைகளை பற்றியும், வெளி ஊழியத்தில் நமக்கு உதவுவதற்காக கலந்து பேசுவதற்கான பேச்சுப்பொருள்களில் 48 தலைப்புகளைப் பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம். அறிவு புத்தகத்தையும் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தையும் முழுமையாய் ஒவ்வொரு பாராவாக படித்து வருகிறோம்; கூடுதலாக, 12 நம் ராஜ்ய ஊழிய பிரதிகளையும், 52 காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளையும், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் வித்தியாசமான பைபிள் தலைப்புகளில் பொதுப் பேச்சுகளையும் கேட்டு ஆவிக்குரிய முறையில் போஷிக்கப்பட்டு வருகிறோம். இவற்றிற்கும் மேலாக பலமான ஆகாரம் மாநாடு மற்றும் அசெம்பிளி நிகழ்ச்சிநிரல்கள் வடிவில் நமக்காக காத்திருக்கின்றன. நமக்கு எப்பேர்ப்பட்ட அபரிமிதமான ஆவிக்குரிய காரியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன!
3 யெகோவாவின் ஏற்பாடுகளை நன்றியோடு போற்றுதல்: இவற்றிலிருந்து முழுமையாகப் பயனடைய வேண்டுமென்றால் ஏன் இந்தளவிற்கு ஆவிக்குரிய முறையில் அபரிமிதமாக யெகோவா அளிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நற்காரியங்களை ஆவிக்குரிய உணவாக உட்கொள்வதன் மூலம் நம் விசுவாசம் கட்டியெழுப்பப்பட்டு அவரோடு இருக்கும் உறவு பலப்படுகிறது. (1 தீ. 4:6) ஆகிலும் ஆவிக்குரிய உணவு நாம் போதிக்கப்பட வேண்டும் என்பதற்காக மாத்திரமே அளிக்கப்படுவதில்லை. சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நம்மை உந்துவித்து, நாம் திறமையான நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக செயலாற்ற நம்மை ஆயத்தப்படுத்துகிறது.—2 தீ. 4:5.
4 நம் ஆவிக்குரிய தேவைகளை நாம் அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும்; யெகோவாவின் மேஜையிலிருந்து வரும் பலமான, ஆவிக்குரிய முறையில் திருப்தியளிக்கும் உணவிற்கு வாஞ்சையை எப்போதும் வளர்த்துக்கொள்வோமாக. (மத். 5:3, NW; 1 பே. 2:3) இவற்றிலிருந்து முழுமையாக பயன் பெறவேண்டுமென்றால், தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பு, கூட்டங்களுக்கு போவது போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்; இவை முக்கியமான காரியங்கள், ஆதலால் இவற்றுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும். (எபே. 5:15, 16) இவ்வாறு செய்கையில், பவுல் உண்மையுள்ள எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, எபிரெயர் 13:20, 21-ல், எப்படிப்பட்ட வெகுமதி காத்திருக்கிறது என்று ஏவப்பட்டு எழுதினாரோ அதைப்போலவே சந்தோஷமான வெகுமதி நமக்கும் காத்திருக்கிறது.