சிருஷ்டிகர் புத்தகத்தை அளிக்கலாமா?
உங்களைப் பற்றி அக்கறையுள்ள ஒரு சிருஷ்டிகர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தை சென்ற வருடம் பெற்றபோது நாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினோம். உலகப்பிரகாரமான பெரும் கல்விமான்களாக இருந்தும் கடவுளில் நம்பிக்கை வைக்காதவர்களுக்காகவே இந்தப் புத்தகம் விசேஷமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதிகரித்து வரும் தேவையை இது பூர்த்தி செய்கிறது.
பரவலாக விநியோகிக்கப்படும் பிரசுரங்களையே நாம் மாதாந்திர பிரசுர அளிப்பில் பொதுவாக கொடுத்து வருகிறோம். நடைமுறையான காரணங்களுக்காகவே இவ்வாறு செய்கிறோம். அப்படியென்றால், சிருஷ்டிகர் புத்தகத்தைக் கொடுக்கக்கூடாது என்று அர்த்தமா? இல்லவே இல்லை! கடவுளில் நம்பிக்கை வைக்காத ஆனால் இந்தப் புத்தகத்திலிருந்து நன்மை பெறக்கூடிய தனிநபர்கள் யாவருக்கும் வருடத்தின் எந்தச் சமயத்திலும் இதை கொடுக்கலாம். அதேசமயம், கடவுளை நம்புகிற ஆனால் அவர் உண்மையில் யார் என்பதைப் பற்றியோ அவருடைய குணாதிசயங்களையும் நோக்கங்களையும் பற்றியோ அறியாதவர்களுக்கும் இதைக் கொடுக்கலாம். ஆகவே ஊழியத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் இப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருக்கும்படியும் அதை வாசிக்க விரும்பும் யாவருக்கும் அதைக் கொடுக்க தயாராய் இருக்கும்படியும் உற்சாகப்படுத்துகிறோம்.