‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?’
1 இது யார் சொன்ன பதில்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து படித்துக்கொண்டிருந்ததை புரிந்துகொள்கிறாரா என சுவிசேஷகனாகிய பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியிடம் கேட்டபோது, அவர் கொடுத்த பதிலே இது: ‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?’ இயேசுவை பற்றிய நற்செய்தியை அவர் புரிந்துகொள்ள பிலிப்பு உதவினார். அதன் விளைவு? அந்த மந்திரி உடனடியாக முழுக்காட்டுதல் பெற்றார். (அப். 8:26-38) இப்படி செய்ததால், ‘சகல தேசத்தாரையும் சீஷராக்கி, முழுக்காட்டுதல் கொடுத்து, அவர்களுக்கு போதியுங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்கு பிலிப்பு கீழ்ப்படிந்தார்.—மத். 28:19, 20, NW.
2 சீஷராக்குங்கள் என்ற இந்தக் கட்டளைக்கு, பிலிப்புவைப் போலவே நாமும் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், எத்தியோப்பிய மந்திரி எப்படி உடனடியாக ஆவிக்குரிய விதத்தில் முன்னேறினாரோ அவ்விதமாகவே நாம் படிப்பு நடத்தும் ஆட்கள் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது. யூத மதத்திற்கு மாறிய அந்த எத்தியோப்பிய மந்திரி வேத வார்த்தைகளை ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருந்தார். நல் இருதயம் உடையவராய் இருந்தார். இயேசுவே மேசியா என ஏற்றுக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி இருந்தது. ஆனால், நாம் படிப்பு நடத்தும் ஆட்கள் ஒருவேளை, பைபிளை அவ்வளவாக படிக்காதவர்களாக இருக்கலாம், பொய் மதப் போதகங்களில் ஊறிப்போனவர்களாக இருக்கலாம், அல்லது கடினமான பிரச்சினைகளின் பாரத்தால் பரிதவிக்கிறவர்களாக இருக்கலாம். அப்படியானால், பைபிள் படிப்பவர்களை ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் தயாராக்க என்ன செய்வது?
3 பைபிள் படிப்பவரின் ஆவிக்குரிய தேவையை பகுத்தறிதல்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தும் அறிவு புத்தகத்திலிருந்தும் ஒருவருக்கு எவ்வளவு காலம் பைபிள் படிப்பு நடத்தலாம் என்பதைப் பற்றி 1998, ஆகஸ்ட் நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கை விளக்கியது. அதில் கொடுக்கப்பட்ட குறிப்பு: ‘படிப்பவரின் சூழ்நிலையையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் பொருத்தே படிப்பை நடத்த வேண்டும். . . . படிப்பவர் சரியாக புரிந்துகொள்கிறாரா இல்லையா என பார்க்காமல், படிப்பை அவசர அவசரமாக நடத்தக் கூடாது. கடவுளுடைய வார்த்தையில் மாணாக்கர் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்த தகுந்த காரணங்கள் கொடுக்க வேண்டும்.’ அறிவு புத்தகத்தை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்பதற்காக படிப்பை அவசர அவசரமாக நடத்தக் கூடாது. ஒருசிலர், முழுக்காட்டுதல் எடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கும் அதிகம் ஆகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு வாரா வாரம் படிப்பை நடத்துகையில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து படிப்பவற்றை அவர்கள் புரிந்துகொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் எவ்வளவு நேரம் அவசியமோ அவ்வளவு நேரம் செலவழியுங்கள். சிலருடைய விஷயத்தில், அறிவு புத்தகத்தில் ஒரு அதிகாரத்தை முடிக்கவே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம். இது கொடுக்கப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் வாசித்து, புரிந்துகொள்ள உதவும்.—ரோ. 12:2.
4 ஆனால், அறிவு புத்தகத்தை முடித்த பிறகும் பைபிள் படிப்பவர் சத்தியத்தை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை அல்லது சத்தியத்திற்காக ஒரு நிலைநிற்கை எடுக்கவும், கடவுளுக்கு தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவும் இன்னும் தயாராகவில்லை என நீங்கள் உணர்ந்தால், அப்போது என்ன செய்வது? (1 கொ. 14:20) அப்படியென்றால், ஜீவனுக்கான பாதையில் அவர்களை வழிநடத்த நீங்கள் இன்னும் என்ன செய்யலாம்?—மத். 7:14.
5 பைபிள் மாணாக்கரின் ஆவிக்குரிய தேவைகளை திருப்தி செய்தல்: மாணாக்கர் ஆவிக்குரிய ரீதியில் ஒருவேளை மிகவும் மெதுவாக முன்னேறலாம். ஆனால், படிப்பவற்றை அவர் உண்மையிலேயே மதிக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்தால், இன்னொரு புத்தகத்திலும் பைபிள் படிப்பை நடத்தலாம். அதாவது, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் முடித்த பிறகு, அந்தப் புத்தகத்திலிருந்து படிப்பை தொடரலாம். எல்லாருக்கும் இது அவசியமில்லை. ஆனால், படிப்பை தொடர வேண்டுமென்றால், உண்மையான சமாதானம், வணக்கத்தில் ஒன்றுபட்டிருத்தல், அல்லது கடவுளுடைய வார்த்தை (ஆங்கிலம்) போன்ற புத்தகங்களை பயன்படுத்தலாம். சபையில் ஒருவேளை இந்தப் புத்தகங்கள் இப்போது கிடைக்காவிட்டாலும் பிரஸ்தாபிகளில் அநேகரிடம் இந்தப் புத்தகங்கள் இருக்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் முதலாவது படிக்க வேண்டும். இரண்டாவது புத்தகத்தை முடிப்பதற்கு முன்பாகவே, மாணாக்கர் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டாலும்கூட, அதை பைபிள் படிப்பாக அறிக்கை செய்ய வேண்டும். அந்த சமயங்களில் செய்யும் மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்பு நேரத்தையும் ஊழிய அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
6 அப்படியானால், சமீபத்தில் ஒரே ஒரு புத்தகத்தை முடித்ததும் முழுக்காட்டுதல் எடுத்தவர்கள் எல்லாரும் மறுபடியும் இரண்டாவது புத்தகத்தை படிக்க வேண்டுமா? இல்லை, அவசியமில்லை. இவர்களில் சிலர் ஒருவேளை செயலற்றவர்களாக ஆகியிருக்கலாம் அல்லது சத்தியத்தில் முன்னேறாமலே இருக்கலாம். சத்தியத்திற்கு இசைவாக வாழ உதவி தேவையென ஒருவேளை அவர்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளோடு படிப்பை ஆரம்பிப்பதற்கு முன், ஊழியக் கண்காணியோடு கலந்து பேச வேண்டும். அதேசமயம், உங்களோடு அறிவு புத்தகத்தை ஏற்கெனவே படித்தவர்களில் சிலர் எந்தவித முன்னேற்றமும் காட்டாமல் இருந்திருக்கலாம். அவர்களுக்கு பைபிள் படிப்பை மறுபடியும் ஆரம்பிக்கலாமா என நீங்கள் கேட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வரலாம்.
7 நாம் பைபிள் படிப்பு நடத்தும் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். அது கிறிஸ்தவ அன்பின் அடையாளம். நம் குறிக்கோள் என்ன? கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைக் குறித்து அதிக உட்பார்வையை மாணாக்கர் பெற வேண்டும். அப்போதுதான், பெற்ற அறிவின்பேரில் அவர் சத்தியத்திற்காக திட்டவட்டமாக ஒரு நிலைநிற்கை எடுக்க முடியும். யெகோவாவுக்கு வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் தெரியப்படுத்த முடியும்.—சங். 40:8; எபே. 3:17-19.
8 எத்தியோப்பிய மந்திரி முழுக்காட்டுதல் பெற்ற பிறகு சம்பவித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இயேசு கிறிஸ்துவின் புதிய சீஷனாக “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.” (அப். 8:39, 40) நாமும், நம்மால் சத்தியத்தின் பாதையில் வழிநடத்தப்படுபவர்களும் யெகோவா தேவனை சேவிப்பதில், இன்றும் என்றென்றும் அளவிலா ஆனந்தம் காண்போமாக!