ராஜ்ய செய்தி எண் 36-க்குக் காட்டிய ஆர்வத்தை வளர்த்தல்
1 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ராஜ்ய செய்தி எண் 36 அனைத்தையும் கொடுத்து முடித்துவிட்டீர்களா? எல்லாரையும் சிந்திக்க வைக்கும் காலத்துக்கேற்ற கேள்வியே அதன் தலைப்பு: “நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?” 2000-ம் ஆண்டு நெருங்கிய சமயத்தில், புதிய ஆயிரமாண்டு என்னென்ன சாதிக்கும் என்பதில் வேறுபட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. இவற்றில் சிலவற்றை ராஜ்ய செய்தி எண் 36 அலசி ஆராய்கிறது. உலக நிலைமைகள் துளியும் நம்பிக்கை அளிக்காததை அது நமக்கு நினைப்பூட்டுகிறது. பலர் விரும்பும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளிக்கப் போவது கிறிஸ்து இயேசுவின் ஆயிரமாண்டு ஆட்சி மட்டுமே. அவருடைய ராஜ்யம் உண்மையில் வரும் என்பதே நம் நம்பிக்கை; அதுவே ராஜ்ய செய்தி எண் 36-ஐ முடிந்தவரை எல்லாருக்கும் விநியோகிக்க நம்மை தூண்டியிருக்கிறது.
2 ராஜ்ய செய்தியைப் பற்றிய கருத்துக்கள்: ராஜ்ய செய்தி என்ற துண்டுப்பிரதிகளை இதற்கு முன் பலமுறை நாம் விநியோகித்திருக்கிறோம். அவை நம்முடைய ஊழியத்திற்கு பெருமளவு ஊக்கமளித்திருக்கின்றன. ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பற்றி கனடா கிளை அலுவலகம் எழுதியதாவது: “இந்த விசேஷித்த விநியோகிப்பில் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர்; ஆர்வத்தைத் தூண்டும் அநேக அனுபவங்களையும் அவர்கள் பெற்றனர்.” இதே விதமாகவே ராஜ்ய செய்தி எண் 36-ஐ நீங்களும் உற்சாகத்தோடு விநியோகித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
3 இந்த ராஜ்ய செய்தியின் விநியோகிப்பு, 2000, நவம்பர் 30-ம் தேதி அன்று முடிவடையும். உங்கள் சபையின் பிராந்தியம் முழுவதிலும் விநியோகிக்கப்பட்டுவிட்டதா? இல்லையென்றால், டிசம்பர் மாதத்திலும் அதை கொடுக்கும்படி மூப்பர்கள் உங்களிடம் சொல்லலாம்.
4 இந்த ராஜ்ய செய்தி எண் 36-ஐ விநியோகித்ததில் உங்கள் பிராந்தியத்திலுள்ளவர்கள் இதுவரை எந்தளவு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்? தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பற்றி தெரிந்துகொள்ளவோ பைபிள் படிக்க ஆசைப்படுவதாகவோ குறிப்பிட்டு சிலர் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பியிருக்கலாம். அல்லது சிலர் இரண்டிலுமே ஆர்வம் காட்டியிருக்கலாம். எனினும், மிலனியம் பற்றி பேசிய போது ஆர்வம் காட்டிய அநேகர், யெகோவாவின் சாட்சிகள் மீண்டும் சந்திக்கும் வரை அடுத்து தாங்கள் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்காதது போலவே தெரிகிறது. ஆர்வம் காட்டிய அனைவரையும் மீண்டும் சென்று சந்திப்பது அவசியம். இதற்கு பொருத்தமான சமயம் எது? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மறுசந்திப்பு செய்வதே நல்லது.
5 ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகிப்பிற்குப் பிறகு, மறுசந்திப்பு செய்கையில் கிடைத்த சில அனுபவங்களை கவனியுங்கள். அயர்லாந்திலுள்ள பயனியர் சகோதரி ஒருவர் ஹோட்டல் முதலாளி அம்மாளுக்கு ராஜ்ய செய்தி எண் 35-ஐ அளித்தார். அந்தச் செய்தியிடம் ஆர்வம் காட்டிய அந்த அம்மாளும் மறுசந்திப்புக்கு ஒப்புக்கொண்டாள். இரண்டு நாட்களில் அந்தச் சகோதரி மறுசந்திப்பு செய்தார், பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. டென்மார்க்கில், பூட்டப்பட்டிருந்த வீட்டில் ராஜ்ய செய்தி பிரதி ஒன்று போடப்பட்டது. அந்த வீட்டில் வசித்துவந்த பெண்மணி அன்றே அதிலுள்ள கூப்பனை பூர்த்திசெய்து கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்; அவரைப் போய் சந்திக்கும்படி உள்ளூர் சபைக்கு தெரிவிக்கப்பட்டது. இரண்டு சகோதரிகள் அந்தப் பெண்மணியைப் போய் சந்தித்தனர், பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அவரும் ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு முதன்முறையாக வந்தார்; இவையனைத்தும் ஒரே வாரத்தில் நடந்தன!
6 மறுசந்திப்பில் என்ன பேச வேண்டும்: பொதுவாகவே ராஜ்ய செய்தி அளித்த இடங்களில் மறுசந்திப்புகள் செய்வது எளிது; அது ஊழியத்தில் நாம் மகிழ்ந்தனுபவிக்கும் சமயமும்கூட. மறுசந்திப்பின்போது வீட்டுக்காரரிடம் ராஜ்ய செய்தி எண் 36 இல்லாதிருக்கலாம்; எனவே ஒரு பிரதி உங்கள் கைவசம் இருப்பது நல்லது. பின்வரும் முறைகளை நீங்கள் முயன்று பார்க்கலாம்.
7 நீங்கள் யாரென்பதை ஞாபகப்படுத்திவிட்டு இவ்வாறு சொல்லலாம்:
◼ “‘நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்ற தலைப்பில் ஒரு சிறிய பிரதியை உங்களுக்குக் கொடுத்துவிட்டு சென்றேன். சீக்கிரத்தில் வரவிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஆயிர வருட ஆட்சி, பூங்காவனம் போன்ற பரதீஸிய நிலைமைகளை பூமிக்கு கொண்டுவரும் என்பதை வாசிக்கையில் சந்தோஷப்பட்டிருப்பீர்கள் அல்லவா? [ராஜ்ய செய்தி எண் 36-லுள்ள பரதீஸை சித்தரிக்கும் படங்களைக் காட்டுங்கள்.] உங்களுக்கு விருப்பமென்றால் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி இன்னும் அதிக தகவல் பெற்றுக்கொள்ளும்படி கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.” சிற்றேட்டைக் காட்டி, பாடம் 5-ற்குத் திருப்பி, முதல் கேள்வியை வாசித்தபின்பு பாராக்கள் 1, 2-ஐ வாசியுங்கள்; பின்னர் வீட்டுக்காரரை பதில் சொல்ல சொல்லுங்கள். ஓரிரண்டு வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். முடிந்தால், அடுத்த கேள்வியையும் பாராவையும் சிந்தியுங்கள்; கலந்தாலோசிப்பை தொடர மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
8 டிசம்பர் மாதத்தில் “அறிவு” புத்தகத்தை அளிக்கப் போவதால் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “போன முறை வந்தபோது ‘நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்ற பிரதியை உங்களுக்குக் கொடுத்துவிட்டு சென்றேன். ஆர்வமுள்ளவர்களுக்கு பைபிளை இலவசமாக கற்றுக்கொடுப்பதைப் பற்றி அது தெரிவிக்கிறது. அந்த படிப்பில் பயன்படுத்தப்படும் புத்தகத்தை உங்களுக்கு காட்ட மீண்டும் வந்திருக்கிறேன். [அறிவு புத்தகத்தை காட்டி, பக்கங்கள் 188-9-க்குத் திருப்புங்கள்.] இந்தப் படத்திலுள்ளதைப் போன்ற நிலைமையை பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிர வருட ஆட்சி கொண்டுவர போகிறது. இந்தப் பூங்காவனம் போன்ற பரதீஸில் வாழ விரும்பினால், கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவது அவசியம். பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதை சுருக்கமாக செய்து காட்டுகிறேன்.”
9 ஊழியத்தில் அதிகம் கலந்துகொள்ளவும் அதிகம் பேருக்கு சாட்சி கொடுக்கவும் ராஜ்ய செய்தி எண் 36-ன் விநியோகிப்பு நம்மை ஊக்குவித்திருக்கிறது. பிராந்தியத்திலுள்ள அநேகரது ஆர்வத்தையும் இது தூண்டியிருக்கலாம். இந்த ஆர்வத்தை வளர்ப்பதற்கு நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்கையில், செம்மறியாடுகள் போன்ற அநேகரை கண்டுபிடிக்கும் சந்தோஷத்தைப் பெற யெகோவா உதவுவார்.—மத். 10:11; அப். 13:48, 49, 52.