கூட்டங்களுக்கு வர மற்றவர்களுக்கு உதவுங்கள்
1 “அக்கம்பக்கத்திலுள்ள நண்பர்கள் . . . விரும்பினால் கூட்டங்களுக்கு வரும்படி அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.” இந்த அறிவிப்பு 1880, நவம்பர் மாத ஜயன்ஸ் உவாட்ச் டவரில் வெளி வந்தது; அப்போது முதற்கொண்டே பைபிள் போதனைகளைக் கேட்க ஆர்வமுள்ள அனைவருக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஆர்வத்தோடு அழைப்புவிடுக்கின்றனர். (வெளி. 22:17) இது உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சம்.
2 கூடிவருவது முக்கியம்: சபையில் கூடிவரும்போது ஆசீர்வாதங்களை பெறுகிறோம். அங்கு, நம்முடைய அருமையான கடவுளாகிய யெகோவாவைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்கிறோம். சபையில், ‘யெகோவாவால் கற்பிக்கப்பட’ கூடிவருகிறோம். (ஏசா. 54:13, NW) அவருடைய அமைப்பு தொடர்ந்து பைபிள் போதனையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது; இது அவரிடம் நெருங்கி வர உதவுகிறது, ‘தேவனுடைய ஆலோசனை எல்லாவற்றையும்’ பின்பற்றுவதற்கு நடைமுறை உதவியையும் அளிக்கிறது. (அப். 20:26; லூக். 12:42) கடவுளுடைய வார்த்தையை திறம்பட்ட விதத்தில் கற்பிப்பதற்கு கூட்டங்கள் நமக்கு தனிப்பட்ட பயிற்சியை அளிக்கின்றன. பைபிளின் நினைப்பூட்டுதல்கள் மற்றவர்களோடும், ஏன் யெகோவாவோடும் நல்ல உறவை அனுபவித்து மகிழ வழி செய்கிறது. கடவுளை நேசிப்பவர்களுடன் கூட்டுறவு கொள்வது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது.—ரோ. 1:10, 11.
3 நேரடியாகவே அழையுங்கள்: பைபிள் படிப்பை ஆரம்பித்த அன்றே மாணாக்கரை கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள். அவருக்குக் கைப்பிரதி ஒன்றைக் கொடுங்கள். கடந்த கூட்டத்தில் உங்களுக்கு உற்சாகத்தை அளித்த ஒரு குறிப்பையும், அடுத்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப் போகும் விஷயத்தையும் பற்றி சொல்லி அவருடைய ஆர்வத்தை தூண்டுங்கள். ராஜ்ய மன்றம் எப்படி இருக்கும் என்பதையும், அங்கு வருவதற்கான வழியையும் தெளிவாக விளக்குங்கள்.
4 மாணாக்கர் உடனடியாக கூட்டங்களுக்கு வராவிட்டாலும் அவரைத் தொடர்ந்து அழையுங்கள். நம்முடைய அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை ஒவ்வொரு வாரமும் சிறிது நேரம் விளக்குங்கள். நம்மையும் நம்முடைய கூட்டங்களையும் பற்றி அவர் நன்கு அறிந்துகொள்ள கடவுளுடைய சித்தத்தை செய்தல் சிற்றேட்டையும் யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோவையும் உபயோகியுங்கள். மாணாக்கர் மற்ற பிரஸ்தாபிகளுடனும் அறிமுகமாவதற்கு அவர்களை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். ஜெபிக்கையில், யெகோவா இந்த அமைப்பை ஏற்பாடு செய்திருப்பதற்கு நன்றியையும், மாணாக்கர் அதனோடு கூட்டுறவு கொள்வதன் அவசியத்தையும் குறிப்பிடுங்கள்.
5 ஆர்வம் காட்டும் புதியவர்கள், நம்முடைய கூட்டங்களுக்கு வருவதற்கு உதவ தயங்கவே வேண்டாம். யெகோவாவிடம் அவர்களுடைய போற்றுதல் அதிகரிக்கையில், கற்றுக்கொள்பவற்றைப் பின்பற்றுவதற்கும், கடவுளுடைய ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் அங்கத்தினராக ஆவதற்கும் அவர்கள் தூண்டப்படுவர்.—1 கொ. 14:25.