பைபிள் மாணாக்கர்களையெகோவாவின்அமைப்புக்கு வழிநடத்துதல்
1 பைபிள் மாணாக்கர்கள் யோவான் 10:16-ல் இயேசு பேசின “ஒரே மந்தை”யின் அமைப்போடு அறிமுகமாக வேண்டிய தேவை இருக்கிறது. தங்களுடைய இரட்சிப்பிற்கு யெகோவாவின் அமைப்போடு தங்களை அடையாளப்படுத்திக் காட்டுவது இன்றியமையாதது என்பதை அவர்கள் போற்ற வேண்டும். (வெளி. 7:9, 10, 15) ஆகையால், ஒரு பைபிள் படிப்பு நிலைநாட்டப்பட்டவுடனேயே நம் பைபிள் மாணாக்கர்களை நாம் அமைப்பினிடமாக வழிநடத்த ஆரம்பிக்க வேண்டும்.
2 யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் அநேக அம்சங்களோடு அறிமுகமாவதற்கு உங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு உதவுங்கள். முதல் நூற்றாண்டு முன்மாதிரியைப் பின்பற்றி, எல்லா யெகோவாவின் ஜனங்களும் மூப்பர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பிரஸ்தாபிகள் அடங்கிய சபைகளைச் சேர்ந்தவர்களாயிருக்கின்றனர். இன்று சபைகளின் அங்கத்தினர்கள் ஒரு வாரத்தில் ஐந்து கூட்டங்களுக்கு ஆஜராகி மகிழ்கின்றனர். வருடத்தில் இடையிடையே அசெம்பிளிகளும், மாநாடுகளும் அட்டவணையிடப்பட்டிருக்கின்றன, இவைகள் வித்தியாசமான இடங்களிலிருந்துவரும் உடன் சாட்சிகளோடு கூட்டுறவுக் கொள்வதற்கான வாய்ப்புகளோடு விசேஷ போதனையையும் கொடுக்கின்றன. பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியவர்களோடு உலகளாவிய வேலையை வழிநடத்துவதற்கு ஓர் ஆளும் குழுவும் இருக்கிறது. யெகோவாவின் அமைப்பின் பல்வேறு அம்சங்களோடு உங்கள் பைபிள் மாணாக்கர்களை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்? அமைப்பு முறை பைபிளை அடிப்படையாகக் கொண்டது என்பதை அவர்கள் காண நீங்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?
கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுரை உபயோகியுங்கள்
3 கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுரில் யெகோவாவின் அமைப்பைப் பற்றி விரிவான தகவல்கள் இருக்கின்றன. அதைக் கொண்டு பைபிள் மாணாக்கர்களை அமைப்போடு படிப்படியாக அறிமுகமாக்கலாம், மேலும் அதன் இயக்கத்தைப் போற்ற அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். ராஜ்ய மன்றத்தில் என்ன நிகழ்கிறது என்பதை கலந்தாலோசிப்பதன் மூலம் ஆரம்பிப்பது ஒரு நல்ல முறையாகும். இது மாணாக்கனை சபைக் கூட்டங்களுக்கு ஆஜராகும்படி உற்சாகப்படுத்தும். முதல் முறையாக பொதுப் பேச்சுக்கு அவரை அழைப்பதற்கு முன்பு, பக்கங்கள் 14 மற்றும் 15-லுள்ள தகவல்களை விமர்சனம் செய்யுங்கள். படங்களுக்கு அவருடைய கவனத்தைத் திருப்புங்கள். உள்ளூர் ராஜ்ய மன்றத்தின் தோற்றத்தையும், அதன் இடத்தையும் விவரியுங்கள். நீங்கள் ஆஜராகும் ராஜ்ய மன்றத்தின் ஒரு புகைப்படத்தையும்கூட நீங்கள் அவருக்குக் காண்பிக்கலாம்.
4 வட்டார கண்காணியின் விஜயம் சபைக்கு அறிவிக்கப்படும் போது, பக்கங்கள் 20 மற்றும் 21-ஐ உங்கள் பைபிள் மாணாக்கரோடு சிந்தியுங்கள். முக்கிய குறிப்புகள் தனித்து நிற்குமாறு செய்வதற்கு பக்கம் 21-ன் கடைசியில் உள்ள கேள்விகளை உபயோகியுங்கள். பக்கம் 20-ல் உள்ள முதல் பாராவை உபயோகித்து நமது தற்போதைய ஏற்பாட்டின் வேதப்பூர்வ பின்னணியை அவரோடு சிந்தியுங்கள். ராஜ்ய மன்றத்திற்கு உங்கள் மாணாக்கரின் விஜயத்தை இந்தத் தகவல் அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்கும்.
5 அதே போன்று உங்கள் மாவட்ட மாநாடு, வட்டார அசெம்பிளி அல்லது விசேஷ அசெம்பிளி தினம் ஆகியவற்றிற்கு முன்பு, பக்கம் 19-ல் என்ன பிரசுரிக்கப்பட்டிருக்கிறதோ அதைக் கலந்தாலோசியுங்கள். ஒரு பெரிய மாநாட்டில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதற்கு அவருடைய கவனத்தைத் திருப்புங்கள். மேலும் பக்கம் 18-ல் உள்ள படங்களின் சர்வதேச செயற்பரப்பைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். ஒரு புதிய பிரசுரத்தை வெளியிடுவதாகக் காண்பிக்கும் படத்தைப் பற்றி நீங்கள் குறிப்பு சொல்கையில் பக்கங்கள் 24 மற்றும் 25-ல் உள்ள மேலுமதிக குறிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக நீங்கள் அவரை தயார் செய்யலாம். பயனியர் செய்வதைப் பற்றி விளக்குவதற்கு பக்கங்கள் 22 மற்றும் 23-ல் உள்ள குறிப்புகளை விமர்சியுங்கள்.
தேவைக்கேற்ப மாற்றி அமையுங்கள்
6 நீங்கள் காண்கிறபடி, கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுரின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக, சந்தர்ப்பமும் தேவையும் எழும்புகையில், மாணாக்கர் யெகோவாவின் அமைப்பைப் போற்றுவதற்கு உதவி செய்யும் திட்டவட்டமான குறிப்புகளை புரோஷுரிலிருந்து சிந்தியுங்கள். மேலும் உள்ளூர் சபையோடு கூட்டுறவுக் கொள்ள அவரை உற்சாகப்படுத்துங்கள்.
7 இந்த விஷயங்களைக் கலந்தாலோசிக்கையில், உறுதியோடு பேசுவது உங்கள் மாணாக்கர் மீது ஒரு நிரந்தரமான பதிவை உண்டுபண்ணும். ஆவியில் அனலுள்ளவர்களாய் இருங்கள். (அப். 18:25) மேலும், “மற்றவனுக்குப் போதிக்கிற நீ” யெகோவாவின் அமைப்புக்காக போற்றுதலைக் காண்பிப்பதில் நல்ல முன்மாதிரியை வைக்க நிச்சயித்துக்கொள்ளுங்கள். (ரோ. 2:21) அவ்வாறு செய்வதன் மூலம், இயேசு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் ஒரே மந்தையோடு மற்றவர்கள் சேர்ந்து கொள்ள நீங்கள் உதவி செய்யக்கூடும்.