“வழி இதுவே”
1. ஏசாயா 30:21 குறிப்பிடுவதாவது: “வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று உங்களுக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” “உங்களுக்கு பின்னாலே சொல்லப்படும் அந்த வார்த்தை” இது யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் பேசும் குரலாகும். அந்த “வார்த்தைக்கு” நீங்கள் செவிகொடுக்கிறீர்களா மற்றும் அதை கேட்பதற்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்கிறீர்களா?—யாக். 4:17.
2. நாம் யாருடன் வேதப்படிப்பை நடத்துகிறோமோ அவர்கள் யெகோவாவுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது என்பதை மதித்துணருவது அவசியம். தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு இசைவாக அமைப்பை நோக்கும்படி நாம் அவர்களுக்கு உதவி செய்து அத்துடன் ஒத்துழைப்பதற்கு அவர்களை உந்துவிக்க வேண்டும். (அப்போஸ்தலர், அதிகாரம் 2; ரோமர் 12:5-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.) அவர்களுடைய வாழ்க்கையில் அமைப்பு வகிக்கும் பாகத்தை வலியுருத்திக்காட்டுவதற்கு நாம் என்ன செய்யலாம்?
புரோஷரை நன்கு பயன்படுத்துங்கள்
3. யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய சித்தத்தை உலக முழுவதிலும் ஐக்கியமாக செய்து வருகிறார்கள் என்ற புரோஷர் யெகோவாவின் அமைப்பிற்கு பைபிள் மாணாக்கர்களை வழிநடத்துவதற்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். வேத வசனங்களை, படங்களை, மேலும் மறு ஆய்வு கேள்விகளை அது திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துகிறது. பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அல்லது அதன் முடிவில் அந்த புரோஷரிலுள்ள தகவலை சிந்திப்பதற்கு பத்து நிமிடங்கள் செலவிடுவது அதிக பயனுள்ளதாக இருக்கும்.
4.அந்த குறிக்கப்பட்ட நேரத்தில் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் அந்த கட்டுரையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ விமர்சித்து பார்க்கும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய சம்பாஷணையை ஒன்று அல்லது இரண்டு கேள்விகளோடு நிறுத்தக்கொள்ள ஒருவேளை விரும்பக்கூடும். உதாரணமாக, “யெகோவா தமது ஜனங்களை கூட்டிச்சேர்த்து தமது வேலைக்காக ஆயத்தம் செய்கிறார்” என்ற கட்டுரையை சிந்திக்கும் போது, பக்கம் 11-ல் உள்ள மூன்றாவது கேள்வியின் பேரில் உங்களுடைய முழு நேரத்தையும் செலவிடலாம். பக்கங்கள் 8 மற்றும் 9-ல் உள்ள குறிப்புகளை விமர்சிக்கையில் எடுத்து எழுதப்பட்டிருக்கும் வேத வசனங்களை பயன்படுத்துவதானது யெகோவாவின் வழிநடத்துதலை மாணாக்கர் புரிந்துக்கொள்ளுவதற்கு உதவக்கூடும்.
5.“அன்பையும் ஐக்கியத்தையும் கட்டியமைப்பதற்கு சபைகள்” என்ற தலைப்பில் பக்கம் 12-லிருந்து ஆரம்பிக்கும் படங்களை நன்கு பயன்படுத்துங்கள். மூப்பர்களின் அடிப்படை உத்திரவாதங்களை காண்பிப்பதற்கு, நீங்கள் இதை ஒரு குறிப்பாக ஆக்கிக் கொள்ளலாம் அல்லவா? இப்படி வலியுருத்திக்காண்பிப்பதானது, பிரச்னைகளை எதிர்ப்படும்போது, மூப்பர்களிடம் செல்ல வேண்டும் என்பதை மாணாக்கர் கற்றுக்கொள்வதை சுலபமாக்கும்.
6.கூட்டங்களைப்பற்றி விமர்சிக்கும் போது, ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவக்கூடிய கூட்டங்கள்” என்ற கட்டுரையில் 2-ம் கேள்விக்கு நீங்கள் விடையை கலந்தாலோசிக்கும் போது இது செய்யப்படலாம். சபை புத்தகப் படிப்பிற்கு எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை மாணாக்கருக்கு காண்பியுங்கள்.
அது எளிதாக இருக்கட்டும்
7.கடவுளுடைய சித்தத்தை செய்தல் புரோஷரில் இன்னும் அநேக தலைப்புகள் இருக்கின்றன. தேவைகளுக்கு ஏற்றார்போல் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சகோதரர் குறிப்பிட்டதாவது: “நாம் பிரயாசப்பட வேண்டிய ஒரு காரியம் எளிமை. வெறுமென ஓரிரண்டு வேத வசனங்களும், கூட்டங்களுக்கு ஆஜராக வேண்டிய அவசியத்தை காண்பிக்கக்கூடிய சுருக்கமான கலந்துரையாடலுமே, நீங்கள் இதை நம்புகிறீர்களா?—அது பயன்தருகிறது!” இன்னொரு சகோதரர் குறிப்பிட்டதாவது: “என்னுடைய ஆரம்ப மற்றும் முடிவு ஜெபங்களில் நான் எப்பொழுதுமே யெகோவாவின் அமைப்பைப்பற்றிக் குறிப்பிடுவதுண்டு.”
8.கடவுளுடைய சித்ததை செய்தல் புரோஷர் உங்கள் பைபிள் படிப்புகளை உயிருள்ளதாகவும், மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், செய்யக்கூடிய ஒன்றாகவும் வைத்துக்கொள்ளுவதற்கு வழிநடத்துதலையும் உதவியையும் அளிக்கக்கூடும். இந்த புரோஷரிலிருந்து தொடர்ச்சியாக குறிப்புகளை கலந்தாலோசிக்க மறவாதீர்கள். கருத்துள்ள மாணாக்கர்களை யெகோவாவின் அமைப்பினிடமாக வழிநடத்துவதிலும் “வழி இதுவே” என்று சொல்லுவதில் யெகோவாவுடன் சேர்ந்துக்கொள்ளுவதிலும் நாம் முன்செல்வோமாக.