உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/02 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2002
  • இதே தகவல்
  • தூள்பறக்கும் தொழில்நுட்பம்
    விழித்தெழு!—2010
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • மொபைல் போனுக்கு “அடிமை”
    விழித்தெழு!—2003
  • ஆசீர்வாதமா ஆபத்தா?
    விழித்தெழு!—2010
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2002
km 7/02 பக். 3

கேள்விப் பெட்டி

◼ செல்லுலர் ஃபோன்களையும் எலெக்ட்ரானிக் பேஜர்களையும் உபயோகிக்கையில் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?

நாம் எங்கிருந்தாலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள இத்தகைய கருவிகள் நமக்கு உதவலாம். செல் ஃபோன்களும் பேஜர்களும் பயனுள்ளவையாக இருந்தாலும், நம் ஊழியத்தில் அல்லது கிறிஸ்தவ கூட்டங்களில் கவனத்தை திசைதிருப்பும்படி பொருத்தமற்ற சமயங்களில் அவற்றை பயன்படுத்தாதிருக்க கவனமாக இருக்க வேண்டும். இவை எப்படி கவனத்தை திசைதிருப்பலாம்?

வெளி ஊழியத்தில் சாட்சி கொடுக்கையில் செல் ஃபோன் ஒலித்தால் அல்லது நம்முடைய பேஜர் பீப் ஒலி எழுப்பினால் என்ன நடக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். வீட்டுக்காரர் என்ன நினைப்பார்? அதற்கு பதிலளிப்பதற்காக இடையே பேசுவதை நிறுத்திவிட்டால் வீட்டுக்காரருக்கு என்ன எண்ணம் ஏற்படும்? ராஜ்ய செய்தியை மற்றவர்கள் கேட்பதற்கு தடையாய் இருக்கும் எதையும் செய்ய நாம் நிச்சயமாய் விரும்ப மாட்டோம். (2 கொ. 6:3) எனவே, நாம் செல் ஃபோனையோ பேஜரையோ எடுத்துச் சென்றால் வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கையில் அது நம்மையோ பிறரையோ தொந்தரவு செய்யாதிருப்பதற்கு ஏற்றவாறு அதை செட் பண்ணி வைத்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் சாட்சி கொடுக்கையில் நாம் காத்திருக்கும்போது என்ன செய்யலாம்? வெளி ஊழியத்திற்காக அந்த நேரத்தை நாம் ஒதுக்கி வைத்திருக்கும்போது நம் மனதையும் அதிலேயே ஈடுபடுத்த வேண்டும் அல்லவா? நாம் செய்யும் பரிசுத்த சேவைக்கு மதிப்பு காட்டும் வகையில், தயவுசெய்து அவசியமற்ற சொந்த வேலைக்கு அல்லது மற்றவர்களுடன் பேசுவதற்கு அந்த சமயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். (ரோ. 12:7) எனினும் இது கூடுதலாக சாட்சி பகருவதற்கு அல்லது அதற்கான நேரத்தை “ஃபிக்ஸ்” செய்வதற்கு ஃபோனை உபயோகிக்கக் கூடாது என அர்த்தப்படுத்துவதில்லை.

முக்கியமாக வாகனம் ஓட்டும்போது செல் ஃபோன்களை உபயோகிப்பதைக் குறித்து கவனமாய் இருக்க வேண்டும்; காரணம், அது விபத்து ஏற்படுவதற்குரிய வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன. வாகனம் ஓட்டுகையில் செல் ஃபோன் உபயோகிப்பதை தடைசெய்யும் எந்தவொரு விதிமுறைக்கும் நாம் கண்டிப்பாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

யெகோவாவை வணங்குவதற்கும் அவரால் கற்பிக்கப்படுவதற்கும் நாம் கிறிஸ்தவ கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றிற்கு வருகிறோம். இந்த நிகழ்ச்சிகளின் பரிசுத்தத்தன்மைக்கு நாம் காட்டும் மதித்துணர்வு, செல் ஃபோன்களும் பேஜர்களும் நம்முடைய அல்லது பிறருடைய கவனத்தை திசைதிருப்பி விடாதபடிக்கு அவற்றை செட் பண்ணி வைக்க நம்மை தூண்ட வேண்டும் அல்லவா? நாம் உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கிய வேலை இருந்தால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே போய் ஃபோனை உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், வணக்கத்திற்கு ஒதுக்கப்படாத மற்ற சமயங்களில் சொந்த வேலைகளையும் வெளி வேலைகளையும் கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.​—⁠1 கொ. 10:24.

செல்லுலர் ஃபோன்களையோ மற்ற எந்தவொரு எலெக்ட்ரானிக் கருவிகளையோ நாம் பயன்படுத்தும்போது எப்போதும் மற்றவர்களை மனதில் வைத்து நடந்துகொள்வோமாக, ஆவிக்குரிய காரியங்களுக்கு ஆழ்ந்த போற்றுதல் காட்டுவோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்