கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை படித்தல்
ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகம், அறிவு புத்தகத்தை படித்து முடித்த பைபிள் மாணாக்கர்களோடு படிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை, சபை புத்தகப் படிப்பில் கலந்தாலோசிப்பது ஊழியத்தில் அதை பயன்படுத்த நம்மை தயார்படுத்தும்; அத்துடன் யெகோவாவிற்கும் அவருடைய அமைப்பிற்குமான அன்பையும் போற்றுதலையும் அதிகரிக்கவும் நமக்கு உதவும். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை படிப்பதிலிருந்து நாம் எவ்வாறு முழுமையாக பயனடையலாம்?
படிப்பை நடத்துதல்: ஒவ்வொரு வாரமும் ஒரு முழு அதிகாரத்தை படிப்போம் என்பதால் புத்தகப் படிப்பு கண்காணிகள் நேரத்தை ஞானமாக பிரித்து செலவிட வேண்டும். ஆரம்ப பாராக்களிலேயே அதிக நேரத்தை செலவிட்டுவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். அப்போதுதான் பொதுவாக அதிகாரத்தின் பிற்பகுதியில் உள்ள அதிமுக்கிய விஷயங்களுக்கு அதிக நேரத்தை செலவிட முடியும். ஒவ்வொரு படிப்பின் முடிவிலும் மறுபார்வை பெட்டியிலுள்ள கேள்விகளை சுருக்கமாக சிந்திப்பது, முக்கிய குறிப்புகளை கூடியிருப்போர் நினைவில் வைக்க உதவும்.
கடவுளை வணங்குங்கள் புத்தகத்தின் ஏறக்குறைய பாதி அதிகாரங்களில், தியானிப்பதற்கும் கலந்தாலோசிப்பதற்குமான கேள்விகள் மார்ஜினிலிருந்து சற்று உள்ளே தள்ளி கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஓர் உதாரணம் 48-9 பக்கங்களில் உள்ளது. பாராக்களை வாசிக்கும்போது அந்தக் கேள்விகளையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. தொகுதியோடு கலந்தாலோசிக்கையில் நேரம் அனுமதிப்பதைப் பொருத்து, கண்காணி அங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை வாசிக்கும்படி சொல்லி, சிந்திக்க வேண்டும்.
முன்கூட்டியே தயாரித்தல்: பதில்களை கோடிடுவது மட்டுமே படிப்பிற்காக நன்கு தயாரிப்பதாக இருக்காது. குறிப்பிடப்பட்ட வசனங்களை ஆழ்ந்து தியானித்தால் நம் பதில்களை மட்டுமல்ல அதி முக்கியமாக நம் இருதயத்தையும் தயார்படுத்த முடியும். (எஸ்றா 7:10, NW) நாம் தாராளமாக பதில் சொல்வதன் மூலம், அதேசமயத்தில் எதற்கெடுத்தாலும் நாமே பதில்களை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்ப்பதன் மூலம் உற்சாகத்தை பரிமாறிக்கொள்வதில் அனைவருமே பங்கெடுக்கலாம்.—ரோ. 1:11, 12, NW.
கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை நாம் படிப்பது யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவும்; அத்துடன் நம்மோடு சேர்ந்து அவரை வணங்க நேர்மை மனமுள்ளவர்களுக்கு உதவவும் நம்மை தயார்படுத்தும். (சங். 95:6; யாக். 4:8, NW) இந்த அருமையான ஆவிக்குரிய ஏற்பாட்டிலிருந்து நாம் அனைவரும் முழுமையாய் பயனடைவோமாக.