அவர்களுக்கு உதவும் வழி
மெய்க் கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பரப்பும் வேலையில் பங்கெடுக்கிறார்கள். (பிலி. 2:17) அதற்கு உதவியாக சில அடிப்படை சிற்றேடுகளும் துண்டுப்பிரதிகளும் கட்டுரைகளும் 20 மொழிகளில் இன்டர்நெட்டில் www.watchtower.org என்ற முகவரியில் உள்ளன. சமீப வெளியீடுகளை யெகோவாவின் சாட்சிகள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த வெப் சைட் உருவாக்கப்படவில்லை. யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து என்ன கற்பிக்கிறார்கள் என்பதைப் பற்றிய திருத்தமான தகவலை பொது மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
சமீபத்தில், நமது அதிகாரப்பூர்வமான வெப் சைட்டில் ஒரு குறிப்பிடத்தக்க பிரசுரம் சேர்க்கப்பட்டுள்ளது. 220-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடே அது. மேலும் 2004, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 8 இதழ்கள் முதற்கொண்டு அனைத்து மொழி காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் கடைசி பக்கத்திலும் நமது வெப் சைட் விலாசம் காணப்படும்.
இந்த சேவையை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்? ஆர்வம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கலாம், அவருக்கோ வேறொரு மொழி மட்டுமே தெரிந்திருக்கலாம். அவருக்கு இன்டர்நெட் வசதி இருந்தால் காவற்கோபுரம், அல்லது விழித்தெழு! பத்திரிகைகளின் கடைசி பக்கத்திலுள்ள வெப் சைட் விலாசத்தைக் காட்டலாம். இவ்வாறு அவருடைய தாய்மொழியில் ஒரு பிரசுரத்தை நீங்கள் கொண்டு போய் கொடுப்பதற்கு முன்பாக அவராகவே தன் மொழியில் வெப் சைட்டிலுள்ள தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை ஆராய்ந்து பார்க்க முடியும். அல்லது அவருடைய மொழி பேசும் சபையோ தொகுதியோ இருந்தால் அவர்கள் போய் அவரை சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.