நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்—வேறு மொழி பேசுவோருக்கு
நம் வெப்சைட்டை அவருக்குக் காட்டுங்கள்: அவருடைய மொழியிலேயே நம் வெப்சைட்டை பார்ப்பதற்கு, “வெப்சைட் மொழி” பட்டியலை எப்படிப் பயன்படுத்தலாம் என அவருக்குக் காட்டுங்கள். (சில மொழிகளில், இந்த வெப்சைட்டின் ஒருசில அம்சங்களை மட்டுமே பார்க்க முடியும்.)
அவருடைய மொழியிலேயே ஒரு வெப்பேஜைக் காட்டுங்கள்: பைபிள் கற்பிக்கிறது புத்தகம் அல்லது உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? துண்டுப்பிரதி போன்ற நம்முடைய பிரசுரங்களிலுள்ள ஒரு பக்கத்தைக் காட்டுங்கள். “இதில் வாசிக்கவும்” பட்டியலிலிருந்து வீட்டுக்காரரின் மொழியைத் தேர்ந்தெடுங்கள்.
ஒரு கட்டுரையின் ஆடியோ பதிவைப் போட்டுக் காட்டுங்கள்: வீட்டுக்காரரின் மொழியில் ஆடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையை போட்டுக் காட்டுங்கள். நீங்கள் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அந்த மொழியில் வாசிக்கும்போதெல்லாம் அதன் ஆடியோ பதிவையும் கேளுங்கள். அப்போது அந்த மொழியை திறம்பட கற்றுக்கொள்ள முடியும்.—இதற்கு, “வெளியீடுகள்/புத்தகங்கள், சிறு புத்தகங்கள்” அல்லது “வெளியீடுகள்/பத்திரிகைகள்” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
காதுகேளாதோருக்கு சாட்சி கொடுங்கள்: காதுகேளாத ஒருவரைச் சந்தித்தீர்களென்றால், பைபிளிலோ, ஒரு புத்தகத்திலோ, ஒரு சிற்றேட்டிலோ உள்ள ஒரு அதிகாரத்தை அல்லது ஒரு துண்டுப்பிரதியை சைகை மொழி வீடியோவில் அவருக்குப் போட்டுக் காட்டுங்கள்.—இதற்கு, “வெளியீடுகள்/சைகை மொழி” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
[பக்கம் 6-ன் படம்]
முயன்று பாருங்கள்
1 ஆடியோ பதிவைக் கேட்க ▸ கிளிக் செய்யுங்கள், ஒரு பிரசுரத்தை டவுன்லோட் செய்ய (உங்கள் மொழியில் இருந்தால்) “டவுன்லோட் ஆப்ஷன்கள்” பட்டன் ஒன்றை கிளிக் செய்யுங்கள்.
2 “இதில் வாசிக்கவும்” பட்டியலிலுள்ள வேறொரு மொழியைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பக்கத்தைக் காட்டுங்கள்.
3 வேறொரு கட்டுரையை அல்லது அதிகாரத்தை வாசிக்க “அடுத்து” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் அல்லது “பொருளடக்கம்” என்ற தலைப்பின் கீழுள்ள கட்டுரைகளை/அதிகாரங்களை கிளிக் செய்யுங்கள்.