நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்—ஊழியத்தில்
நம் வெப்சைட்டை பார்க்கும்படி சொல்லுங்கள்: நம்மிடம் பேசவோ நம் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளவோ சிலர் தயங்கலாம். ஆனால், அவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே jw.org வெப்சட்டில் யெகோவாவின் சாட்சிகளாகிய நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பலாம். எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நம் வெப்சைட்டை பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்: சிலசமயம், வீட்டுக்காரரோ, ஆர்வம் காட்டுபவரோ, பழக்கமான ஒருவரோ நம்மைப் பற்றியும் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அதற்கான பதிலை, உங்கள் செல்ஃபோனில் அல்லது கம்ப்யூட்டரில் சட்டெனக் காட்டுங்கள். வசனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், பைபிளிலிருந்தே அவற்றை வாசித்துக் காட்டுவது நல்லது. இன்டர்நெட் வசதியுள்ள செல்ஃபோன் உங்களிடம் இல்லையென்றால், jw.org வெப்சைட்டை பயன்படுத்தி எப்படிப் பதிலைத் தெரிந்துகொள்ளலாம் என அவர்களுக்கு விளக்குங்கள்.—இதற்கு, “Bible Teachings/Bible Questions Answered” அல்லது “எங்களைப் பற்றி/அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒரு கட்டுரையை அல்லது பிரசுரத்தை அனுப்புங்கள்: டவுன்லோட் செய்யப்பட்ட PDF அல்லது EPUB ஃபைலை ஒரு ஈ-மெயிலில் இணைத்து அனுப்புங்கள். அல்லது, ஒரு பிரசுரத்தின் ஆடியோ பதிவை ஒரு சிடியில் காப்பி செய்து அனுப்புங்கள். ஞானஸ்நானம் பெறாத ஒருவரிடம் எலக்ட்ரானிக் வடிவத்தில் முழு புத்தகத்தையோ, சிற்றேட்டையோ, பத்திரிகையையோ கொடுத்தீர்களென்றால், உங்கள் மாதாந்தர ஊழிய அறிக்கையில் அதையும் நீங்கள் கணக்கிடலாம். உங்களுடைய பெயரைக் குறிப்பிடாமல் ஒருவருக்கு பிரசுரங்களை அனுப்புவதோ ஒரேசமயத்தில் எக்கச்சக்கமாக அனுப்புவதோ கூடாது; அதேசமயம் வேறு எந்த வெப்சைட்டிலும் இவற்றை அப்லோட் செய்யக் கூடாது.— இதற்கு “வெளியீடுகள்” என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய சமீபத்திய செய்திகளைக் காட்டுங்கள்: நம்முடைய உலகளாவிய வேலையைப் பற்றி, நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையைப் பற்றி பைபிள் மாணாக்கர்களும் மற்றவர்களும் நன்கு புரிந்துகொள்ள இந்தப் பகுதி உதவும். (சங். 133:1)—இதற்கு, “News” என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
முயன்று பாருங்கள்
1 “வெளியீடுகள்” என்ற தலைப்பின்கீழ் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்புகிற கட்டுரையைத் தேர்ந்தெடுங்கள்; டெக்ஸ்ட் அல்லது ஆடியோ பதிவு, எது வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள்.
2 ஒவ்வொரு கட்டுரையாகப் பார்க்க, “MP3” பட்டனை கிளிக் செய்யுங்கள். டவுன்லோட் செய்ய கட்டுரையின் தலைப்பை கிளிக் செய்யுங்கள், ஆன்லைனில் ஆடியோ பதிவைக் கேட்க ▸ கிளிக் செய்யுங்கள்.
3 வேறொரு மொழிப் பிரசுரத்தை டவுன்லோட் செய்ய விரும்பினால், இந்தப் பட்டியலிலிருந்து அந்த மொழியைத் தேர்ந்தெடுங்கள்.