நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்—தனிப்பட்ட படிப்பிலும் குடும்பப் படிப்பிலும்
புதிய பத்திரிகையை ஆன்லைனில் வாசியுங்கள்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் சபையில் கிடைப்பதற்குப் பல வாரங்கள் முன்னரே ஆன்லைனில் நீங்கள் அதை வாசிக்கலாம். பத்திரிகைகளின் ஆடியோ பதிவையும் கேட்டு மகிழலாம்.—இதற்கு, “வெளியீடுகள்/பத்திரிகைகள்” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
வெப்சைட்டில் மட்டுமே வெளியாகும் கட்டுரைகளை வாசியுங்கள்: “இளம் வாசகருக்கு,” “பைபிள் சொல்லும் பாடம்,” “குடும்பமாகச் சிந்திக்க,” “இளைஞர் கேட்கும் கேள்விகள்” ஆகிய கட்டுரைகளை இனிமேல் நம் வெப்சைட்டில் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் தனிப்பட்ட படிப்பின்போதும், குடும்பப் படிப்பின்போதும் ஆன்லைனில் இந்தக் கட்டுரைகள் சிலவற்றை வாசியுங்கள்.—இதற்கு, “Bible Teachings/Children” or “Bible Teachings/Teenagers” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்: உற்சாகமூட்டும் அறிக்கைகளையும், அனுபவங்களையும் வாசியுங்கள்; உலகளாவிய நம் வேலையில் ஏற்படும் முன்னேற்றங்களை சிறப்பித்துக் காட்டுகிற சுருக்கமான வீடியோ காட்சிகளைப் பார்த்து மகிழுங்கள். பேரழிவுகள், துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகளை பார்ப்பது அவற்றால் பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்காக ஜெபம் செய்ய நம்மைத் தூண்டும். (யாக். 5:16)—இதற்கு, “News” என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.
ஆராய்ச்சி செய்து படிக்க ஆன்லைன் லைப்ரரி. இது உங்கள் மொழியில் கிடைக்குமென்றால் கம்ப்யூட்டரிலோ செல்ஃபோனிலோ தினவசனத்தை நீங்கள் ஆன்லைனில் வாசிக்கலாம். அல்லது அதில் சமீபத்திய பிரசுரங்கள் சிலவற்றில் ஆராய்ச்சி செய்யலாம்.—இதற்கு, “வெளியீடுகள்/ஆன்லைன் லைப்ரரி” என்ற தலைப்புகளை கிளிக் செய்யுங்கள். அல்லது www.wol.jw.org என்று டைப் செய்யுங்கள்.
[பக்கம் 4-ன் படம்]
முயன்று பாருங்கள்
1 படத்தின்மீது அல்லது “டவுன்லோட்” என்பதன் கீழுள்ள தலைப்புகளின்மீது கிளிக் செய்யுங்கள். PDF டாக்குமென்ட் வின்டோவில் படம் தெரியும். அதை ப்ரின்ட் எடுத்து, உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து, அதில் எழுதவோ வரையவோ சொல்லுங்கள்.
2 ஒரு வீடியோவைப் பார்க்க “Play” என்பதை கிளிக் செய்யுங்கள்.