வட்டார மாநாட்டு நிகழ்ச்சியின் மறுபார்வை
2005 ஊழிய ஆண்டுக்கான வட்டார மாநாட்டு நிகழ்ச்சியைக் குறித்த கண்ணோட்டத்தைப் பெறவும் அதை மறுபார்வை செய்யவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படும். இது கையாளப்பட வேண்டிய விதத்தை இந்த உட்சேர்க்கையில் பக்கம் 4-ல் காணப்படும் “மாநாட்டு நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வதற்கான புதிய ஏற்பாடு” என்ற கட்டுரை விவரிக்கிறது. மறுபார்வையின்போது, எல்லா கேள்விகளையும் கலந்தாலோசிப்பதற்கு ஏற்றவாறு நேரத்தை சரிவர பிரித்துக்கொள்ளுங்கள். அளிக்கப்பட்ட தகவலை நாம் எப்படி பொருத்தலாம் என்பதை இந்த மறுபார்வை வலியுறுத்த வேண்டும்.
முதல் நாள் காலை [அல்லது பிற்பகல்] நிகழ்ச்சி
1. கடவுள் தரும் ஞானத்தைப் பெற எது நமக்கு உதவும்?
2. அநேகருக்கு நற்செய்தியை அறிவிக்க இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள் என்னென்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றனர்?
முதல் நாள் பிற்பகல் [அல்லது மாலை] நிகழ்ச்சி
3. கிறிஸ்தவர்கள் மன ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாக இருப்பது ஏன் முக்கியம்? இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
4. நம் சகோதரர்களிடம் சமாதானமாய் இருப்பதை நாம் எப்படி காண்பிக்கலாம்?
5. நியாயத்தன்மை என்பது என்ன, நம் நேரத்தை உபயோகிக்கும் விதத்தில் இதை எப்படி காண்பிக்கலாம்?
6. சவுல் மற்றும் நோவாவின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் ‘கீழ்ப்படிய தயாராய்’ இருக்கிறோம் என்பதை எந்த வழிகளில் காட்டலாம்? (யாக். 3:17)
7. இரட்டை வாழ்க்கை வாழ்வதற்கு எதிராக கிறிஸ்தவர்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளலாம்?
8. கடவுளுடைய ஞானத்தைப் பற்றி பேசுவதில் பவுலின் உதாரணத்தை நாம் எப்படி பின்பற்றலாம்?
இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சி
9. நாம் விரும்பும் காரியங்களை தெரிவு செய்வதில் ஏன் கவனமாக இருக்க வேண்டும், அப்படிச் செய்ய எது நமக்கு உதவும்?
10. வட்டாரத்தில் உள்ளவர்கள் தவறாமல் கூட்டங்களுக்கு வருவதற்கு என்னென்ன முயற்சிகளை எடுக்கின்றனர், அதனால் எவ்வாறு பயனடைந்திருக்கின்றனர்?
11. குடும்பத் தலைவர்கள் தங்கள் வீட்டாருக்கு எவ்வாறு ஞானத்தை புகட்டலாம்?
12. வட்டாரத்தின் என்னென்ன தேவைகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன?
இரண்டாம் நாள் பிற்பகல் நிகழ்ச்சி
13. பொதுப் பேச்சில் குறிப்பிடப்பட்டபடி, பரத்திலிருந்து வரும் ஞானம் என்ன நீதியான செயல்களை நடப்பித்திருக்கிறது?
14. நம் மீதே நம்பிக்கை வைப்பதோ, கடவுளுடைய ஞானத்தால் வழிநடத்தப்படாதவர்கள் மீது நம்பிக்கை வைப்பதோ ஏன் முட்டாள்தனமானது? எந்தெந்த விஷயங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்?
15. என்னென்ன படுகுழிகளிலிருந்து கடவுளுடைய ஞானம் நம்மை காக்கிறது?
16. வட்டார மாநாட்டில் அளிக்கப்பட்ட ஆலோசனையை நம் வாழ்க்கையில் பொருத்துவது ஏன் முக்கியம்?