வட்டார மாநாட்டு நிகழ்ச்சியின் மறுபார்வை
2006 ஊழிய ஆண்டுக்கான வட்டார மாநாட்டில் சபையார் கலந்துகொள்வதற்கு முன்னரும் பின்னரும் ஊழியக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்தாலோசிப்பதற்கு இந்தத் தகவல் பயன்படுத்தப்படும். டிசம்பர் 2004, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ல் குறிப்பிடப்பட்டபடி, மாநாட்டிற்கு முன்னரும் பின்னரும் இதைக் கலந்தாலோசிப்பதற்கு நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்வார். இந்த மறுபார்வையின்போது எல்லா கேள்விகளையும் கேட்க வேண்டும், பேச்சுகளில் கொடுக்கப்பட்ட தகவலை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம் என்பதன் மீது கவனத்தை ஊன்ற வைக்க வேண்டும்.
முதல் நாள் நிகழ்ச்சி
1. புதிய ஆள்தன்மையை நாம் எப்படித் தரித்துக்கொள்கிறோம், அதை ஏன் நாம் காத்துக்கொள்ள வேண்டும்?
2. பிரசங்க வேலையில் இன்னும் அதிகமாக ஈடுபடுவதற்கு சிலர் என்ன செய்திருக்கிறார்கள்?
3. மற்றவர்களோடு நம்மை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது?
4. குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு புதிய ஆள்தன்மையை காட்டலாம்?
5. நாம் எவ்வாறு சபையை உண்மைத்தன்மையுடன் ஆதரிக்கலாம்?
6. வெளி ஊழியத்தில் புதிய ஆள்தன்மையைக் காட்டுவது ஏன் அவசியம்?
7. சரியாக தியானிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, அவ்வாறு தியானிப்பதிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
8. யெகோவாவின் கரங்களில் நாம் வடிவமைக்கப்படுவதற்கு என்னென்ன குணங்கள் உதவும்?
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
9. நாவை சரியாக உபயோகிப்பது எந்தளவு முக்கியம்?
10. வேலை செய்பவர்களுடனும், பள்ளித் தோழர்களுடனும், மற்றவர்களுடனும் நல்ல பேச்சைப் பேசும்போது நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
11. சகவிசுவாசிகளுடன் பழகும்போது, எபேசியர் 4:25-32-லுள்ள பவுலின் புத்திமதியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
12. நம்முடைய நாவை எவ்விதத்தில் கண்ணியமாக பயன்படுத்தலாம்?
13. பொல்லாங்கனை ஜெயிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
14. எந்தெந்த அம்சங்களில் உலகத்தால் கறைபடாதபடி நம்மை காத்துக்கொள்ள முயல வேண்டும்?
15. உள்ளான மனிதனை நாம் ஏன் தினந்தோறும் புதுப்பிக்க வேண்டும், இதை எவ்வாறு செய்யலாம்?
16. இந்த வருட வட்டார மாநாட்டு நிகழ்ச்சியிலிருந்து எந்தப் புத்திமதியைப் பின்பற்ற திட்டமிட்டிருக்கிறீர்கள்?