யெகோவாவின் அதிகாரத்திற்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்
கோராகு, தாத்தான், அபிராம் ஆகிய பூர்வகால பெயர்களைக் கேட்டவுடன் எது உங்கள் நினைவிற்கு வருகிறது? கலகம்! எதற்கு எதிராக கலகம்? கடவுளின் அதிகாரத்திற்கு எதிராக கலகம். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கோர சம்பவம் பற்றிய விவரங்கள் எண்ணாகமம் 16-ம் அதிகாரத்தில் பதிவாகியுள்ளன; அதன் சுருக்கம், ஆகஸ்ட் 1, 2002 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருங்கள்” என்ற கட்டுரையில் காணப்படுகிறது. நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்த பின்பு, யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள் என்ற ஆங்கில வீடியோவில் அது சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்திலிருந்து பயனடைவீர்கள். சர்வலோகப் பேரரசருக்கு எதிராக கலகம் செய்த கோராகுக்கும், உண்மையுடன் நிலைத்திருந்த அவனது குமாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைப் பற்றி அறிந்துகொள்வீர்கள். (எண். 26:9-11) நாம் அனைவரும் யெகோவாவுக்கு முழுமையாக உண்மைப்பற்றுறுதியை காட்டுமாறு இந்த நிஜ சம்பவ நாடகம் நம்மை உந்துவிக்க வேண்டும்.
நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கையில், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் ஆறு அம்சங்களில் தங்கள் உண்மைப்பற்றுறுதியைக் காட்ட தவறினார்கள் என்பதற்கான அத்தாட்சியை கண்டுபிடியுங்கள்: (1) யெகோவாவின் அதிகாரத்தை அவர்கள் எவ்வாறு அவமதித்தார்கள்? (2) பெருமையும், பேராசையும், பொறாமையும் தங்கள் மீது செல்வாக்கு செலுத்த அவர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள்? (3) யெகோவா நியமித்தவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள் மீதே அவர்கள் எவ்வாறு கவனம் செலுத்தினார்கள்? (4) எப்படிப்பட்ட குறைகூறும் மனப்பான்மையை அவர்கள் வளர்த்திருந்தார்கள்? (5) தங்களுடைய ஊழிய சிலாக்கியங்களில் ஏன் அதிருப்தி அடைந்தார்கள்? (6) யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவதைவிட நண்பர்களையும் குடும்பத்தாரையும் எந்தளவு முக்கியமாக கருதினார்கள்?
இந்த பைபிள் நாடகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள், இன்று கடவுளின் அதிகாரத்திடம் நமக்குள்ள கண்ணோட்டத்துடன் எப்படி பொருந்துகிறது என்பதை கலந்தாலோசியுங்கள்: (1) சபையில் மூப்பர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும், ஏன்? (2) நமக்குள் இருக்கும் எந்தவொரு தவறான உள்நோக்கத்தையும் நாம் எப்படி மாற்றிக்கொள்ளலாம்? (3) முன்னின்று நடத்துவதற்கென நியமிக்கப்பட்டிருப்பவர்களின் அபூரணத்தை நாம் எப்படி கருத வேண்டும்? (4) குறைகூறும் மனப்பான்மை நம் இருதயத்தில் துளிர்க்க ஆரம்பித்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? (5) நமக்கு ஏதாவது சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை எப்படி கருதுகிறோம்? (6) கடவுளுக்கு உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவதைவிட வேறு யாரை முக்கியமாக கருதிவிடக் கூடாது, இது எப்போது நமக்கு ஒரு கடும் சோதனையாக ஆகலாம்?
இந்தத் தகவலை சபையில் கலந்தாலோசித்த பிறகு, இதே வீடியோவை மறுபடியும் பார்க்கலாம் அல்லவா? நாம் எப்பொழுதும் யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்ட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்கள் மனதில் இன்னும் நன்கு பதியட்டும்!—சங். 18:25, NW; 37:28, NW.