சத்தியத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்
1 நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், நம் பிராந்தியத்தில் வசிக்காத ஆட்களை அடிக்கடி சந்திக்கிறோம், அல்லது சைகை மொழியோ வேறொரு மொழியோ பேசுபவர்களைச் சந்திக்கிறோம். அதே சமயத்தில், நம்மோடு பைபிளைப் பற்றி நன்கு கலந்துரையாடினவர்கள் நம் பிராந்தியத்தை விட்டு வேறொரு இடத்திற்கு குடிமாறிச் சென்றுவிடலாம். இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள நாம் எப்படி ஏற்பாடு செய்யலாம்? ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) என்ற படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்பாடு செய்யலாம்.
2 நற்செய்தியை மக்களின் தாய்மொழியில் சொல்லும்போது அவர்கள் பொதுவாக கூர்ந்து கவனிக்கிறார்கள். (அப். 22:1, 2) எனவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேறொரு மொழி பேசும் எவரையாவது நாம் சந்திக்கையில், அவர் ராஜ்ய செய்தியில் ஆர்வம் காட்டாவிட்டாலும் அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். என்றாலும், அவர் வசிக்கும் பகுதியில் அவருடைய மொழியிலேயே தவறாமல் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வந்தால், அவர் ஆர்வம் காட்டினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.
3 படிவத்தைப் பூர்த்தி செய்தல்: அந்த நபரின் பெயர், விலாசம், தொலைபேசி எண் ஆகிய விவரங்களை சாதுரியமாகக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர் எந்தளவு ஆர்வமுள்ளவராக இருக்கிறார், அவரை எப்போது போய் சந்திக்கலாம், அவருக்கு என்ன பிரசுரம் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது அவர் என்ன பிரசுரத்தைக் கேட்டிருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடுங்கள். அவருக்கு நன்கு தெரிந்த மொழியையும் குறிப்பிடுங்கள். அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, சபை செயலரிடம் அதை உடனே கொடுத்துவிடுங்கள். அவர் பொருத்தமான சபைக்கு அல்லது தொகுதிக்கு அதை அனுப்பி வைப்பார்.
4 படிவத்தை அனுப்பி வைத்தல்: எந்தச் சபைக்கு அல்லது தொகுதிக்கு அனுப்புவதென்று செயலருக்குத் தெரியாவிட்டால் அல்லது அதன் முகவரி அவரிடம் இல்லாவிட்டால், கிளை அலுவலகத்திலுள்ள ‘டெரிட்டரி டெஸ்க்கிற்கு’ அவர் ஃபோன் செய்து தெரிந்துகொள்ளலாம். அதை அனுப்புவதைக் குறித்து நகரக் கண்காணியிடம் இனி தெரிவிக்க வேண்டியதில்லை.
5 ஒரு சபையோ தொகுதியோ இத்தகைய ப்ளீஸ் ஃபாலோ அப் படிவத்தைப் பெறுகையில், அதில் குறிப்பிடப்பட்ட நபரை உடனே போய் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நம் பங்கை ஊக்கத்துடன் செய்கையில், யெகோவா ‘நித்திய ஜீவனுக்காக சரியான மனச்சாய்வு’ உள்ளவர்களின் இருதயத்தைத் திறப்பார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—அப். 13:48, NW.